Home
News

LPG கேஸ் சிலிண்டர் விஷயத்தில் வந்தது புதிய விதிமுறை.. கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

வீடுகளில் எல்பிஜி (LPG) சிலிண்டருக்கு பிறகு தற்போது குழாய்வழி எரிவாயு (PNG) இணைப்பைப் பெறும் நுகர்வோருக்கு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது புதிய விதிகளின் கீழ், ஒரு வீட்டு உபயோக நுகர்வோர் பிஎன்ஜி எரிவாயு இணைப்பைப் பெற்றால், அவருக்கு இப்போது பின்வரும் இரண்டு தேர்வுகள் உள்ளன.

1. பிஎன்ஜி இணைப்பு செயல்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய எல்ஜிபி இணைப்பை முழுமையாக மூடுவதற்கு எரிவாயு முகமையிடம் விண்ணப்பிக்கலாம்.

LPG கேஸ் சிலிண்டர் விஷயத்தில் வந்தது புதிய விதிமுறை..

2.ஒருவேளை வாடிக்கையாளர் எல்பிஜி இணைப்பை துண்டிக்க விரும்பவில்லை என்றால், அவர் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு சிறப்பு மாற்றுச் சீட்டைப் பெறலாம். இந்தச் சீட்டு எதிர்காலத்தில் அவர்களின் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதை எளிதாக்கும்.

மாற்றுச் சீட்டு (transfer voucher) பயன்கள் என்னென்ன?
நகரங்களில் இருக்கும் மக்கள் பிஎன்ஜி இணைப்பைப் பெறும்போது அவர்கள் தங்களது பழைய எல்பிஜி சிலிண்டரை ஒப்படைப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஒரு சிறிய நகரம், ஊர் அல்லது பிஎன்ஜி குழாய்கள் இல்லாத பகுதிக்கு மாறும்போது ஒரு புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு நீண்ட ஆவணப் பணிகளையும் கணிசமான செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

ஆகவே தான் அரசின் புதிய மாற்றுச் சீட்டு விதி இந்த சிரமத்தை நிரந்தரமாக நீக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இந்த சீட்டை காண்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இல்லாத பகுதிகளில் தங்களது எல்பிஜி இணைப்பை அதிக சிரமம் இல்லாமல் உடனே மீண்டும் செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதுதவிர சிலிண்டர் விஷயத்தில் அரசு தொடர்ந்து பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதாவது ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இனி எல்பிஜி சிலிண்டர் மானியம் வழங்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை ஆய்வு செய்து அதில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தும் எல்ஜிபி சிலிண்டருக்கான மானியத்தைப் பெறுவோருக்கு அது ரத்து செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சிலிண்டர் விநியோக நிறுவனங்களே வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றன.

LPG கேஸ் சிலிண்டர் விஷயத்தில் வந்தது புதிய விதிமுறை..

ஒரு கட்டத்தில் 300 ரூபாயாக இருந்த மானியம் தற்போது மிகவும் குறைந்த அளவாக மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மானியம் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு வருமான அடிப்படையிலான கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தது. அதன்படி, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், அந்த குடும்பத்திற்கு எல்பிஜி மானியம் வழங்கப்படாது என்று தெரிவித்திருந்தது.

மேலும் சமீபத்தில் எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், சிலிண்டர் புக்கிங் விதிகளிலும் அரசு மாற்றம் செய்துள்ளது. அதாவது நகரங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் ஒருமுறைதான் ரீஃபில் செய்ய முடியும். இந்த விதியால், இனிமேல் வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது. அதேபோல் நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது DAC எனப்படும் delivery authentication code என்ற டெலிவரி அங்கீகாரக் குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபியாக வரும். அதை சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் சமயத்தில் அந்த ஓடிபி-ஐ பகிர்ந்தால் மட்டுமே உங்கள் கைக்கு சிலிண்டர் வரும்.

Best Mobiles in India

English summary
PNG Users Can Now Reclaim Their LPG Connection Under New Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X