லிபர்ட்டி சிலையை விட உயரமான சர்தார் படேல் உருவச் சிலையை திறந்து வைக்கும் மோடி.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் மிக உயரமான சர்தார் படேல் இன் உருவச் சிலையை திறந்து வைக்க போகிறார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

By Sharath
|

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் மிக உயரமான சர்தார் படேல் இன் உருவச் சிலையை திறந்து வைக்கப் போகிறார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான உருவச் சிலையை திறந்து வைக்கும் மோடி.!

நியூ டெல்லி: செப்டெம்பர் 9 டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகின் மிக உயரமான சர்தார் படேல் இன் உருவச் சிலையை திறந்து வைக்கப் போகிறார் என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி தேசிய செயற்குழு சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

143வது பிறந்த நாள் விழா

இந்தியாவின் முதல் பிரதி பிரதம மந்திரியான சர்தார் படேல் இன் 143வது பிறந்த நாள் விழாவை ஒட்டி இந்த உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான சர்தார் படேல்

உலகின் மிக உயரமான சர்தார் படேல்

அக்டோபர் 31, 2018 பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகின் மிக உயரமான சர்தார் படேல் உருவச்சிலையைத் திறந்து வைக்கப் போகிறார் என்று ருபானி ஊடக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார் மற்றும் அனைவரையும் திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

லிபெர்ட்டி சிலை

லிபெர்ட்டி சிலை

உலகின் மிக முக்கிய தலைவர்களின் ஒருவரான மற்றும் நாட்டின் முன்னோடிகளில் ஒருவர் என்று அழைக்கப்படும் சர்தார் படேல் இன் இந்த உருவச்சிலை அமெரிக்காவில் இருக்கும் லிபெர்ட்டி சிலை இன் உயரத்தை விட அதிகமானது என்று விஜய் ருபானி தெரிவித்திருக்கிறார்.

ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னம்

ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னம்

"இது வெறும் சிலை அல்ல, இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் சின்னம்," என்று ருபானி நிகழ்ச்சியில் கூறினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இரும்பு, நீர் மற்றும் மண் பயன்படுத்தி இந்த உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இன்றைய காலத்திற்கு ஏற்ப சிலைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு புதிய தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2013 இல் நரேந்திர மோடி

2013 இல் நரேந்திர மோடி

182 மீட்டர் உயரம் கொண்ட உருவச்சிலை நர்மதா நதிக்கரையில் நிறுவப்படும் என்று 2013 ஆம் ஆண்டில் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
PM Modi to Unveil World’s Tallest Sardar Patel Statue on 31 Oct : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X