உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி விடுத்த சவால்!

|

உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் விதமாக பிரதமர் மோடி ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு என்ற சவாலில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

 சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு

உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு

இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் அல்லது புறக்கணிக்க வேண்டும் என்ற வகையில் எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிவுறுத்தல் இடம்பெற்றுள்ளது.

ஜூம் செயலி பாதுகாப்பு குறைப்பாடு

ஜூம் செயலி பாதுகாப்பு குறைப்பாடு

குறிப்பாக ஜூம் செயலி பாதுகாப்பு குறைப்பாட்டையே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் ஜூம் செயலி அரசு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை தைவான் அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சீன செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை

59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை

இதையடுத்து டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன செயலிகளில் சில குறிப்பிட்ட செயலிகள் பிரதான செயல்பாடாக இருந்திருக்கிறது. இதையடுத்து இதற்கு மாற்று செயலிகளை அதன் வாடிக்கையாளர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். டிக்டாக்கிற்கு மாற்றாக இந்திய செயலியான சிங்காரி ஆப், மிட்ரான் ஆப் பிரபலமடைந்து வருகிறது.

உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலிகள்

உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலிகள்

இந்த நிலையில் உலகத் தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு என்ற சவாலில் பங்கேற்கும்படி இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்

தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இதுபோன்ற தயாரிப்பகளோ, தயாரிப்புகளை உருவாக்குவதற்கான திறமையோ நோக்கமோ இருப்பதாக உணர்பவர்கள் இந்த சவாலில் பங்கேற்கலாம். தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள அனைவரும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆத்மனிர்பார் பாரதத்தை உருவாக்கும் முயற்சி

ஆத்மனிர்பார் பாரதத்தை உருவாக்கும் முயற்சி

ஆத்மனிர்பார் பாரதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு வழிகாட்டுதல்களை, அவர்களின் திறமைக்கு வழிகாட்டலைக் காணவும் இது நல்ல வாய்ப்பாகும். உள்நாட்டு பயன்பாடுகளை புதுமைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், ஊக்குவிக்கவும், தொழில்நுட்ப சமூகத்தில் பெரும் உற்சாகமும் ஆர்வத்தை காண்பதாக தெரிவித்தார். சுயசார்பு இந்தியா மென்பொருள் (app) கண்டுபிடிப்பு சவாலில் தொழில்நுட்பத் துறையினர் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

source: businesstoday.in

Best Mobiles in India

English summary
PM Modi launches atmanirbhar bharat app: aims to introduce Wordclass india apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X