பேட்ட பராக்., விர்ட்சுவல் துப்பாக்கியில் குறி வைத்து சுட்டு அசத்திய Modi: என்ன ஆனது தெரியுமா?-வீடியோ

|

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ராணுவ தளவாட கண்காட்சி நேற்று முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்

இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, எதிர்காலத்தில் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி மையங்களில் ஒன்றாக உத்தர பிரதேசம் மாநிலம் மாறும் என்று கூறினார். புதிய பாதுகாப்பு சவால்களைப் பார்த்து, அதற்கேற்ப பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன

புதிய பாதுகாப்பு சவால்களைப் பார்த்து, அதற்கேற்ப பாதுகாப்புப் படைகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றன. வருகிற 5 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இந்தியாவில் 25 ராணுவ தளவாட உபகரணங்களை தயாரிப்பதே நமது நோக்கம் எனவும் கூறினார்.

பலே சைபர்போலீஸ்.,குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் ஒருவர் கைது:எப்படி சிக்கினான்,எத்தனை வயது தெரியுமா?பலே சைபர்போலீஸ்.,குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் ஒருவர் கைது:எப்படி சிக்கினான்,எத்தனை வயது தெரியுமா?

பலவகை உபகரணங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாக கூறினார்

பலவகை உபகரணங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாக கூறினார்

அதோடு பீரங்கி துப்பாக்கிகள், விமானந்தாங்கி கப்பல், போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், இலகு ரக போர் விமானங்கள், போர் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பலவகை உபகரணங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

துப்பாக்கியை எடுத்து குறி வைத்தார்

துப்பாக்கியை எடுத்து குறி வைத்தார்

இதை தொடர்ந்து, ராணுவ கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று குறித்து ஏற்பாட்டாளர் பிரதமர் மோடிக்கு விளக்கினார். அப்போது பிரதமர் மோடி அந்த துப்பாக்கியை எடுத்து குறி வைத்தார்.

விர்ட்சுவல் துப்பாக்கி

அந்த துப்பாக்கி விர்ட்சுவல் துப்பாக்கி என்பதால் ஸ்கிரீன் மோடில் ஆப்பரேட் செய்யப்படும். மோடி விர்ட்சுவல் துப்பாக்கியை எடுத்து குறி வைத்ததும். டிஸ்பிளேயில் டார்கெட் காண்பிக்கப்பட்டது. அதை குறி வைத்து பிரதமர் சுட்டு சோதனை செய்தார்.

#PICOFTHEDAY

#PICOFTHEDAY

பிரதமர் மோடியின் இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது. பிரதமர் மோடியின் இந்த புகைப்படத்துடன் #PICOFTHEDAY என்று சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வைரலானது. அதோடு, இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

Best Mobiles in India

English summary
PM Modi fires at virtual firing range with assault rifle

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X