அவசரப்பட்டு 5G போன் வாங்காதீங்க.. எந்தெந்த போனில் எப்போது 5G கிடைக்கும்? சியோமி, விவோ, சாம்சங் லிஸ்ட்!

|

உங்கள் போன் இன்னும் 5ஜி ஆதரவு பெறவில்லை என்றால் நீங்கள் மட்டும் 5ஜி சேவையை உபயோகிக்க காத்திருக்கவில்லை, உங்கள் போனும் 5ஜி அப்டேட்டிற்கு காத்திருக்கிறது என்று அர்த்தம். உங்கள் போனில் 5ஜி ஆதரவுக்கான அப்டேட் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவலை பார்க்கலாம். இதை தெரிந்துக் கொண்டால் அதற்கேற்ப 5ஜி சேவை அனுபவத்துக்கு நீங்கள் உங்களை தயார் செய்து கொள்ளலாம்.

5ஜி சேவை எப்போது கிடைக்கும்?

5ஜி சேவை எப்போது கிடைக்கும்?

5ஜி சேவைகளை தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் அணுகலாம். ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஒவ்வொரு பகுதியிலும் படிப்படியாக 5ஜி சேவை வழங்கி விரிவுப்படுத்தி வருகிறது. நீங்கள் 5ஜி சேவையை அணுக 5ஜி ஸ்மார்ட்போன் வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் 5ஜி போன் வைத்திருக்கும் அனைவராலும் 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது.

5ஜி அப்டேட் அவசியம் மக்களே

5ஜி அப்டேட் அவசியம் மக்களே

ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 5ஜி சேவைகளை வழங்கி சோதனை செய்து வருகிறது. விரைவில் அனைத்து நகரங்களிலும் முழுமையாக 5ஜி சேவை கிடைக்க இருக்கிறது.

ஒருவர் 5ஜி போன் உடன் 5ஜி கிடைக்கும் பகுதியில் இருந்தும் அவரால் 5ஜி சேவையை பயன்படுத்த முடியவில்லை என்றால் அதற்கு காரணம் இருக்கிறது, அதாவது அவர்கள் 5ஜி அப்டேட்டை பெறவில்லை என்று அர்த்தம்.

அனைத்து போனுக்கான 5ஜி அப்டேட்களையும் அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் வழங்க வேண்டும். எந்தெந்த போன்களுக்கு எப்போது 5ஜி சேவை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

எப்போது 5ஜி சேவை கிடைக்கும்?

எப்போது 5ஜி சேவை கிடைக்கும்?

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் 5ஜி சேவைக்கான அப்டேட்களை தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கத் தொடங்கி இருக்கிறது. எந்தெந்த போனுக்கு எப்போது 5ஜி சேவை கிடைக்கும் என்ற தகவலை விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் புதிதாக 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், எந்தெந்த போன்களுக்கு எப்போது 5ஜி சேவை கிடைக்கும் என்பதை அறிந்துக் கொண்டு புது போனை வாங்குங்கள்.

நத்திங் போன் (1) 5ஜி ஆதரவு

நத்திங் போன் (1) 5ஜி ஆதரவு

நத்திங் போன் (1) பயனர்கள் உடனடியாக 5ஜி அணுகலை பெற முடியும். இந்த நிறுவனம் ஏற்கனவே 5ஜி ஆதரவுக்கான அப்டேட்டை வழங்கிவிட்டது. இந்த தகவலை நிறுவனம் ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. நத்திங் பயனர்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ 5ஜி ஆகிய இரண்டின் சேவையையும் பெற முடியும்.

OnePlus 5G சேவை

OnePlus 5G சேவை

ஒன்பிளஸ் நிறுவனம் 5ஜி ரெடி ஆதரவோடு பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் நிறுவனம் குறிப்பிட்ட மாடல்களில் 5ஜிக்கான புதுப்பிப்பை வழங்கவில்லை. அதேபோல் நிறுவனம் எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்ற காலவரிசையையும் வெளியிடவில்லை.

Xiaomi 5G சேவை

Xiaomi 5G சேவை

சியோமி தனது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் தீபாவளிக்குள் 5ஜி ஆதரவு அப்டேட்டை வழங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு இன்னும் அதிக நாள் இல்லை எனவே சியோமி பயனர்கள் விரைவில் 5ஜி அப்டேட்டை பெறுவார்கள்.

உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி அப்டேட் கிடைத்துவிட்டதா என்பதை செட்டிங்ஸ்க்குள் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் கிடைத்துவிட்டதா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

Xiaomi 12 Pro 5G, Mi 11X Pro, Xiaomi 11i, Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் போன்ற ஸ்மார்ட்போன்கள் தற்போதே அப்டேட்டை பெற்றுவிட்டன என தெரிவிக்கப்படுகிறது.

மோட்டோரோலா 5G சேவை

மோட்டோரோலா 5G சேவை

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா மற்றும் மோட்டோ எட்ஜ் 30 ஃப்யூஷனுக்கான அப்டேட்டை முன்னதாகவே வழங்கிவிட்டன. எனவே மோட்டோ பயனர்கள் செட்டிங்ஸ்க்குள் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் கிடைத்துவிட்டதா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

Moto G62 5G, Moto G82 5G மற்றும் Moto Edge 30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 25 அன்று 5ஜி அப்டேட்டை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moto G71 5G, Moto Edge 30 Pro, Moto G51 5G, Moto Edge 20 Pro, Moto Edge 20, மற்றும் Moto எட்ஜ் 20 ஃப்யூஷன் ஆகிய ஸ்மார்ட்போன்கள் நவம்பர் 5 முதல் அப்டேட்டைப் பெறும்.

Pixel, Samsung 5G ஸ்மார்ட்போன்

Pixel, Samsung 5G ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போனுக்கான அப்டேட்டை அடுத்த மாதம் அதாவது நவம்பர் முதல் அப்டேட்டை வெளியிடத் தொடங்கும் என உறுதியளித்துள்ளது. டிசம்பரில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனுக்கு புதுப்பிப்பை கூகுள் வழங்காது என கூறப்படுகிறது. ஆனால் பிக்சல் 7 சீரிஸ்-க்கான அப்டேட்டை நிறுவனம் விரைவில் வெளியிடும் என குறிப்பிடுகிறது.

Apple iPhone 5G சேவை

Apple iPhone 5G சேவை

ஐபோன்களுக்கான 5ஜி அப்டேட் பணிகளை தொடங்கிவிட்டதாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு சற்று நேரம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஆப்பிள் அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vivo போன் 5G சேவை

Vivo போன் 5G சேவை

விவோ நிறுவனம் சரியான 5ஜி அப்டேட் தேதியை வெளியிடவில்லை. இருப்பினும் இந்த மாதத்திற்குள் ஓஎஸ் அப்டேட்டை நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Planning to buy a new 5G smartphone? When will Xiaomi, Vivo, Samsung smartphone get 5G update?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X