சீன மொழியில் பதிவிடப்பட்ட மோடியின் Weibo கணக்கு நீக்கம்! ஏன் தெரியுமா?

|

டிவிட்டர் போன்ற சீனாவின் வெய்போ (Weibo) சமூக வலைத்தள பக்கத்திலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கணக்கு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வெய்போ தளத்திலிருந்த மோடியின் புகைப்படம், பதிவுகள் மற்றும் கருத்துகள் அனைத்தும் அந்த பக்கத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலுக்கான காரணம் என்ன என்று தெரித்துக்கொள்ளலாம்.

சீன பொருட்களுக்கு தடை

சீன பொருட்களுக்கு தடை

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா வீரர்களுக்கு இடையிலான நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் சீன பொருட்களின் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் அண்மையில் சுமார் 59 சீன பயன்பாடுகளை முற்றிலுமாக பயன்படுத்தத் தடை செய்துள்ளது.

மோடியின் வெய்போ கணக்கு அகற்றப்பட்டுள்ளது

மோடியின் வெய்போ கணக்கு அகற்றப்பட்டுள்ளது

மோடியின் வெய்போ கணக்கிலிருந்த அனைத்து தகவல்களும் அகற்றப்பட்டுள்ளது. பிரதமரின் அறிக்கைகள் உட்பட - பிரபலமான சமூக ஊடக பயன்பாடான வீச்சாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இந்த இந்தியக் கணக்குகள் எப்போது அகற்றப்பட்டது என்பதற்கான சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் புதன்கிழமை இந்த பக்கத்தில் எந்த தகவல்களும் காணப்படவில்லை.

 59 சீன பயன்பாடுகளை இந்தியா தடை

59 சீன பயன்பாடுகளை இந்தியா தடை

பாதுகாப்பு மற்றும் தரவு மீறல் சந்தேகங்களின் காரணமாகத் திங்களன்று 59 சீன பயன்பாடுகளை இந்தியா தடைசெய்த பின்னணியில் இந்த செயல் நடந்துள்ளது. மோடியின் வெய்போ கணக்கு 2015 ஆம் ஆண்டில் பிரதமரின் முதல் சீன பயணத்தின் போது, மிகுந்த ஆரவாரம் மற்றும் விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த கணக்கு உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து, இந்த கணக்கில் மோடி குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.

சீனர்கள் அதிகமாக இருந்த மோடியின் கணக்கு

சீனர்கள் அதிகமாக இருந்த மோடியின் கணக்கு

மோடியின் வெய்போ கணக்கில் சுமார் 2,44,000 பின்தொடர்பவர்கள் இருந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் வெய்போ கணக்கில் பதிவிடப்பட்டிருந்த பதிவுகள் அனைத்தும் சீன மொழியில் பதிவிடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், கால்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்த MEA இன் அறிக்கையை கிளிக் செய்யும் போது WeChat இல் தோன்றிய செய்தி பின்வருமாறு கூறியது.

இது தொர்பாக வீச்சாட் கூறியது என்ன?

இது தொர்பாக வீச்சாட் கூறியது என்ன?

வீச்சாட் கருத்துப்படி, செய்தித் தொடர்பாளரின் அறிக்கை நீக்கப்பட்டது, ஏனெனில் அது "மாநிலத்தின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்களை" கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

விதிமுறை பட்டியல்

விதிமுறை பட்டியல்

விதிமுறை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை, "தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து, மாநில ரகசியங்களை வெளிப்படுத்துதல், மாநில அதிகாரத்தைத் தகர்த்தல் அல்லது தேசிய ஒற்றுமையைக் குறை மதிப்பிற்கு உட்படுத்துதல், வெறுப்பைத் தூண்டுதல், தவறான தகவல்களைப் பரப்புதல், ஆர்ப்பாட்டம்" ஆகியவை அடங்கும்.

Best Mobiles in India

English summary
PM Modi’s Weibo Account Goes Blank In China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X