Subscribe to Gizbot

வாங்கிடாதீங்க.! ஐபோன் எக்ஸ் மீதான திகலை கிளம்பும் 4 புகார்கள்.!

Written By:

2015-ல், ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு "கொடூரமான நேரம்" ஏற்பட்டது. பாக்கெட்டுகளுக்குள் அழுத்தம் பெறும் அல்லது வளைக்கப்படும் போது ஐபோன் 6 வளைகிறது; அது பலவீனமாக இருக்கிறதென்ற புகார்கள் உலகம் முழுவதும் பரவின. அதுமாதிரியான வரலாறு, மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் எக்ஸ் மூலம் ஏற்பட்டுள்ளது.

வாங்கிடாதீங்க.! ஐபோன் எக்ஸ் மீதான திகலை கிளம்பும் 4 புகார்கள்.!

ஆப்பிளின் சமீபத்திய ஐபோன் எக்ஸ் அதன் தொடக்கத்திலிருந்து பல சிக்கல்களை (புகார்) எதிற்கொண்டு வருகிறது. மிகவே மிக விலைமிகுந்த ஆப்பிள் தொலைபேசியான ஐபோன் எக்ஸ்-ன் 64ஜிபி மாறுபாடு ரூ.89,000/-க்கும், மற்றும் அதன் 256ஜிபி மாறுபாடு கற்பனைக்கு எட்டாத ரூ.1,02,000/-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வாங்கிடாதீங்க..!!

வாங்கிடாதீங்க..!!

ஐபோன் எக்ஸ் சாதனத்தை வாங்கலாமா என்பதற்கு 100 காரணங்கள் உண்டு. அதெல்லாம் கேட்டு கேட்டு "புளிச்சுப்போன" நிலையில், ஆப்பிள் எக்ஸ்-ஆ.?? வாங்கிடாதீங்க.. என்று திகலை கிளம்பும் தொடர்ச்சியான 4 புகார்களை பற்றிய தொகுப்பே இது.

#01 பச்சை நிற கோடு.!

#01 பச்சை நிற கோடு.!

பல ஐபோன் எக்ஸ் பயனர்கள், அவர்களின் ஸ்க்ரீனில் ஒரு நிற பச்சை வரி ஏற்படுவதை பார்த்துள்ளனர். பதிவாகியுள்ள புகார்களின் படி, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக ஊடக பயன்பாடுகளைப் பயன்படுத்துகையில் கூறப்படும் பச்சை நிற கோடானது வெளிப்படுகிறது.

#02 ஸ்க்ரீன் பர்ன் சிக்கல்.!

#02 ஸ்க்ரீன் பர்ன் சிக்கல்.!

ஞாபகம் இருக்கிறதா.? பழைய சிஆர்டி தொலைக்காட்சிகளில் டிவியை ஆப் செய்தபின்னரும் கூட சில நேரங்களில் ஸ்க்ரீனில் காட்சிகள் தோன்றுமே.? அதுபோன்றதொரு நிலைப்பாட்டில் தான் கோரப்படும் பச்சை நிற கோடுகள் உள்ளன. ரீஸ்டார்ட் செய்த பின்னரும் கூட அந்த பச்சை நிறக்கோடுகள் மறைவதாய் இல்லை என்பதால் சிலர் இதை "ஸ்க்ரீன் பர்ன்" () என்று புகார் அளித்தவண்ணம் உள்ளனர்.

#03 ஜிபிஎஸ் சிக்கல்கள்.!

#03 ஜிபிஎஸ் சிக்கல்கள்.!

ஆப்பிள் இன்சைடர் அறிக்கையின் படி, பல பயனர்கள் ஐபோன் எக்ஸ் கொண்டுள்ள ஜிபிஎஸ் சிக்கல்களை பற்றி பல சமூகவலைத்தளங்களில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

இந்த ஜிபிஎஸ் சிக்கல் தீர வாய்ப்புள்ளதா.?

இந்த ஜிபிஎஸ் சிக்கல் தீர வாய்ப்புள்ளதா.?

பெரும்பாலான பயனர்கள் ஜிபிஎஸ் அம்சத்தின் துல்லியத்தில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால் வழிகள் கண்டறிவதில் பெரும் சொதப்பல்களை ஆப்பிள் எக்ஸ் பயனர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த புகாருக்கு எங்களிடம் இருக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் - ஐபோன் எக்ஸ் சாதனத்திற்கு ஐஓஎஸ்11.2 மேம்படுத்தல் வர வாய்ப்பு உள்ளது, அதன் வழியாக இந்த சிக்கல் தீர வாய்ப்புள்ளது.

#04 குளிர் காலநிலை பிரச்சினை.!

#04 குளிர் காலநிலை பிரச்சினை.!

சில ஐபோன் எக்ஸ் கருவிகள் குளிர் காலநிலைகளில் செயலிழந்து போவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை முதன்முதலில் எழுப்பிய ரெட்டிட் பயனர் ஒருவரின் கூற்றுப்படி, சுமார் -2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த ஐபோன் எக்ஸ் செயல் இழப்பு நேருகிறது.

பேஸ்ஐடி அம்சம்.!

பேஸ்ஐடி அம்சம்.!

இந்த கட்டுரையை எழுதி முடிப்பதற்குள் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் பேச ஐடி மீதான புகார் எழுந்துள்ளளது. அது என்னவெனில், ஒரு முகமூடி போட்டுக்கூட ஐபோன் எஸ்கே பேச ஐடி-யை ஏமாற்றலாமே என்பதே ஆகும். இது சார்ந்த அதிகாரப்ப்பூர்வமான புகார்கள் இல்லை என்பதால் இதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.s ஹோம் பொத்தான் இல்லாத பேஸ்ஐடி (FaceID) மூலம் சாதனத்தை திறக்க உதவும் ஐபோன் எக்ஸ் ஆனது அது சேமிக்கும் முகத்தரவுகளை ஏ11 பயோனிக் சில் கொண்டு பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி.!

துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி.!

இந்த பேஸ்ஐடி அம்சம் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மற்றும் ஆப்பிள் பே உடன் இணைந்து செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபோன் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்பை பொறுத்தமட்டில் துருப்பிடிக்காத ஸ்டீல் மற்றும் கண்ணாடி ஆகியவற்றால் உருவாக்கம் பெற்றுள்ளது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் - வெள்ளி மற்றும் கிரே.

5.36 அங்குல டிஸ்பிளே

5.36 அங்குல டிஸ்பிளே

இது சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே மற்றும் 2436x1125 மற்றும் 458பிபிஐ என்ற திரை தீர்மானம் கொண்ட 5.36 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது. அகச்சிவப்பு கேமரா, ஸ்பீக்கர், மைக்ரோஃபோன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ட்ரூ டெப்த் கேமரா அமைப்புடன் வரும் ஐபோன் எக்ஸ் ஒரு 64-பிட் செயலி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கேமரா

கேமரா

எப்/1.8என்ற பரந்தகோண லென்ஸ் மற்றும் இரட்டை தொனியில் ஃப்ளாஷ் கொண்ட முதன்மை 12 மெகாபிக்சல் கேமரா ஒன்றும் மற்றும் எப்/2.4 துளை மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸைப் பயன்படுத்தும் இரண்டாம் நிலை பின்புற கேமராவும் கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தமட்டில், இக்கருவி எப்/2.2 லென்ஸ் கொண்ட ஒரு 7 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Planning to buy the latest Apple iPhone X? Beware of these risks. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot