கூகுள் நம் அனைவரையும் கெடுக்கிறது: பிரதமர் மோடி உரை...

|

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி, மனதின் குரல் என்றழைக்கப்படும் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் மக்களிடையே பேசுவார். இதன் 59 ஆம் பகுதி நேரலையில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்களுடன் மோடி உரையாற்றினார்.

பிரதமரிடம் மாணவர் கேள்வி

பிரதமரிடம் மாணவர் கேள்வி

அரியானா மாநிலத்தில் உள்ள ரோகத் பகுதியைச் சேர்ந்த மாணவர் அகில் என்பவர் பிரதமர் மோடியிடையே கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் பிரதமர் என்ற பதவி வகிக்கும் இந்த சமயத்தில் தங்களுக்கு புத்தகம் படிக்கவும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி பதில்

பிரதமர் மோடி பதில்

அதற்கு பதிலளித்து பேசிய மோடி, தனக்கு புத்தகங்கள் படிக்க மிகுந்த ஆர்வம் எப்போதும் உண்டு. திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் இல்லை. தான் வழக்கமாகக் தொலைக்காட்சிகள் பார்ப்பதில்லை. ஆனால் டிஸ்கவர் சேனல் மட்டும் அவ்வப்போது பார்ப்பேன் என கூறினார்.

கவுண்டவுன் ஸ்டார்ட்: விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-47- எதற்கு தெரியுமா?கவுண்டவுன் ஸ்டார்ட்: விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-47- எதற்கு தெரியுமா?

கூகுள்தான் காரணம்

கூகுள்தான் காரணம்

மேலும் கூகுள் மூலம் தாம் எதையும் அறிந்துக் கொள்ள முடிகிறது. எனவே தற்போதும் புத்தகம் அதிகம்படிக்க முடியாமல் இருப்பதற்கு கூகுள் காரணம் என பதிலளித்தார். அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த அறிவிப்பை கூறினார்.

பாரதியார் பாடலை மேற்கோள்காட்டிய பிரதமர்

பாரதியார் பாடலை மேற்கோள்காட்டிய பிரதமர்

அயோத்தி வழக்கிற்கு பிறகு அமைதி காத்த இந்திய மக்களை பாராட்டும் வகையில் பாரதியார் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி பேசினார் பிரதமர் மோடி. முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் என்கிற பாரதியார் பாடலை சுட்டிக் காட்டிப் பேசிய பிரதமர் மோடி, தேசிய நலனைவிட பெரியது எதுவுமில்லை என்று 130 கோடி இந்தியர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.

Source: ndtv.com

Best Mobiles in India

Read more about:
English summary
Prime Minister Narendra Modi Insists Reading Books, Says "Google Has Spoilt Us"

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X