மின்சார போக்குவரத்திற்கான சாலை வரைபடம் & திட்ட விபரங்களை அறிவிக்கும் பிரதமர் மோடி.! டிசைன் இதுதான்.!
செப்டம்பர் 7 ம் தேதி புதுடில்லியில் நடக்கவிருக்கும் உலக போக்குவரத்து உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி எலக்ட்ரிக் வாகன சேவைக்கு தேவையான முக்கிய கொள்கை பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகி
செப்டம்பர் 7 ம் தேதி புதுடில்லியில் நடக்கவிருக்கும் உலக போக்குவரத்து உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி எலக்ட்ரிக் வாகன சேவைக்கு தேவையான முக்கிய கொள்கை பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் எலேக்ட்ரிக் வாகன சேவைக்கான சாலை வரைபடம் மற்றும் இ-இயக்கத்திற்கான வரைபடத்தை வெளியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேம் இந்தியா(FAME INDIA)
ஃபேம் இந்தியா(FAME INDIA) எனப்படும் மத்திய அரசின் திட்டம், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்த உருவாக்கப்பட்டது. மோடி வரும் வாரத்தில் ஃபேம் இந்தியா பற்றிய இரண்டாம் கட்ட விபரங்களை அறிவிப்பார் என்று கூறபடிப்படுகிறது. இரண்டாம் கட்ட விபரங்களாகச் சாலை வரைபடம், சார்ஜ் உள்கட்டமைப்பு தகவல், மானியம் மற்றும் அனைத்து விபரங்களையும் நரேந்திர மோடி அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மத்திய அமைச்சரவை குழு
சாலைப் போக்குவரத்து அமைச்சகங்கள் உள்ளடக்கிய நிதி, மின்சாரம், கனரக தொழிற்சாலைகள் ஆகியவற்றின் அமைச்சகங்களை, மத்திய அமைச்சரவை குழு அறிவிக்கும் . அரசாங்கத்தின் திங்க் நிடி ஆயோக், ஆகஸ்ட் 23 அன்று கார்கள் உட்பட அனைத்து வகை மின்சார வாகனங்களின் மானியங்கள் ஃபேம் இரண்டாம் கட்டத்தின் கீழ் உறுதி செய்யப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேம் இந்தியா பாலிசி
இந்தியாவில் மின் இயக்கத்தை மேம்படுத்துவதற்காக ஃபேம் இந்தியா பாலிசி அமலாக்கம் மற்றும் பிற அமைச்சகங்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர். நான்கு சக்கர வாகனகள் மீதான மானியம் என்பது முக்கிய கருத்து முடிவுகளில் ஒன்றாகும்.

விரைவில் ஒப்புதல்
ஃபேம் இந்தியா 2 இன் விதிமுறைகளை, குழு இப்போது முடிவு செய்துள்ளது. ஒப்புதல் பெறுவதற்கு விரைவில் மத்திய அமைச்சரவை முன் சமர்ப்பிக்கப்படும் என்று குழு தெரிவித்துள்ளது.

5,500 கோடி மானியம்
பிரதமர் ஃபேம் இந்தியா 2 பாலிசி இன் முக்கிய விபரங்களை அனைவர்க்கும் அறிவிப்பார், அதில் சார்ஜிங் நிலையங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் 5,500 கோடி மானியம் பற்றிய விபரங்கள் அவர் தெரிவிப்பார். இ- ரிக்ஷா உரிமத்திற்கான முக்கிய விபரங்கள் போன்ற அனைத்தையும் விரிவாக அபிவிப்பர் என்று தெரிகிறது. இ-ஸ்கூட்டர்க்கான உரிமம் மற்றும் இ-கார் ,ஆற்றும் இ-வாகன சேவைகளின் நிபந்தனைகள் மற்றும் விபரங்களை அவர் மக்களுக்குத் தெரிவிப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications