ப்ளூட்டோ : ஒரு விசித்திர உலகம் (புகைப்படங்கள்)..!

|

விஞ்ஞானிகள் கற்பனைகூட செய்து பார்க்காத அளவில், ப்ளூட்டோவின் நிலப்பகுதி இருப்பதை நாசவின்வின் நியூ ஹாரிஸான்ஸ் (New Horizons) ஹை-ரெசெல்யூஷன் (High-Resolution) கலர் புகைப்படங்கள் காட்சிப்படுத்தியுள்ளன.

உலகம் 15 நாட்களுக்கு இருளில் மூழ்கும் : நாசா உறுதி..!?

ப்ளூட்டோவின் விதவிதமான கணிக்க முடியாத நிலப்பகுதி விளக்கங்களையும், 'மிருகத்தின் தோல்கள்' போன்ற தெளிவான அமைப்புகளையும் (Patterns) வெளியான புகைப்படங்கள் துல்லியமாக காட்சிப்படுத்துகின்றன..!

நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!

நாசா வெளியிட்டுள்ள ஹை-ரெசெல்யூஷன் புகைப்படங்களையும் மற்றும் அது சார்ந்த சில தகவல்களையும் கீழ் வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

பாம்பின் தோல் :

பாம்பின் தோல் :

இந்த புகைப்படத்தில் புவியியலை விடவும், மரத்தின் காய்ந்த பட்டை போன்ற அமைப்பும், பாம்பின் தோல் போன்ற அமைப்பும் தான் கண்களுக்கு புலப்படுகின்றது என்று நாசா தெரிவித்துள்ளது.

உருப்படிவம் :

உருப்படிவம் :

விஞ்ஞானிகள் இது போன்ற உருப்படிவம் (Patterns) எப்படி உருவாகின என்பது தெரியவில்லை என்ற போதிலும் இம்பாக்ட் ஆஃப் ப்ளேட் டெக்டோனிக்ஸ் (Impact of plate tectonics) அல்லது ஃப்ரோஸன் கேஸஸ் (frozen gases) ஆகிய கோட்பாடுகள் (Theories) காரணமாக இருக்கலாம் என்று கோணத்தில் ஆராய்கின்றனர்.

நுட்பமான வண்ணம் :

நுட்பமான வண்ணம் :

ப்ளூட்டோவின் இந்த கலர் புகைப்படமானது கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி எடுக்கப்பட்டது என்பதும், தனக்கே உரிய நுட்பமான வண்ணங்களில் இருப்பதை இது காட்சிப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

தெளிவு :

தெளிவு :

இது ப்ளூட்டோவின் சிலிண்டரிக்கல் ப்ரோஜக்ஷன் மேப் (cylindrical projection map) ஆகும். இதுவரை தெளிவாக எடுக்கப்பட்ட ப்ளூட்டோ புகைப்படங்களில் தலைசிறந்தது இந்த புகைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மலைப்பாறைகள் :

மலைப்பாறைகள் :

ஜூலை 15, 2015 அன்று, நியூ ஹாரிஸான் விண்கலம் ப்ளூட்டோவை மிகவும் நெருங்கிய போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் ப்ளூட்டோவின் பிளவுபட்ட மலைப்பாறைகள் தெளிவாக காட்சிப்படுத்தப்படுகின்றன.

சமவெளி :

சமவெளி :

ப்ளூட்டோவின் இந்த குறிப்பிட்ட சமவெளி பகுதியானது தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு ஐஸ் மலைகளுக்கு நடுவில் இருப்பதை இந்த புகைப்படத்தில் தெளிவாக காண முடிகிறது.

சூரிய உதயம் :

சூரிய உதயம் :

ப்ளூட்டோவின் சூரிய உதய நேரத்தில் எடுக்கப்பட்ட நியூஹாரிஸானின் அற்புதமான புகைப்படமான இது மிகவும் நெருக்கமாக சென்று எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..!

1800 கிலோமீட்டர்கள் :

1800 கிலோமீட்டர்கள் :

இது ப்ளூட்டோவின் தொகுப்புமுறை கண்ணோட்டத்தில் (synthetic perspective) எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இது ப்ளூட்டோவில் இருந்து சுமார் 1800 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

புகைப்படங்கள் : நாசா

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pluto's a whole new world: Incredible new high-resolution color images reveal strange 'animal skin' terrain on dwarf planet. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X