'ஜி' சேவை அப்டேட் செய்யும் பிரதமர் மோடி.. 5G அறிமுக தேதி அறிவிப்பு..

|

வருவது உறுதி நேரமும் காலமும் பின்னர் அறிவிக்கப்படும் என்ற கேள்விகளுக்கு எல்லாம் சமீப காலமாக பதில் கிடைத்து வருகிறது. அதன்படி இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும், அறிமுக தேதி இதோ வந்துவிட்டது அதோ வந்துவிட்டது என்ற தகவல் பல காலக்கட்டங்களாக உலா வந்துக் கொண்டிருந்தது.

இதற்கும் தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை எப்போது அறிமுகம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

5ஜி சேவைகள் அறிமுகம்..

5ஜி சேவைகள் அறிமுகம்..

இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவார் என தேசிய பிராட்பேண்ட் மிஷன் அறிவித்துள்ளது. அறிமுக தேதியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி அறிமுகம் செய்வார்..

பிரதமர் மோடி அறிமுகம் செய்வார்..

அக்டோபர் 1 2022, அன்று நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸ் இல் பிரதமர் மோடி இந்தியாவில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை தேசிய பிராட்பேண்ட் மிஷன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

அதில் "இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் 5ஜி சேவைகளை பிரதமர் மோடி வெளியிடுவார், இந்திய மொபைல் காங்கிரஸில் ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கண்காட்சி" என குறிப்பிட்டுள்ளது.

பிரமாண்ட நிகழ்வை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..

பிரமாண்ட நிகழ்வை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..

இந்திய மொபைல் காங்கிரஸின் (IMC) அதிகாரப்பூர்வ வலைத்தளம், தொலைத்தொடர்புத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) இணைந்து நடத்தும் வருடாந்திர நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்வில் அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

IMC வெளியிட்ட அறிவிப்பு..

தேசிய பிராட்பேண்ட் மிஷன் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகப்படுத்துவார் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இந்த அறிமுகம் இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 இல் நிகழும் என தெரிவிக்கப்படுகிறது.

"பிரதமர் நரேந்திரர மோடி அவர்களால் இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 தொடக்க விழாவை அறிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அறிக்கிறது. மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வைக் காண அக்டோபர் 01 - 04, 2022 அன்று பிரகதி மைதானத்தில் எங்களுடன் சேருங்கள்" என்று IMC தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கின் மூலம் தெரிவித்துள்ளது.

கூட்டாத நடத்தும் நிகழ்வு..

இந்த நிகழ்வானது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப மன்றம் எனக் கூறும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC), தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

குறுகிய காலத்தில் 80 சதவீதம் கவரேஜ்..

குறுகிய காலத்தில் 80 சதவீதம் கவரேஜ்..

குறுகிய காலத்தில் நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை 80 சதவீதம் கவரேஜ் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் தெரிவித்தார்.

முன்னணியில் இருக்கும் ஜியோ..

முன்னணியில் இருக்கும் ஜியோ..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5G சேவையை அடுத்த மாதம் இந்தியாவில் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யவிருக்கிறது. குறிப்பாக, ஜியோவின் புதிய 5ஜி சேவை, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துடன் மக்கள் ஜியோவின் புதிய 5ஜி (Jio 5G) சேவையைப் பயன்படுத்தத் துவங்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட 5ஜி சேவை இங்கு தான்..

முதற்கட்ட 5ஜி சேவை இங்கு தான்..

முதற்கட்டமாக இந்த புதிய 5ஜி சேவை, இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் களமிறக்கப்படுகிறது என்பதை நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்த முதற்கட்ட 5G சேவை அறிமுகத்தில், இந்தியாவின் 4 முக்கிய நகரங்களை ஜியோ சேர்த்துள்ளது. குறிப்பாக, இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய நகரமும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய 4 நகரங்களில் தான் ஜியோவின் புதிய 5ஜி சேவை அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
PM Modi to launch 5G service: Launch date announced

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X