அறிமுகமானது 5G சேவை.. ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களுக்கு எப்போது கிடைக்கும்?

|

வருவது உறுதி நேரமும் காலமும் பின்னர் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்புகளுக்கு எல்லாம் சமீப காலமாக பதில் கிடைத்து வருகிறது. அதன்படி இந்தியாவில் 5ஜி சேவை விரைவில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்த்த 5G சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ஆய்வு செய்த பிரதமர் மோடி..

ஆய்வு செய்த பிரதமர் மோடி..

5ஜி சேவை ஆனது முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத் உள்பட 13 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்று 5ஜி சேவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் ஆய்வு செய்தார்.

பல மடங்கு அதிக வேகம்..

பல மடங்கு அதிக வேகம்..

மத்திய அரசின் பிரதான கொள்கைகளில் ஒன்று டிஜிட்டல் இந்தியா திட்டம். இந்த திட்டம் பலகட்டம் முன்னோக்கி சென்றிருக்கிறது என்றே கூறலாம்.

இதுநாள் கண்ட முன்னேற்றங்களை விட இனி நாம் காண இருக்கும் முன்னேற்றங்கள் என்பது அளப்பரியதாக இருக்கும். காரணம் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுநாள் வரை கண்ட இணைய வேகத்தை விட இது பல மடங்கு அதிகமாக இருக்கும்.

அறிமுகம் செய்த பிரதமர் மோடி

அறிமுகம் செய்த பிரதமர் மோடி

இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியால் 5G அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் 5ஜி அடிப்படையிலான சுகாதார தொழில்நுட்பம், ட்ரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள் உள்ளிட்டவைகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2022

இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2022

அதேபோல் இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 நிகழ்வில் ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி, ஏர்டெல் இன் சுனில் மிட்டல், வியின் குமார் மங்கலம் பிர்லா போன்ற தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அனைத்து மூத்த நிர்வாகிகளும் நாட்டில் 5ஜி சேவைகள் குறித்த சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியாவில் தனது மலிவு விலை 5ஜி கனவை ரிலையன்ஸ் அறிவித்தது. 5ஜி சேவைகள் ஆரம்ப கட்டமாக முதலில் 8 நகரங்களில் வெளிவரும் என ஏர்டெல் குறிப்பிட்டது.

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது முதல் கிடைக்கும்..

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது முதல் கிடைக்கும்..

Vi நிறுவனம் இதுகுறித்த தகவலை தெளிவுப்படுத்தவில்லை. இருப்பினும் அதன் 5ஜி சேவை மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதன் விலை விவரங்களை இன்னும் தெளிவுப்படுத்தவில்லை.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி விலை விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை. அக்டோபர் 1 முதல் இந்தியாவில் 5ஜி கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது 5ஜி சேவை அறிமுகம்?

எப்போது 5ஜி சேவை அறிமுகம்?

ஜியோ நிறுவனம் சிறந்த தரம் மற்றும் மிகவும் மலிவு விலையில் 5ஜி சேவை வழங்கும் என்பதை முகேஷ் அம்பானி உறுதி செய்தார்.

டிசம்பர் 2023க்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் 5ஜி வழங்கப்படும் எனவும் ஜியோ குறிப்பிட்டுள்ளது. அதேபோல் ஏர்டெல்லின் 5ஜி சேவை இந்தியாவின் 8 நகரங்களில் தொடங்கப்படும் என சுனில் மிட்டல் கூறினார்.

எந்தெந்த நிறுவனங்கள் எப்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்ற விவரங்களை பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி

IMC 2022 இல், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, உலகில் வேறு எவரும் வழங்காத உயர்ந்த தரம் மற்றும் மிகவும் மலிவு விலைகளை 5ஜி சேவை வழங்குவதை ஜியோ உறுதி செய்யும் என கூறினார்.

2023 டிசம்பரில் அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி சேவை வழங்கப்படும் என்பதை ஜியோ உறுதியளித்துள்ளது. ஜியோ தனது 5ஜி சேவையை தீபாவளிக்குள் அதாவது அக்டோபர் 23,24 தேதிகளில் வெளியிடப்படும் என்பதை உறுதி செய்துள்ளது.

ஜியோ தனது 5ஜி சேவைகளை முதலில் டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பையில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்தி ஏர்டெல் 5ஜி

பார்தி ஏர்டெல் 5ஜி

பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் தனது உரையில், ஏர்டெல்லின் 5ஜி சேவைகள் ஆரம்ப கட்டமாக டெல்லி, வாரணாசி, மும்பை உள்ளிட்ட 8 இந்திய நகரங்களில் தொடங்கப்படும் என கூறினார்.

அதேபோல் 5ஜி சேவைகள் இன்றுமுதலே தொடங்கும் எனவும் கூடுதல் விவரங்களுக்கு காத்திருக்கும்படியும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

Vi 5G

Vi 5G

வோடபோன் ஐடியா (விஐ) 5ஜி சேவை குறித்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தனது சேவைகளை மேம்படுத்த உள்ளதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் Vi அதன் 5G சேவைகளுக்காக OnePlus உடன் கூட்டாண்மை அமைத்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
PM Modi Launches 5G in India: When will Get Jio, Airtel, Vi Users?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X