பிரதமர் மோடி புதிய உச்சம்: இத்தனை மில்லியன் பேர் பின்தொடர்கிறார்களா?

|

உலகளவில் டுவிட்டர் கணக்கில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட அரசியல் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் பிரதமர் மோடி டுவிட்டர் கணக்கு ஃபாலோவர்கள் எண்ணிக்கை 6 கோடிக்கும் மேல் கடந்துள்ளது.

பெரும்பாலானோர் மத்தியில் மிகவும் பிரபலமானவை

பெரும்பாலானோர் மத்தியில் மிகவும் பிரபலமானவை

சமூகவலைதளம் என்பது இப்போது பெரும்பாலானோர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதில் அரசியல் தலைவர், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் நேரடியாக பதிவிட்டு வருகின்றனர்.

தங்களுக்கென தனிக் கணக்கு

தங்களுக்கென தனிக் கணக்கு

சமூகவலைதளங்களில் அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் தங்களுக்கென தனிக் கணக்கு வைத்திருப்பது வழக்கம். இதில்தான் அவர்கள் தங்களது கருத்துகளை நேரடியாக பதிவிட்டு வருகின்றனர். உடனடி நிகழ்வுகளை நேரடியாக பதிவிடுவதன் மூலம் மக்களும் அரசியல்தலைவர்களின் அப்போதைய நிகழ்வுக்கான கருத்து என்ன என்று அறிந்துக் கொள்ள முடிகிறது.

டுவிட்டர் பக்கம்

டுவிட்டர் பக்கம்

சமூகவலைதளங்களில் பிரதானமாகவும் முக்கிய கருத்துகள் வெளிவருவதும் டுவிட்டர் பக்கத்தில்தான். அந்த டுவிட்டர் பக்கத்தில் பாலோவர்கள் அதாவது பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை காட்டப்படும். இதில் பிரதமர் மோடியின் பாலோவர்கள் குறித்தும் டுவிட்டர் கணக்கு குறித்தும் பார்க்கலாம்.

பிரதமர் மோடி டுவிட்டர் கணக்கு

பிரதமர் மோடி டுவிட்டர் கணக்கு

இளையதலைமுறையினரின் கவனத்தை ஈர்க்க 2009 ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக இருந்த போது பிரதமர் மோடி டுவிட்டர் கணக்கை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றதில் நரேந்திர மோடியின் புகழ் பெருமளவு வளர்ந்து உலகளவில் பேசப்படும் தலைவர்களில் ஒருவராக மாறினார்.

முடிந்தது சலுகை- இனி அந்த இலவசமும் கிடையாது: ஏர்டெல் பயனர்களுக்கு அடுத்த இடி!முடிந்தது சலுகை- இனி அந்த இலவசமும் கிடையாது: ஏர்டெல் பயனர்களுக்கு அடுத்த இடி!

பல்வேறு வகையிலான டிஜிட்டல் முறை

பல்வேறு வகையிலான டிஜிட்டல் முறை

பிரதமர் மோடியின் பல்வேறு குறிக்கோளில் பிரதானமானவை டிஜிட்டல் இந்தியா அறிவிப்பாகும். அந்த ஆட்சி காலத்தில் பல்வேறு வகையிலான டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தினார். பிரதமராக மோடி பதிவேற்றியதில் இருந்து பல்வேறு அமைச்சர்களும் டுவிட்டரை பிரதானமாக முன்னிருத்தினர். டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை என அடுத்தடுத்து அறிமுகம் கொண்டு வந்து பிரதானமாக்கப்பட்டது.

டுவிட்டரில் வெளியான பல்வேறு தகவல்கள்

டுவிட்டரில் வெளியான பல்வேறு தகவல்கள்

அதேபோல் பொதுமக்களும் பல்வேறு புகார்களை அரசியல் தலைவர்களுக்கு நேரடியாக டுவிட்டர் மூலம் அறிவித்தனர். இதுவரை டுவிட்டரில் வெளியான பல்வேறு முக்கிய தகவல்கள் முக்கிய செய்திகளாக நாட்டை உலுக்கிய நிகழ்வும் உள்ளது.

 6 கோடியை கடந்த டுவிட்டர் கணக்கு

6 கோடியை கடந்த டுவிட்டர் கணக்கு

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. டுவிட்டரில் அதிகம் பின்தொடரப்பட்டும் இந்தியராக பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். டுவிட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் சமீபத்திய கணக்குப்படி 6,00,35,976 பேரை கடந்துள்ளது.

நரேந்திர மோடி 3ஆம் இடம்

நரேந்திர மோடி 3ஆம் இடம்

உலகளவில் டுவிட்டர் கணக்கில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட அரசியல் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 3ஆம் இடத்தில் இருக்கிறார் என்பதும், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதல் இடத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Pm narendra modi twitter account crosses 6 crore

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X