'ப்ளேபாய்' இப்பொழுது ஆப்பிள் ஸ்டோரில்...

Written By:

புகழ்பெற்ற ப்ளேபாய் நிறுவனத்தின் மொபைல் போன்களுக்கான அப்ளிகேசன் இப்பொழுது ஆப்பிள் ஸ்டோரில் இலவசமாகவே கிடைக்கிறது.

'ப்ளேபாய்' இப்பொழுது ஆப்பிள் ஸ்டோரில்...

ஆப்பிள் ஐபோன்களும், ஐபேட்களும் தயாரிக்கப்படுவது இங்குதான்...

ஆனால் நீங்க நினைக்கறது இருக்காது பாஸு...என ப்ளேபாய் நிறுவனமே அறிவித்துள்ளது. ஏனெனில் ப்ளேபாய் என்றாலே நிர்வாணப்படங்களைக் கொண்டு நாளேடு நடத்தும் நிறுவனம் என்ற பெயரும் உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொருத்தவரையிலும் இம்மாதிரியான நிர்வாண படங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் நிலையில் ப்ளேபாய் அப்ளிகேஷனை அனுமதித்தது எப்படி என்பதை பலரும் ஏற்க மறுக்கின்றனர்.

ஆனால் ப்ளேபாய் தரப்பிலிருந்து இதுதொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, "இந்த புதிய ஐபோன் அப்ளிகேசனில் நாங்கள் நிர்வாண அழகிகளின் படங்களை வெளியிடப்போவதில்லை. மாறாக மாற்றம் செய்து எடுக்கப்படும் அழகிய படங்களையும், நடிகர் நடிகையர் கலந்துரையாடல் போன்றவற்றையே வெளியிடவுள்ளோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அப்ளிகேசன் இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்த மாதத்திற்கு $1.99 அமெரிக்க டாலர்களும், வருடத்திற்கு $19.99 டாலர்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ப்ளேபாய் அப்ளிகேசன் ஆன்ட்ராய்டு ஸ்டோரிலும் இதேபோல் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot