ஜியோ போல மாஸ் திட்டம்.. 50 ஆயிரம் பேருக்கு 4K டிவி இலவசம்.. Telly நிறுவனம் விளம்பரம்!
புதிய ஸ்மார்ட் டிவி வாங்க பிளான் போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், டிவி வாங்க பணம் சேர்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. டெலி (Telly) என்னும் புதிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இலவசமாக 50 ஆயிரம் பேருக்கு 55 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி வழங்க இருப்பதாக விளம்பரம் செய்துவருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
நமது வீட்டில் எவ்வளவு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்தாலும், டிவி (TV) என்பது எப்போதும் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். சொல்லப்போனால், வீட்டிற்கு கூடுதல் அழகு சேர்ப்பதில் டிவி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனாலேயே மக்கள் டிவிகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இப்போது புதுப்புது டிசைன்களில் மினி தியேட்டர் போன்ற அனுபவத்தை கொடுக்கும் வகையில் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

நம்மில் பலருக்கு 55 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி வாங்குவது நீண்ட நாள் ஆசையாக இருக்கும். அதற்காக பணம் சேர்க்கவும் சிலர் தொடங்கியிருப்பார்கள். இன்னும் சிலர் நல்ல ஆஃபர்கள் வரும் வரை காத்திருந்து வாங்க திட்டமிட்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டிவி பிரியர்களையும் ஒரு செய்தி ஆரவாரம் செய்ய வைத்திருக்கிறது.
டெலி எலக்ட்ரானிக்ஸ் (Telly Electronics) என்னும் நிறுவனம் செய்துவரும் விளம்பரம், ஜியோ போலவே அட்டகாசமாக உள்ளது. இந்த நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதால், முதலில் 50 ஆயிரம் பேருக்கு 2 டிஸ்பிளே கொண்ட 55 இன்ச் 4K ஸ்மார்ட் டிவியை முற்றிலும் இலவசமாக வழங்க இருப்பதாக விளம்பரம் செய்துவருகிறது. புளூட்டோ டிவி (Pluto TV) நிறுவனத்தின் இணை நிறுவனரான இல்யா போசின் (Ilya Pozin), டெலி எலக்ட்ரானிக்ஸ் என்னும் புதிய டிவி தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவத்தின் ஸ்மார்ட் டிவிகளை பிரம்மாண்டமான முறையில் மக்களிடையே கொண்டு சேர்க்கவும், விற்பனையில் மிகப்பெரும் லாபத்தை பெறவும் பல கோடி ரூபாய்களை செலவு செய்து விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளார். அதனடிப்படையில் 50 பேருக்கு 55 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி வழங்க இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிவி 2 டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது மக்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்த டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட் டிவி (Dual Screen Smart TV) 55 இன்ச் 4K மெயின் டிஸ்பிளே உடன் செகண்டரி டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. டெலி ஓஎஸ் (TellyOS) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓஎஸ்சில் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற தேர்ட் பார்ட்டி ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்களை (Third-Party Streaming Apps) பயன்படுத்த முடியாது.
இருப்பினும், ருகு (Roku), அமேசான் ஃபயர் ஸ்டிக் (Amazon Fire Stick), ஆப்பிள் டிவி (Apple TV) ஆகிவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஆண்டிராய்டு வரிசையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று எச்டிஎம்ஐ போர்ட் (HDMI inputs), இரண்டு யுஎஸ்பி போர்ட் (USB inputs) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவியின் விலை ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த இலவச டிவியை எப்படி பெறுவது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. டெலி நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








