வீடியோ கான்பரன்ஸ் மூலம் பில்கேட்சுடன் பிரதமர் மோடி உரையாடல்.!

|

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் மகாரஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 27,524 பேரும் தமிழகத்தில் 9,674 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது, குறிப்பாக இதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. பின்பு பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா
பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.

 அறிக்கை

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பில்கேட்ஸ் உடன், பிரதமர் மோடி அவர்கள் கான்பரன்சில் உரையாடினார்.இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை என்னவென்றால்: பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தலைவர் பில்கேட்ஸ் உடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் பேசினார்.

டிவிட்டர்; ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொரோனாவுக்கு பிறகும் வீட்டிலிருந்தே வேலை?டிவிட்டர்; ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொரோனாவுக்கு பிறகும் வீட்டிலிருந்தே வேலை?

வைரசுக்கு தடுப்பு மருந்து

அதில் கொரொனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்தி உள்ள தாக்கம்,வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும்ஒருங்கிணைந்து வைரசுக்கு எதிராக போராடுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

க போராட

குறிப்பாக கொரோனாவுக்கு எதிராக இந்திய சுகாதாரத்துறை போராடுவது குறித்து விளக்கிய பிரதமர், கோரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவுக்கும் கேட்ஸ் அறக்கட்டளை உதவுவதற்கு பாராட்டு தெரிவித்தார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் இந்தியாவில்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவியுள்ளார். மேலும்சீனா மற்றும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவுவதற்குதனது அறக்கட்டளை மூலம் 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.700 கோடி) வழங்குவதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது

பரவலைக் கட்டுப்படுத்த

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. எனினும், தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம்
கட்டுக்குள் வந்தபாடில்லை.

சில நாட்களாக கொரோனா

குறிப்பாகக் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண முடிகிறது. எனினும், இந்த எண்ணிக்கையை
கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம், விரைவில் கொரோனா கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

photo courtesy: ANI

Best Mobiles in India

English summary
PM Modi and Bill Gates Discussed about COVID-19 Vaccine : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X