Amazon, Flipkart-ல் "இதை" கூவிக்கூவி விப்பாங்க.. அவசரப்பட்டு வாங்கிடாதீங்க!

|

ஒவ்வொரு முறையும் நீங்கள் Amazon அல்லது Flipkart பக்கத்திற்கு செல்லும் போது, ​Refurbished என்கிற குறிச்சொல்லின் கீழ் பட்டியலிடப்பட்ட சில ஸ்மார்ட்போன்களை / ஐபோன்களை பார்க்க நேரிடும் அல்லவா?

உண்மையில் ரீஃபர்பிஷ்டு போன்கள் என்றால், அதாவது "புதுப்பிக்கப்பட்ட போன்கள்" என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அல்லது அதைப்பற்றிய எந்த தெளிவும் இல்லாமல், விலை குறைவாக உள்ளதே என்று ஒரு ரீஃபர்பிஷ்டு ஸ்மார்ட்போனை / ஐபோனை வாங்க திட்டமிட்டு உள்ளீர்களா? அல்லது வாங்கியே விட்டீர்களா?

அவரசரப்பட்டு விட்டீர்கள்!

அவரசரப்பட்டு விட்டீர்கள்!

"ரீஃபர்பிஷ்டு" என்கிற வார்த்தையின் பின்னணியில் இருக்கும் சமாச்சாரங்களை பற்றிய எந்த தெளிவும் இல்லாமல் நீங்களொரு ரீஃபர்பிஷ்டு போனை வாங்கி விட்டீர்கள் என்றால், மன்னிக்கவும் - நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள்!

ரீஃபர்பிஷ்டு போன்கள் என்றால் என்ன? அவைகள் ஏன் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன? ஒரு ரீஃபர்பிஷ்டு ஸ்மார்ட்போனை வாங்கும் முன் நாம் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன? வாங்கிய பின் நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்று கருதப்படும் சிக்கல்கள் என்னென்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரீஃபர்பிஷ்டு போன்கள் என்றால் என்ன?

ரீஃபர்பிஷ்டு போன்கள் என்றால் என்ன?

சிறிய அளவிலான சேதம் அல்லது அன்பாக்ஸ் செய்து பின் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கும் பட்சத்தில், அது சரி செய்யப்பட்டு, மீண்டும் விற்பனைக்கு வரும் போன்களே - ரீஃபர்பிஷ்டு போன்கள், அதாவது புதுப்பிக்கப்பட்ட போன்கள் ஆகும்.

இதுபோன்ற ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, ​நீங்கள் "ரீஃபர்பிஷ்டு", "ப்ரீ-ஓன்டு" (Pre-Owned) அல்லது "ரீகண்டிஷன்டு" போன்ற சொற்களை காண முடியும்.

இந்த வார்த்தைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளாக தெரிந்தாலும், அது தரும் அர்த்தம் என்னவோ - பெரும்பாலான நேரங்களில் - ஒரே மாதிரியாகவே இருக்கும்.

Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!

ரீஃபர்பிஷ்டு போன்கள் ஏன் மலிவான விலைக்கு விற்பனை செய்யபப்டுகின்றன?

ரீஃபர்பிஷ்டு போன்கள் ஏன் மலிவான விலைக்கு விற்பனை செய்யபப்டுகின்றன?

நீங்கள் ஒரு ரீஃபர்பிஷ்டு போனை வாங்கும் போது, அதற்கான "ஒரிஜினல்" உரிமையாளர் நீங்கள் அல்ல என்பதையும், அந்த போனிற்கு ஏற்கனவே ஒரு உரிமையாளர்கள் இருந்துள்ளார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்த உரிமையாளர் குறிப்பிட்ட போனை கடைக்கோ அல்லது நெட்வொர்க் கேரியருக்கோ திருப்பி அனுப்பியிருக்கலாம்.

பெரும்பாலான சமயங்களில் ஒரு ஸ்மார்ட்போன் அன்பாக்ஸ் செய்த பின்னரே திருப்பி அனுப்பப்படுகிறது. அதற்காக எல்லா ரீஃபர்பிஷ்டு போன்களுமே சேதம் அடைந்தது என்று நினைத்துக்கொள்ள கூடாது. சிலருக்கு குறிப்பிட்ட போன்கள் பிடிக்காமல் போய் இருக்கலாம்.

மற்ற சந்தர்ப்பங்களில், ஸ்மார்ட்போனில் சில உற்பத்தி குறைபாடுகள் இருந்து இருக்கலாம். இதெல்லாம் சரி செய்யப்பட்ட பின்னர், அதாவது ஒரு ஸ்மார்ட்போன் "புதுப்பிக்கப்பட்ட" பின்னர், மீண்டும் விற்பனைக்கு வரும் போது வேறு வழியே இல்லாமல் அது குறைந்த விலை நிர்ணயத்தையே பெறும்.

முடிந்தவரை ரீஃபர்பிஷ்டு போனை வாங்க வேண்டாம்; ஏன்?

முடிந்தவரை ரீஃபர்பிஷ்டு போனை வாங்க வேண்டாம்; ஏன்?

சிறிதளவு பணத்தை சேமிக்கும் நோக்கத்தின் கீழ் ஒரு "புதுப்பிக்கப்பட்ட" ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால் - அலெர்ட்!

ஏனெனில் ரீஃபர்பிஷ்டு போன்கள் நீங்கள் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றன!

இதன் பின்னால் உள்ள மிகவும் முக்கியமான காரணம் என்னவென்றால், iOS அல்லது Android-இன் காலாவதியான வெர்ஷன்களில் இயங்கும் சற்றே பழைய மாடல்கள், அவற்றின் உற்பத்தியாளர்களிடமிருந்து முக்கியமான செக்யூரிட்டி பேட்ச்களையோ, அப்டேட்களையோ பெறுவதில்லை. இந்த ஒரு பாதுகாப்பு ஓட்டை போதும், நீங்கள் மிகவும் மோசமான சைபர் தாக்குதல்களுக்கு ஆளாக!

ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!

ஒரு ரீஃபர்பிஷ்டு போனை வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மேட்டர்கள்!

ஒரு ரீஃபர்பிஷ்டு போனை வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மேட்டர்கள்!

"ஹேக் செய்யுற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லங்க! விலை கம்மியா இருக்கு.. ஒரு ரீபர்பிஷ்டு போனை வாங்கத்தான் போறேன்!" என்கிறவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விடயங்களும் உள்ளன.

முதலில் - உத்தரவாதம், புத்தம் புதிய மாடல்களைப் போலவே, புதுப்பிக்கப்பட்ட போன்களும் ஒரு குறிப்பிட்ட அளவிலான உத்தரவாத அட்டையுடன் வருகின்றன. ஏனெனில் தெரிந்தே ஒரு ரீஃபர்பிஷ்டு ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு - உத்தரவாதம் மட்டுமே!

ரீஃபர்பிஷ்டு போன் ஒரு திருட்டு போன் ஆக கூட இருக்கலாம்!

ரீஃபர்பிஷ்டு போன் ஒரு திருட்டு போன் ஆக கூட இருக்கலாம்!

ரீஃபர்பிஷ்டு ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, எப்பொழுதுமே Flipkart, Amazon போன்ற புகழ்பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவதை உறுதிசெய்து கொள்ளவும். அப்போது தான் பர்சேஸ் பில், உத்தரவாதம் உட்பட அனைத்து பொதுவான ஆவணங்களும் உங்களுக்கு கிடைக்கும். இல்லையெனில் நீங்கள் வாங்குவது ஒரு திருடப்பட்ட போன் ஆக கூட இருக்கலாம்.

ரீஃபர்பிஷ்டு சந்தையில் போலியான ஸ்மார்ட்போன்களும், திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களும் அடங்கும். எனவே எப்போது எந்த ஸ்மார்ட்போனை வாங்கினாலும் *#06# என்று டயல் செய்து IMEI நம்பரை சரிபார்க்கவும்.

ரிட்டர்ன் பாலிசி-ஐ சரிபார்க்கவும்

ரிட்டர்ன் பாலிசி-ஐ சரிபார்க்கவும்

புதிய மாடல்களை போலவே, புதுப்பிக்கப்பட்ட போன்களும் ரிட்டர்ன் பாலிசி உடன் வருகின்றன. ஒருவேளை நீங்கள் வாங்கும் மாடலுக்கு ரிட்டர்ன் பாலிசி இல்லை என்றால், அந்த போனை வாங்க வேண்டாம்.

ஏற்கனவே சில சிக்கல்கள் இருந்ததால் தான் அது ரீஃபர்பிஷ்டு போன் ஆக உருமாறி உள்ளது, எதிர்காலத்தில் அதே சிக்கல்கள் மீண்டும் உருவாகும் வாய்ப்புகள் இருப்பதால் ரிட்டர்ன் பாலிசி மிகவும் முக்கியம்.

Best Mobiles in India

English summary
Planning to buy a Refurbished phone it is Not Safe You need to Cross Check many things Buying Guide

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X