சென்னை-போர்ட்பிளேர் இணைக்கும் கண்ணாடி இழை கேபிள் திட்டம்: என்னென்ன நன்மைகள்?
இப்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையும்,அந்தமான் போர்ட்பிளேரையும் கடல்வழியாய் இணைக்கும் நீர்மூழ்கி இழை கேபிள் செயல்படுத்தப்பட்ட உள்ளது. அதன்படி இந்த கேபிள் ஆனது சென்னையையும்,போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு,லிட்டில் அந்தமான், கார்நிக்கோபார், கமோர்ட்டா, கிரேட் நிக்கோபர் லாங் தீவு, ரங்கத் தீவுகளையும் இணைக்கிறது.

குறிப்பாக இதன் நன்மைகள் என்வென்றால், நிக்கோபர் தீவுகளுக்கு நாட்டின் பிற பகுதிகளைப்போன்ற செல்போன்,லேண்ட்லைன் தொலைபேசி சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நீர்மூழ்கி கேபிள் திட்டத்துக்கு 2018-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி போர்ட்பிளேரில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்பு இதை தொடர்ந்து 2,300கி.மீ தொலைவுக்கு ரூ.1,224 கோடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்டகாச திட்டத்தின் மூலம் சென்னை-போர்டபிளேர் இடையே நம்பகமான அதிவேக தொலைத்தொடர்பு,பிராட்பேண்ட் இணையதள சேவை வசதிகள் கிடைக்கும். மேலும் இது அந்தமான் தீவுகளில் சுற்றுலா, வேலைவாயப்புகளை அதிகரிக்கும். பின்பு பொருளாதர வளர்ச்சிக்கு உத்வேகமாய் அமையும். குறிப்பாக வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். தொலை மருத்துவம், கல்வி போன்ற மின்ஆளுமை சேவைகளை வழங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இந்த திட்டத்தை மோடி அவர்கள் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வழியாக தொடங்கிவைக்கிறார். இதையொட்டி அந்தமான் பாரதீய ஜனதா தொண்டர்களுடன் காணொலி காட்சி வழியாக அவர் கலந்துரையாடினார்.

அந்தமான் தீவுகள் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளன, இது உலகளாவிய வர்த்தகத்துக்கான முக்கிய மையம்,இது ஒரு நீல பொருளாதர மையமாகவும், மையமாகவும், கடல்சார் புதிய தொழில் நிறுவன மையமாக மாற்றவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. மேலும் கடல்சார்ந்த கரிம மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு, அந்தமான் நிக்கோபாரின் 12 தீவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த பிராந்தியம், அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்திலும், புதிய இந்தியாவின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும். சென்னை-போர்ட்பிளேர் நீர்மூழ்கி கண்ணாடி இழை திட்டமானது,இந்த பிராந்தியம், புற உலகுடன் ஆன்லைனில் தொடர்பு கொள்வதில் பிரச்சனை ஏற்படாது என்பதை உறுதி செய்யும்.

மேலும் இந்த பிராந்தியத்தில் 300கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலை பணிகள்,சாதனை அளவான நேரத்தில் அமைந்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications