இந்தியாவின் பிட்காயின் வணிகத்திற்கான முதல் மொபைல் அப்ளிகேஷன்: புளூட்டோ எக்ஸ்சேன்ஞ்
உலகளவில், பிட்காயின் அசுர வேகத்தில் பரவி வருகிறது. மெய்நிகர் நாணயத்தின் பயன்கள் மற்றும் சிக்கல்கள் குறித்த காரியங்கள், பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தாலும், வல்லுநர்களைப் பொறுத்த வரை, பரிவர்த்தனை மதிப்பை காட்டிலும் ஒரு மாற்றான சேமிப்பு மதிப்பாக பிட்காயின் தெரிகிறது.

கடந்த காலத்தில் நடைபெற்ற சில நிதி மோசடிகளைப் போல பிட்காயின் முதலீடு அமையாது என்ற முழு நம்பிக்கையில் உள்ள இளம் தலைமுறையினர், மெய்நிகர் நாணயத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள்.
இந்திய சந்தைக்குள்ளும் பிட்காயின், ஒரு புயலைப் போல நுழைந்துள்ளது. பேரழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ள மெய்நிகர் நாணயத்தைக் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதில் முதலீடு செய்ய மக்கள் தயாராகி வருகிறார்கள்.

இந்தியாவில் பிட்காயின் தீவிரமாக பரவி வருவதைக் கண்டு, துபாயைச் சேர்ந்த கிரிப்டோகரன்ஸி டீலரான புளூட்டோ எக்ஸ்சேன்ஞ் நிறுவனம், இந்தியாவின் முதல் பிட்காயின் வணிக அப்ளிகேஷனின் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது.
இது, ஒரு மொபைல் நம்பரைப் பயன்படுத்தி பிட்காயின் பரிவர்த்தனைகளைச் செய்ய உதவும் முதல் அப்ளிகேஷன் அடிப்படையிலான வாலெட் ஆகும். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஆகியவற்றில் கிடைக்கும் இந்த அப்ளிகேஷன், பணம் செலுத்தும் செயல்பாடுகள், நிதிநிலை சந்திப்புகள் மற்றும் வங்கிகள் ஆகியவை இணைந்து செயல்படும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இது செயல்படுகிறது.
மற்ற அப்ளிகேஷன்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் பிட்காயினின் முகவரிகள் மிக நீளமானவை என்பதோடு அதை நகலிடும் போது பிழை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று மேம்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் புளூட்டோ எக்ஸிசேன்ஞ் பரிவர்த்தனைகள் அனைத்தும் மொபைல் நம்பர்களை மட்டுமே பயன்படுத்தி செய்யப்படுவதால், அவை 10 இலக்கங்களை மட்டுமே கொண்டுள்ளன. ஐஏஎன்எஸ் அறிக்கையில், ஒரு மொபைல் நமபர் மூலம் பிட்காயினை வாங்க, விற்க, சேமிக்க மற்றும் செலவு செய்ய ஒரு நான்கு இலக்க தனியார் அடையாள எண் (பின்) தேவைப்படுகிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்முறை பயன்பாட்டு அப்ளிகேஷனாக திகழும் இது, பணம் செலுத்துதல், பணம் அனுப்புதல், வியாபாரங்கள் இடையிலான வணிகத்தொடர்பு, சங்கிலித் தொடர் நிதி ஆதாரம், சொத்து நிர்வாகம் மற்றும் வணிகம் செய்தல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு உதவுகிறது.
கடந்த ஓராண்டில் பிட்காயினின் மதிப்பு ஒரு அபரிமித வளர்ச்சியை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மெய்நிகர் நாணயத்திற்கு 1,500 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பு கிடைத்திருப்பது, நிதித்துறை உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் ஒரு பிட்காயினுக்கு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக மதிப்பு இருப்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. பிட்காயின் காய்ச்சல் உங்களையும் தாக்கி இருந்தால், இந்த புதிய அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து ஒரு முயற்சியைச் செய்து பாருங்கள். ஆனால் ஒரு முதலீட்டை செய்யும் முன் அதைக் குறித்து நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications