இருமிட்டு இங்கிலீஸ்ல பேசுனா என்ன புரியும்- காலர் டியூன் தமிழில் கேட்கனும்:மத்திய அரசுக்கு வேண்டுகோள்

|

மத்திய அரசின் செயலை பாராட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், கொரோனா விழிப்புணர்வு செய்தி ஆங்கிலகத்தில் வருவதால் முழுமையாக பலனளிக்காது எனவும் அதை தமிழில் ஒலிபரப்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருமல் சத்தம் கேட்டால் அச்சம் வேண்டாம்

இருமல் சத்தம் கேட்டால் அச்சம் வேண்டாம்

சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் மொபைல் எண்களுக்கு தொடர்பு கொள்ளும்போது இருமல் சத்தம் கேட்டால் அச்சம் கொள்ள வேண்டாம். இதோ அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா

மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

ரொம்ப டைமிங் மிஸ் பண்றிங்க: வேற வழியின்றி Vodafone செய்த காரியம்!ரொம்ப டைமிங் மிஸ் பண்றிங்க: வேற வழியின்றி Vodafone செய்த காரியம்!

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு

இதில் ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது

31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது

சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளது.

புதியரக ஹெல்மெட்

புதியரக ஹெல்மெட்

புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று மிகக்குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி புதிதாக 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா நோயாளிகளை கண்டறியும் வகையில் சீனாவில் புதிய ரக ஹெல்மெட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை

இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நாட்டு அரசாலும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம்

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம்

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்கிறதா ஒருவருக்கு போன் செய்ததும் ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்டால் அச்சம் கொள்ள வேண்டாம். பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த செயல்படுத்தப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும்.

கொரோனா பாதிக்காமல் இருக்க நடவடிக்கை

கொரோனா பாதிக்காமல் இருக்க நடவடிக்கை

பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் காலர் டியூனில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கை மூலம் எந்த நெட்வொர்க்கில் இருந்து அழைப்பை மேற்கொள்வோரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என கருதப்படுகிறது.

பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவில் அறிமுகம்

பிஎஸ்என்எல் மற்றும் ஜியோவில் அறிமுகம்

கொரோனா வைரஸ் பாதிப்படையாமல் இருக்க பொது மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய தகவல் பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைப்புகளில் மத்திய அரசு தானாக செயல்படுத்தி இருப்பதாக சுகாதாக துறை அதிகாரி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்பது கேள்வியாக உள்ளது.

விழிப்புணர்வு செய்தியை தமிழில் வழங்க வேண்டும்

விழிப்புணர்வு செய்தியை தமிழில் வழங்க வேண்டும்

இந்த நிலையில் கொரானா வைரஸ் குறித்து செல்போன் காலர் டியூன்கள் மூலம் வரும் விழிப்புணர்வு செய்தியை தமிழிலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து

டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், செல்போனில் ஆங்கிலத்தில் மட்டுமே விழிப்புணர்வு செய்தி இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்த விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது என பாராட்டு தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

விழிப்புணர்வு செய்தி முழுமையாக பயனளிக்காது

நாட்டின் கடைகோடியில் வசிக்கும் மக்கள் கூட செல்போன்களை பயன்படுத்துவதால் ஆங்கிலத்தில் வழங்கும் விழிப்புணர்வு செய்தி முழுமையாக பயனளிக்காது எனவும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் கொரானா விழிப்புணர்வு செய்தியை செல்போன் காலர் டியூன்களில் ஒலிக்க செய்ய வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
PMK Ramadoss appeals to government on corona awareness caller tunes in tamil voice

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X