'போக்கிமான் கோ' உடம்புக்கு நல்லது.!

By Meganathan
|

ஜிபிஎஸ் பயன்படுத்தும் புதுவகை ஆக்மென்ட்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைச் சார்ந்த மொபைல் கேமான போக்கிமான் கோ உலகம் முழுக்க எதிர்பார்த்ததை விட அதிகளவு வெற்றியடைந்தது. இந்த கேம் விளையாடுவதால் அமெரிக்காவில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மொபைல் போன் கேம் என்ற வாக்கில் போக்கிமான் கோ பல்வேறு சாதனைகளை படைத்து வந்த போதிலும், இந்த கேம் குறித்த குற்றச்சாட்டுகளும் அதிகரித்தன. அந்த வகையில் போக்கிமான் கோ விளையாடினால் உடலுக்கு நல்லது என டெக்சாஸ் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்து

கருத்து

டெக்சாஸ் A&M நர்சிங் கல்லூரியில் துணை பேராசிரியராகப் பணியாற்றி வரும் மேட் ஹாஃப்மேன், 'மொபைலில் போக்கிமான் கோ விளையாடும் போது பல்வேறு இடங்களுக்கு நடந்து செல்வதால் ஒருவர் தன்னை அறியாமல் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.

டிரெயினர்ஸ்

டிரெயினர்ஸ்

கேமினை தொடர்ந்து விளையாடும் போது டிரெயினர் என அழைக்கப்படும் பிளேயர்கள் நிச்சயம் நடந்து சென்று போக்கிமான்களை கண்டுபிடிக்க வேண்டும். இதனை போக்கிஸ்டாப் என அழைக்கப்படும் பிரத்தியேக இடங்களில் தான் இருக்கும்.

பொருள்

பொருள்

போக்கிஸ்டாப் செல்லும் போது போக்கிபால் மற்றும் போக்கி எக் போன்ற கேமிற்கு பயனுள்ள சில பொருள்களைப் பெற முடியும். போக்கிஸ்டாப் சென்று வித்தியாசமான போக்கிமான்களை பிடித்து போக்கி முட்டைகளை அடைய அதிக தூரம் நடக்க வேண்டும்.

பயன்

பயன்

'பொழுதுபோக்கிற்காக விளையாடத் துவங்கி, பல்வேறு உடல் நலன்களை வழங்குவதால் தினமும் போக்கிமான் கோ விளையாடுகின்றேன்' என ஹாஃப்மேன் தெரிவித்துள்ளார்.

உறவு

உறவு

மேலும் 'இந்த கேம் விளையாடும் போது மக்களை ஒருங்கிணைக்கப் பாலமாக அமைகின்றது. இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு பயன் கிடைக்கின்றது' என ஹாஃப்மேன் தெரிவித்துள்ளார்.

பயிற்சி

பயிற்சி

உங்களுக்கும் உடற்பயிற்சி செய்ய கடுப்பாக இருந்தால், ஆண்ட்ராய்டு போனில் போக்கிமான் கோ இன்ஸ்டால் செய்யுங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Playing Pokemon Go is good for health Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X