Home
News

மோடி ஈமெயில் அனுப்பியது டிஜிட்டல் கேமரா வைத்திருந்தது பொய்.! நிரூபிக்கப்பட்ட உண்மை.!

சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடி அவர் 1988 ஆம் ஆண்டு டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்து அந்த புகைப்படங்களை ஈமெயில் மூலம் மெயில் செய்துள்ளார் என்று கூறியுள்ளார். நரேந்திர மோடி தெரிவித்துள்ள இந்த கருத்தை அனைவரும் கேலி செய்து வருகின்றனர்.

உண்மை விளக்கத்துடன் நடந்தது என்ன?

உண்மை விளக்கத்துடன் நடந்தது என்ன?

உண்மையில் அவர் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தி ஈமெயில் செய்ததற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று பலரும் ஆராயத் துவங்கிவிட்டனர். பேட்டியில் மோடி கூறியது உண்மையா என்பதை, உண்மை விளக்கத்துடன் நடந்தது என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

1991 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த இணையதளம்

1991 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த இணையதளம்

மோடி தெரிவித்தது போல் புகைப்படங்களை அனுப்பும் அளவிற்கு 1988 ஆம் ஆண்டில், இணையதள சேவை தற்போதைய வடிவத்தில் இல்லை என்பதே முதல் உண்மை. முதல் முதலில் இணையதளம் 1991 ஆம் ஆண்டு தான் பொது மயம் ஆக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. அதன்பின்தான் ஆசியாவிலும், இந்தியாவிலும் நுழைந்தது.

அரசுக்குச் சொந்தமான வித்ஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட், இந்தியா

அரசுக்குச் சொந்தமான வித்ஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட், இந்தியா

அரசுக்குச் சொந்தமான வித்ஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (வி.எஸ்.என்.எல்) நிறுவனம், 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி இந்தியாவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2 எம்பி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்பட்டது

2 எம்பி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்பட்டது

அதேபோல் 1990 ஆம் ஆண்டில் தான் அமெரிக்கா ஆன்லைன், ஹொட்மெயில், யாஹூ, எக்கோமெயில் போன்ற நிறுவனங்கள் இன்டர்நெட் சேவையைத் துவங்கியது. முதல் முதலில் துவங்கப்பட்ட இன்டர்நெட் சேவையில் 2 எம்பி ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்பட்டது. ஆகையால் போட்டோக்களை ஈமெயில் உடன் இனைத்து அனுப்பி இருப்பதற்குச் சாத்தியமே இல்லை என்பதே உண்மை.

 முதல் டிஜிட்டல் கேமரா, 1990

முதல் டிஜிட்டல் கேமரா, 1990

அதுமட்டுமின்றி, ஃபுஜி டிஎஸ்-1 பி என்ற கேமரா தான் முதல் டிஜிட்டல் கேமராவாகும். இது 1988 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் விற்பனைக்கு வரவேயில்லை என்பது தான் உண்மை. வணிக ரீதியாக விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய முதல் டிஜிட்டல் கேமராவாக "லாஜிடெக் போட்டோமேன்" கேமரா 1990 ஆம் ஆண்டில் விற்பனைக்குக் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் ஈமெயில் செய்து இருப்பதற்குச் சாத்தியமேயில்லை

புகைப்படம் ஈமெயில் செய்து இருப்பதற்குச் சாத்தியமேயில்லை

எனவே பிரதமர் நரேந்திர மோடி, பேட்டியில் தெரிவித்தபடி 1988 ஆம் ஆண்டில் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தி புகைப்படம் எடுத்து அவற்றை ஈமெயில் மூலம் அவர் அனுப்பி இருப்பதற்குச் சாத்தியமேயில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1988 இல், ஏழை தாயின் மகன் கையில் டிஜிட்டல் கேமரா?

1988 இல், ஏழை தாயின் மகன் கையில் டிஜிட்டல் கேமரா?

ஏழை தாயின் மகன் கையில் எப்படி டிஜிட்டல் கேமரா வந்தது? இன்டர்நெட் பயன்படுத்த எப்படி வாய்ப்பு கிடைத்தது? என்று நெட்டிசன்ஸ்கள் ரேடார் சர்ச்சைக்குப் பின் இன்னும் அதிகமாய் மோடியை கலாய்த்து வருகின்றனர். தற்பொழுது இந்த கேமரா சர்ச்சை சமூகவலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

விண்ணுக்கு 3 மனிதர்களை அனுப்பும் இந்தியா: மோடி-இஸ்ரோ-உறுதி.!

விண்ணுக்கு 3 மனிதர்களை அனுப்பும் இந்தியா: மோடி-இஸ்ரோ-உறுதி.!

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்தபடி இஸ்ரோ தனது முதல் மனித விண்வெளி பயணத்தை துவங்கும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதன் படி இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகியாய் நடுகல் ஒன்றிணைந்து "ககன்யான்" திட்டத்தின் பணி குழு பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

இஸ்ரோ வுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பனி குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 6வது எடிஷன் விழாவில் அறிவித்தார்.

மூன்று விண்வெளி வீரர்கள்

மூன்று விண்வெளி வீரர்கள்

இந்தியா 2022 க்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ வின் முக்கிய நோக்கம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா வை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய சாதனை பட்டியலில் நான்காவது உலக நாடாக வேண்டும் என்பது தான்.

இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு

இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு

இஸ்ரோ மற்றும் சிஎன்இஎஸ் பிரெஞ்சு ஸ்பேஸ் நிறுவனம் அனைத்து துரைகளிலுள் இருக்கும் கை சிறந்த வல்லுநர்களை வைத்து பணிக்குழுவை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக விண்வெளி மருத்துவம், விண்வெளி சுகாதார கண்காணிப்பு, வாழ்க்கை ஆதரவு, கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளிக் குப்பைகள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார அமைப்பு என அனைத்துத் துறைக்கும் தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனன்ர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கேள் தெரிவித்துள்ளார்.

நுண்ணோக்கி சோதனை

நுண்ணோக்கி சோதனை

இஸ்ரோ, அதன் விண்வெளி வீரர்கள் மூலம் நுண்ணோக்கி மீது சோதனைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஆராய்ச்சி குழு

விண்வெளி ஆராய்ச்சி குழு

இந்திய மற்றும் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சி குழு காலநிலை கண்காணிப்பு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு, புதிய கண்டுபிடிப்பு, புதிய விண்வெளி வாகன கண்டுபிடிப்பு போன்ற அனைத்துத் துறையிலும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி மேம்பாட்டில் ஈடுபடுமென்று விழாவில் தெரிவிக்கப்பட்டது.

கால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளார் பிரதமர் மோடி.!

கால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளார் பிரதமர் மோடி.!

இந்திய பிரதமரான நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றார். மேலும் அரசின் செயல் திட்டங்களையும், அயல் நாட்டினருடம் அவ்வபோது தனிப்பட்ட முறையில் பேசி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கால் டிராப் பிரச்னையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த செய்தியால் தற்போது பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.

பிரதருக்கு பிரச்னை:

பிரதருக்கு பிரச்னை:

போனில் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென தொடர்பு துண்டிக்கப்பவதை கால் டிராப் என்று சொல்கின்றனர். இந்த பிரச்னை போனில் பேசும் சாமானியர் முதல் பிரதமர் மோடி வரை இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்:

அறிவுறுத்தல்:

பிரதமர் மோடி செல்லி விமான நிலையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ இலத்திற்கு செல்வதற்குள் அடிக்கடி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி பல்வேறு துறை அதிகாரிகளுடன் கால் டிராப் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு தொலைத்தொடர்பு துறை செயலாளருக்கு அறிவுறுத்தினார்.

 வசூலாகும் கட்டணம்:

வசூலாகும் கட்டணம்:

கால் டிராப் பிரச்னைக்காக தொலை தொடர்பு நிறுவனங்களிடம் வசூலான அபராதம் பற்றியும் கேட்டறிந்துள்ளார். முறையான சேவை வழங்காத தொலைதொடர்ப்பு நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையில் டிராய் வதிமுறைமுறைகளை வகுத்துள்ளது.

மோடியிடம் தெரிவிப்பு:

மோடியிடம் தெரிவிப்பு:

அபராதம் விதிக்கும் விதிமுறைகளை தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதையும் தொலை தொடர்புத்துறை செயலாளர் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
pm modi says he used email in 1988 but vsnl started only in 1995 hows this possible : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X