இந்தியாவிற்கு தனி பாசத்தை காட்டிய சுந்தர் பிச்சை.! ரூ.75,000கோடி.! மோடி கூறியது என்ன?

|

மோடி அவர்கள் அன்மையில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுந்தர் பிச்சையும் நானும் உரையாடினோம், மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது என்று மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

 5ஆண்டுகளில்

பின்பு இந்தியாவில் அடுத்த 5ஆண்டுகளில் ரூ.75,000கோடி அளவிற்கு முதலீடு செய்வதற்கு கூகுள் நிறுவனம் தயாராக இருப்பதாகசுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தாக்க முதல் இந்திய விவசாயிகள், இளைஞர்கள்,தொழில்முனைவோர்,
தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து சுந்தர் பிச்சை அவர்களும்,மோடி அவர்களும் பேசியுள்ளனர்.

ஜிட்டல் மயமாக்களில் கூகுளின்

குறிப்பாக உரையாடலின்போது டேட்டா, பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு குறித்து பேசினோம், அப்போது கல்வி கற்பித்தல், டிஜிட்டல்மயமாக்களில் கூகுளின் வியத்தகு முயற்சிகள் குறித்து வியப்படைந்தேன் என்று மோடி அவர்கள் பதிவிட்டுள்ளார்.

ஏர்டெல் வரம்பற்ற டேட்டா உள்ளிட்ட அட்டாச திட்டம்: லிஸ்ட்ல நம்ம ஊரும் இருக்கு!ஏர்டெல் வரம்பற்ற டேட்டா உள்ளிட்ட அட்டாச திட்டம்: லிஸ்ட்ல நம்ம ஊரும் இருக்கு!

ரூ.75,000கோடி அளவிற்கு

மேலும் கூகுள் பார் இண்டியா என்ற தலைப்பில் நடந்து வரும் கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பிரதமருடன் உரையாடிய பின்னர் பதிவிட்டு இருக்கும் கூகுள்தலைமை நிர்வாகி அதிகாரி சுந்தர் பிச்சை இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்தும் நோக்கத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.75,000கோடி அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்

அவர்கூறிய இந்த திட்டத்தின் கீழ் தமிழ், இந்தி, பஞ்சாப் என்று அனைத்து மொழிகளிலும் மக்களுக்கு டிஜிட்டல் வழியாக தகவல் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் இணையதள வசதி கிடைக்க வேண்டும் எனவும், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப புதிய டிஜிட்டல் தயாரிப்புகளை ஏற்படுத்துதல், சேவைகளை அறிமுகம் செய்வது, வர்த்த நிறுவனங்களுக்கு தொழிலில் டிஜிட்டல் வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது, சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் ஏற்படுத்துதல் ஆகியவற்றிக்கு இந்தமுதலீடு பயன்படுத்தப்படும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

இல்லாமல் உலக

தற்சமயம் இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் பெரிய சாவல்களை சுகாதாரம், பொருளாதாராம் ஆகியவற்றில் சந்தித்து வருகிறது. பின்பு இந்த சாவல்களில் இருந்துதான் புதிய கண்டுபடிப்புகளை நாம் கண்டறிய வேண்டும்.

கண்டுபிடிப்புகள் மூலம் இந்தியா

பின்பு புதிய கண்டுபிடிப்புகள் மூலம் இந்தியா சிறந்த வழிகாட்டியாக உலக நாடுகளுக்கு இருக்கும் நாம் ஒன்றிணைந்து உழைத்தால் சிறந்த நாட்கள் நம்மை எதிர்நோக்கி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை என சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
PM Narendra Modi Shares The Fruitful Conversation Between Him And Sundar Pichai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X