பீஸ்ஸா ஆர்டர் செய்தவர் வங்கி கணக்கிலிருந்து ரூ.95,000 அபேஸ்! எப்படி தெரியுமா?

|

பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், உணவு டெலிவரி ஆப் மூலம் பீஸ்ஸா ஆர்டர் செய்ய முயன்று, ஆன்லைன் கொள்ளையர்களின் வலையில் சிக்கி, அவரின் வங்கி கணக்கிலிருந்த ரூ.95,000 சில நிமிடங்களில் திருடப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த என்.வி.ஷேக்

பெங்களூரைச் சேர்ந்த என்.வி.ஷேக்

பெங்களூரைச் சேர்ந்த என்.வி.ஷேக் என்ற ஐடி ஊழியர், தனது மொபைல் போனில் இருந்த உணவு ஆப் மூலம் தான் விரும்பிய பீஸ்ஸாவை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பீஸ்ஸாவிற்கான தொகையை ஆர்டர் டெலிவரி செய்வதற்கு முன்பே ஆன்லைன் பேமெண்ட் மூலம் அவர் செலுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி சேவை மைய அதிகாரி

போலி சேவை மைய அதிகாரி

என்.வி.ஷேக் தான் ஆர்டர் செய்த பீஸ்ஸா வராத காரணத்தினால், தான் செலுத்திய கட்டணத்தை மீண்டும் பெறுவதற்காக சேவை மைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட அசவுகரியம் பற்றி புகார் அளித்துள்ளார். மறுமுனையில் பேசிய போலி சேவை மைய அதிகாரி தனது புகாரை விசாரிப்பதாகக் கூறியுள்ளார்.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் பயணர்களுக்கு முக்கிய தகவல்: 2021 வரை கட்டண வசூலிப்பு தொடரும்- டிராய்ஜியோ, ஏர்டெல், வோடபோன் பயணர்களுக்கு முக்கிய தகவல்: 2021 வரை கட்டண வசூலிப்பு தொடரும்- டிராய்

பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சில விதிமுறை

பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சில விதிமுறை

ஷேக் அளித்த புகாரை விசாரித்த சேவை மைய அதிகாரி, அவர் ஆர்டர் செய்த உணவை உணவகம் ஏற்கவில்லை என்றும், அவர் செலுத்திய ஆர்டருக்கான பணம் திருப்பித் தரப்படும் என்றும் மறுமுனையில் பேசிய அந்த நபர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சில விதிமுறையைப் ஷேக் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்

லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்

ஆர்டர் செய்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு குறிப்பிட்டுள்ள விதிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று ஷேக் மொபைல் எண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. அனுப்பப்பட்ட மெசேஜ் இல் கொடுக்கப்பட்டிருந்த லிங்க்-ஐ கிளிக் செய்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அந்த போலி சேவை மைய நபர் கூறியுள்ளார்.

சத்தமில்லமால் சலுகைகளை குறைத்த பிஎஸ்என்எல் நிறுவனம்: முழுவிவரம் இதோ.!சத்தமில்லமால் சலுகைகளை குறைத்த பிஎஸ்என்எல் நிறுவனம்: முழுவிவரம் இதோ.!

பிஷ்ஷிங் வலையில் சிக்கிய ஷேக்

பிஷ்ஷிங் வலையில் சிக்கிய ஷேக்

ஷேக் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட லிங்க்-ஐ கிளிக் செய்த சில நிமிடங்களில், அவரின் வங்கிக் கணக்கு விபரங்கள் ஆன்லைன் கொள்ளையர்களின் கைகளுக்குக் கிடைத்துவிட்டது. லிங்க்-ஐ கிளிக் செய்த சில நிமிடங்களில் பிஷ்ஷிங் முறைப்படி ஷேக்கின் வங்கி கணக்கிலிருந்து ரூ.95,000 திருடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

காவல்துறையினர் விசாரணை

இது தொடர்பாகப் பெங்களூரு கோரமங்களா பகுதி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஷேக்கின் புகாரை காவல்துறையினர் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் மக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Pizza Ordered Techie Lost Rs.95000 From His Bank Account By Phishing Do you know how : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X