கொடி பறக்குதா.. BSNL பயனர்களுக்கு குட்நியூஸ்.. நாடு முழுவதும் 4ஜி சேவை.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
பிஎஸ்என்எல் (BSNL) பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 27) தொடங்கி வைக்க இருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாப் பார்க்கலாம்.
4ஜி சேவை அறிமுகம்
அதாவது பிரதமர் மோடி நாளை இரண்டு முக்கியமான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதில் முதலாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ஆகும். நாடு முழுவதும் உள்ள 98,000 தளங்களில் அறிமுகப்படுத்தப்படும். பின்பு இந்தியாவின் எந்த பகுதியும் விடுபடாது என்று கூறப்படுகிறது. அதுவும் பிஎஸ்என்எல் 4ஜி டவர்கள் மற்றும் பிடிஎஸ்கள் ஏற்கனவே நாடு முழுவதும் 2.2 கோடி பயனர்களுக்குச் சேவை அளித்து வருகின்றன. இது ழுமுமையாக மென்பொருள் மூலம் இயக்கப்பட்டு, 5ஜிக்கு மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 4ஜி சேவையுடன் டிஜிட்டல் பாரத் நிதி மூலம் இந்தியாவின் 100 சதவீத 4ஜி செறிவு நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படும் எனவும், இதில் 29, 000 முதல் 30,000 வரையான கிராமங்கள் 4ஜி செறிவு திட்டப் பணியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
குறிப்பாக இது ஒரு வரலாற்று நாள், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கோ, தொழில்நுட்ப உபகரண உற்பத்தித் துறைக்கோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு வரலாற்று நாள். பிரதமர் மோடி நாளை புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். அது பிரதமர் தலைமையில் உலகத்திற்கும், உலக சமூகத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பாக இருக்கும்.
அதுவும் தொலைத்தொடர்புத் துறைக்கு ஒரு புதிய யுகம். தற்போது உலகில் தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நான்கு பெரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் நுழைந்துள்ளது. அதாவது டென்மாக், ஸ்வீட்ன், தென் கொரியா, சீனா போன்ற நான்கு நாடுகள் மற்றும் ஐந்து பெரும் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இப்போது இந்தியா உலக வரலாற்றில் தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஐந்தாவது நாடாகவும், ஆறாவது நிறுவனமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பெரிய மாற்றத்தைப் பிரதமர் மோடி முன்னெடுத்து, உந்துதல் அளித்து வழிநடத்தினார். மேலும் 4ஜி உபகரணங்களுக்கான டெண்டர்கள் விடுக்கப்பட்டபோது, வெளிநாட்டு உபகரணங்களை வாங்குவதற்கு பதில் நமது சொந்த 4ஜி உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் என ஒரு துணிச்சலான முடிவை அவர் எடுத்தார். அதன்படி வரலாற்று ரீதியாக வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை வாங்குபவராக இருந்த நமது நாடு, வெறும் 22 மாதங்களில் சொந்த உள்நாட்டு 4ஜி உபகணரங்களை உருவாக்கும் நாடாக மாறி சாதனை படைத்துள்ளது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இந்த 4ஜி நெட்வொர்க்கை திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் வழங்கும் இரண்டு அசத்தலான திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் 160 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பின்பு இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








