ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் ஸ்வீடனில் இருக்கும் காரை மோடி 5G ரிமோட் மூலம் இயக்கினார்.!

|

புதுதில்லியில் நடைபெற்று வரும் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் விழாவில் (IMC) பிரதமர் நரேந்திர மோடி 5வது தலைமுறை மொபைல் நெட்வொர்க் என்று அழைக்கப்படும் 5ஜி சேவைகளை இந்தியாவில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார். அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம, ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி நெட்வொர்க் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் 5ஜி இணைக்கப்பட்ட ரிமோட் மூலம் கார் ஓட்டினார்-ஆ மோடி?

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் 5ஜி இணைக்கப்பட்ட ரிமோட் மூலம் கார் ஓட்டினார்-ஆ மோடி?

இவை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மற்ற நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு ஒரு நிலையான ரோல்அவுட் மூலம் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி, 5ஜி மூலம் இணைக்கப்பட்ட ரிமோட்டை பயன்படுத்தி, ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில், இந்தியாவில் அமர்ந்தபடி, ஸ்வீடன் நாட்டில் இருக்கும் காரை டெஸ்ட் டிரைவ் செய்து ஓட்டி பார்த்தார். 5ஜி உதவியுடன் இதுபோல, பல விஷயங்களை இந்தியா மேற்கொள்ளவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5G சேவையின் மூலம் இதை எல்லாம் செய்யலாமா?

5G சேவையின் மூலம் இதை எல்லாம் செய்யலாமா?

இந்த 5ஜி தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் ஒன்று வாகனத் துறையாகும். 5G நெட்வொர்க்கின் பயன்பாடு கார்களை இணையத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், மற்ற வாகனங்கள் மற்றும் 5G-இயக்கப்பட்ட உள்கட்டமைப்புகளுடன் இணைக்கவும் உதவுகிறது. கூடுதலாக, 5G சேவையின் மூலம், தொலைதூரத்தில் இருக்கும் கார்களை கூட இயக்க அனுமதிக்கும். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பல 5G பயன்பாட்டுக்களை நேரடியாக அனுபவித்தார்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!

ஸ்வீடனில் இருக்கும் காரை இங்கிருந்து கண்ட்ரோல் செய்யலாமா?

ஸ்வீடனில் இருக்கும் காரை இங்கிருந்து கண்ட்ரோல் செய்யலாமா?

அதில், குறிப்பாக, டெல்லியில் இருந்தே ரிமோட் மூலம் ஸ்வீடனில் இருக்கும் காரை ஓட்டுவது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட அனுபவங்களில் ஒன்றாகும். தேசிய தலைநகரில் உள்ள பிரகதி மைதானத்தில் நான்கு நாள் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 ஐத் தொடங்கி வைத்த மோடி, பல 5G பெவிலியன்களைப் பார்வையிட்டார் மற்றும் 5G பயன்பாட்டு நிகழ்வுகளை உருவாக்க உள்நாட்டுத் தொடக்க நிறுவனங்களை ஊக்குவித்தார்.

மாபெரும் வியக்கத்தக்க நிகழ்வு.!

மாபெரும் வியக்கத்தக்க நிகழ்வு.!

ஸ்வீடனின் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சனின் அறையில், மோடி 5G-இயக்கப்பட்ட ரிமோட் மூலம் ஸ்வீடனில் இருக்கும் காரை இந்தியாவில் இருந்து ஓட்டி பார்த்தார். இந்த அனுபவத்தை பார்த்த மக்களும் வியப்பில் மூழ்கியுள்ளனர். உண்மையிலேயே, இது ஒரு மாபெரும் வியக்கத்தக்க நிகழ்வு தான்.

WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!

5G அடுத்து இந்தியாவில் எதற்கெல்லாம் பயன்படும்?

5G அடுத்து இந்தியாவில் எதற்கெல்லாம் பயன்படும்?

சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, பேரிடர் மேலாண்மை போன்றவற்றில் இந்தியாவின் நிகழ் நேரப் பிரச்சனைகளைத் தீர்க்க 5G தீர்வுகளை உருவாக்குவதற்குப் பணிபுரியும் ஏறக்குறைய 100 உள்நாட்டு ஸ்டார்ட்அப்களின் கூட்டமைப்பை மோடி நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ பெவிலியனில் வைக்கப்பட்ட 5G சாதனங்களை மோடி நேரில் பார்த்தார். இதில் குறிப்பாக ஜியோ கிளாஸ் மூலம் பயன்பாட்டு நிகழ்வுகளை அனுபவித்தார்.

டிஜிட்டல் இந்தியாவின் நன்மைகள் துவங்கிவிட்டது.!

டிஜிட்டல் இந்தியாவின் நன்மைகள் துவங்கிவிட்டது.!

ஜியோ பொறியாளர்கள் குழுவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள எண்ட்-டு-எண்ட் 5G தொழில்நுட்பத்தைப் பற்றியும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதாரப் பாதுகாப்பு விநியோகத்திற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க 5G எவ்வாறு உதவும் என்பதையும் பிரதமர் விளக்கினார். பிரதமர் மோடியின் கூற்றுப்படி, 5G தொழில்நுட்பத்திற்கான நாட்டின் காத்திருப்பு முடிந்துவிட்டது, 'டிஜிட்டல் இந்தியாவின்' நன்மைகள் ஒவ்வொரு கிராமத்தையும் விரைவில் சென்றடையும் என்று தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

Read more about:
English summary
PM Modi Drives Car in Sweden from India Remotely Using 5G Connected Technology Like James Bond

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X