புது LPG ரூல்ஸ்.. ஜூன் 1 முதல் அமல்.. எல்ஜிபி கேஸ் சிலிண்டர் பெறுவதில் மாற்றம்.. இதை தெரிஞ்சுக்கோங்க முதல்ல!
இந்தியாவில் நிலவி வரும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) தட்டுப்பாட்டைச் சீர்செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வரும் நிலையில், இரட்டை கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கான கெடு ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிகிறது.
உங்களிடம் ஒரே முகவரியில் எல்பிஜி (LPG) சிலிண்டர் மற்றும் குழாய் வழி கேஸ் (PNG) என இரண்டுமே இருந்தால், வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஏதேனும் ஒன்றை நீங்களாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டும். தவறினால், இரண்டுமே ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. மேலும், புதிய எல்பிஜி விதிகள் (New LPG Rules) ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலிண்டர் புக் செய்ய புதிய காலக் கெடு (Lock-in Period): கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, அடுத்தடுத்த சிலிண்டர் புக்கிங்கிற்கான கால இடைவெளி மாற்றப்பட்டுள்ளது. இனி நகரப் புறங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒருமுறையும், கிராமப் புறங்களில் உள்ளவர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும் மட்டுமே அடுத்த சிலிண்டரை புக் செய்ய முடியும். இதற்கு முன்பு இந்த இடைவெளி 21 நாட்களாக இருந்தது.
ஆட்டோமேட்டிக் புக்கிங் பிளாக் (Booking Block): உங்கள் பகுதியில் குழாய் வழி கேஸ் (PNG) கட்டமைப்பு வசதி இருந்தும், நீங்கள் இன்னும் எல்பிஜி சிலிண்டரையே பயன்படுத்தி வந்தால், புதிய விதிகளின்படி உங்களது சிலிண்டர் புக்கிங் தானாகவே பிளாக் செய்யப்படும். புதிதாக பிஎன்ஜி (PNG) இணைப்பு பெறுபவர்கள், இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள் தங்களது பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பை ரத்து செய்ய வேண்டும்.
இதையே நுகர்வோர் விநியோக திருத்தச் சட்டம் 2026 கூறுகிறது. ஆகவே, ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த விதிகள் அமலுக்கு வந்தால், ஜூன் 30ஆம் தேதிக்குள் ஒரு கேஸ் இணைப்பை கட்டாயம் ஒப்படைக்க வேண்டி இருக்கும். இதை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் செய்யலாம். எல்பிஜி இணைப்பு அல்லது பிஎன்எஜி இணைப்பு இதில் எதை ஒப்படைக்க வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும்.
அபராதம் மற்றும் ரத்து நடவடிக்கையைததவிர்க்க ஆன்லைனிலேயே எளிதாக ஒன்றை ஒப்படைக்கலாம். எல்பிஜி சிலிண்டரை ஒப்படைக்க உங்கள் கேஸ் நிறுவனத்தின் (Indane, Bharat Gas, HP Gas) ஆப் அல்லது இணையதளத்திற்குச் சென்று, சரண்டர் கனெக்சன் (Surrender Connection) என்பதைத் தேர்வு செய்து, ஓடிபி (OTP) மூலம் சரிபார்ப்பை முடித்து ஒப்படைக்கலாம்.
குழாய் வழி (PNG) இணைப்பை ஒப்படைக்க, மத்திய அரசின் பிரத்யேக MYPNGD இணையதளத்திற்குச் சென்று, மொபைல் எண் மற்றும் நுகர்வோர் எண் மூலம் லாகின் செய்து துண்டிப்புக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். ஒருவேளை எதிர்காலத்தில் நீங்கள் பிஎன்ஜி வசதி இல்லாத வேறு இடத்திற்கு மாறினால், இந்த எல்பிஜி இணைப்பை மீண்டும் எளிதாகப் பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பிஎன்ஜி இணைப்பு வைத்திருப்பதால், எல்பிஜி இணைப்பு சரண்டர் செய்ய பிறகு, புதிய முகவரிக்கு மாறும்போது, அங்கு எளிதில் மீண்டும் எல்பிஜி இணைப்பை பெறுவதற்கு முந்தைய ஏஜென்சியிடம் இருந்து டிரான்ஸ்பர் சர்டிபிகேட் (Transfer Certificate) பெற்று கொள்ளலாம். புதிய முகவரியை 3 மாதங்களுக்குள் இதை தெரிவித்து பெற்று கொள்ளலாம்.
மேலும், இ-கேஒய்சி (e-KYC) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலி இணைப்புகளைத் தடுக்க, அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது ஆதார் கார்டு மூலம் பயோமெட்ரிக் அல்லது e-KYC சரிபார்ப்பை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே நபர் வெவ்வேறு நிறுவனங்களில் தன் பெயரில் இணைப்பை வைத்திருந்தால், உடனடியாக மானியம் நிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications