ராக்கெட்டில் அணுப்பப்பட்ட 3 கிலோ பீட்சா: விண்வெளியில் பகிர்ந்து சாப்பிட்ட ஏழு பேர்!

|

சிக்னஸ் ராக்கெட்டின் மூலம் பீட்சா கிட், கிவிப்பழம், தக்காளி, ஆப்பிள் ஆகியவைகளை விண்வெளி மையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிக்னஸ் என்ற ராக்கெட்

சிக்னஸ் என்ற ராக்கெட்

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சிக்னஸ் என்ற ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி அனுப்பப்பட்டது. சிக்னஸ் என்ற சரக்கு ராக்கெட் ஆனது விண்வெளி நிலையத்துக்கு உணவு உட்பட பொருட்களை எடுத்து சென்றது. 8200 பவுண்டுகள் எடை கொண்ட சரக்கு ராக்கெட்டில் பீட்சா உள்ளிட்ட உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

7 வீரர்கள் பகிர்ந்து கொண்ட உணவு

7 வீரர்கள் பகிர்ந்து கொண்ட உணவு

சிக்னஸ் என்ற சரக்கு ராக்கெட் ஆனது சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது. இந்த சரக்கு ராக்கெட்டில் மூன்றே முக்கால் கிலோ எடை கொண்ட பீட்சா, ஆப்பிள், தக்காளி, கிவிப்பழம் உள்ளிட்டவைகள அனுப்பி வைக்கப்பட்டது. இதை விண்வெளி மையத்தில் இருக்கும் 7 வீரர்கள் பகிர்ந்து கொண்டனர். இது நாசாவுக்கான நார்த்ரோப் க்ரூம்மனின் 16-வது சப்ளை விமானமாகும். தற்போது விண்வெளி நிலையத்தில் மூன்று அமெரிக்கர்கள், இரண்டு ரஷயர்கள், ஒரு பிரான்ஸ் நாட்டவர் மற்றும் ஒரு ஜப்பானியர் உள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையம்

விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர்.

விண்வெளி நிலையத்தின் அளவு

விண்வெளி நிலையத்தின் அளவு

தற்போது இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இதன் பொருள் திணிவு 4,50,000 கிலோ. இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகின்றன.

ஏணைய விண்வெளி வீரர்கள் ஆய்வு

ஏணைய விண்வெளி வீரர்கள் ஆய்வு

தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக 2000ஆம் ஆண்டுமுதல் வீரர்கள் சென்று தங்கி வருகின்றனர். இதுவரை ஏணைய விண்வெளி வீரர்கள் அங்குச் சென்று ஆய்வுகளை நடத்தி விட்டுத் திரும்பி வந்துள்ளனர். நிரந்தரமாக அதில் வீரர்கள் உள்ளனர்.

மிகப் பெரிய ஆய்வுக்கூடம்

மிகப் பெரிய ஆய்வுக்கூடம்

இந்த விண்வெளி நிலையம் பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக மாதம் 2 கிலோ மீட்டர் பூமியை நோக்கி இறங்குகிறது. அதனை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி விடுகின்றனர். இது ஒரு தொடர் நடவடிக்கையாக உள்ளது. விண்வெளியில் இயங்கும் மிகப் பெரிய ஆய்வுக்கூடமாக விளங்கி வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Pizza, Apple, kiwi Were Delivered to International Space Station For Seven Astronauts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X