உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?

|

பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் 1 கோடி சந்தாதாரர்களை கடந்துள்ளது. உலகத் தலைவர்கள் மிக அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட சேனலாக பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் உருவெடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல்

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல்

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் செவ்வாய்கிழமை (நேற்று) 1 கோடி சந்தாதாரர்களை கடந்தது. உலகத் தலைவர்களில் அதிக சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட யூடியூப் சேனலாக நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் உருவெடுத்திருக்கிறது. பிரதமர் மோடியின் யூடியூப் சேனலுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருப்பது பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் யூடியூப் சேனல் ஆகும். இந்த யூடியூப் சேனல் மொத்தம் 36 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. இதற்கு அடுத்ததாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடோரின் யூடியூப் சேனல் ஆகும். இந்த யூடியூப் சேனல் 30.7 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது.

அடுத்த இடத்தில் இருப்பவர்களின் விவரங்கள்

அடுத்த இடத்தில் இருப்பவர்களின் விவரங்கள்

உலகளாவிய சந்தாதாரர்களில் இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர் இந்தோனேசியா அதிபரின் ஜோகோ விடோடா ஆவார். இவரது யூடியூப் சேனல் 28.8 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. தொடர்ந்து வெள்ளை மாளிகையின் யூடியூப் சேனல் ஆனது 19 லட்சம் சந்தாதாரர்களையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் யூடியூப் சேனல் 7.03 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டு பின்தங்கிய நிலையில் இருக்கிறது. பிற தேசிய தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் அதிக எண்ணிக்கை வித்தியாசத்துடன் முன்னிலையில் இருக்கிறது.

தேசிய தலைவர்களின் யூடியூப் சேனல்கள்

தேசிய தலைவர்களின் யூடியூப் சேனல்கள்

சில தேசிய தலைவர்களின் யூடியூப் சேனல்களுடன் ஒப்பிடுகையில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் அதிக சந்தாதாரர்களை கொண்டு முதலிடத்தில் இருக்கிறது. கூகுளுக்கு சொந்தமான சமூக வலைதளத்தில் அவர் முன்னணி அரசியல் தலைவராக உருவெடுத்து இருக்கிறார். பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 100 லட்சம் சந்தாதாரர்களை தாண்டியிருக்கிறது.

1 கோடி சந்தாதாரர்கள்

1 கோடி சந்தாதாரர்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் செவ்வாய்கிழமை (நேற்று) 1 கோடி சந்தாதாரர்களை கடந்தது. உலகத் தலைவர்களில் அதிக சப்ஸ்க்ரைபர்கள் கொண்ட யூடியூப் சேனலாக நரேந்திர மோடியின் யூடியூப் சேனல் உருவெடுத்திருக்கிறது. பிற தேசிய தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் அதிக எண்ணிக்கை வித்தியாசத்துடன் முன்னிலையில் இருக்கிறது.

"நரேந்திர மோடி" யூடியூப் சேனல்

பிரதமர் மோடியின் "நரேந்திர மோடி" யூடியூப் சேனல் ஆனது 2007 அக்டோபரில் அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது உருவாக்கப்பட்டது. நடிகர் அக்‌ஷய் குமாருடனான அவரது நேர்காணல், 2019 ஆம் ஆண்டில் இந்தி திரைப்படத் துறை உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி உரையாடல் மற்றும் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்ட வீடியோக்கள் நரேந்திர மோடி யூடியூப் சேனலில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமர் மோடியின் நரேந்திர மோடி யூடியூப் சேனல் ஆனது 1 கோடி சந்தாதாரர்களை கடந்திருக்கிறது. பிரதமர் மோடியின் பிற சமூகவலைதள பின்தொடர்பவர்கள் குறித்து பார்க்கையில், டுவிட்டர் கணக்கு 753 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டிருக்கிறது. அதேபோல் பேஸ்புக் கணக்கு 468 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டிருக்கிறது.

பின்தொடர்பவர்களின் விவரங்கள்

பின்தொடர்பவர்களின் விவரங்கள்

இந்தியாவில் உள்ள பிற தலைவர்களின் யூடியூப் சேனல் பின்தொடர்பவர்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் யூடியூப் கணக்கு 5.25 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் யூடியூப் கணக்கு 4.39 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை கொண்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் யூடியூப் கணக்கு 2.12 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை கொண்டிருக்கிறது. அதேபோல் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா யூடியூப் கணக்கு 1.37 லட்சம் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் யூடியூப் கணக்கு 59000 சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
PM Narendra Modi's Youtube Channel Gets 100 Lakh Subscribers: Here the Global Leaders Subscribers Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X