Home
News

ஆகஸ்ட் 20 இருக்கு உங்களுக்கு.. Samsung, OnePlus ஸ்மார்ட் வாட்ச்கள் காலி.. களத்தில் குதித்த Google நிறுவனம்!

ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் நிகழ்வில் (Made by Google Event on Aug 20), புதிய பிக்சல் 10 சீரீஸ் (Pixel 10 Series) ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து கூகுள் பிக்சல் வாட்ச் 4 (Google Pixel Watch 4) மாடலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (ஜூலை 31) கூகுள் பிக்சல் 10 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ள 4 மாடல்களின் விலை நிர்ணயம் மற்றும் அறிமுக சலுகைகள் குறித்த விவரங்கள் லீக் ஆகி இருந்தன. அதனை தொடர்ந்து தற்போது கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலின் விலை மற்றும் அறிமுக சலுகைகள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

ஆகஸ்ட் 20 இருக்கு உங்களுக்கு.. Samsung, OnePlus ஸ்மார்ட் வாட்ச்கள்!

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலின் 41 மிமீ வைஃபை வேரியண்ட் ஆனது $349 (இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.30,500) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே அளவிலான எல்டிஇ வேரியண்ட் ஆனது $399 (தோராயமாக ரூ.34,800) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும், 45மிமீ பிக்சல் வாட்ச் 4 மாடலின் வைஃபை (Wi-Fi) மற்றும் எல்டிஇ (LTE) வேரியண்ட்கள் ஆனது முறையே $399 (தோராயமாக ரூ.34,800) மற்றும் $449 (தோராயமாக ரூ.39,200) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லீக் ஆன விலை விவரங்கள் ஆனது, கூகுள் நிறுவனம் அதன் முந்தைய பிக்சல் வாட்ச் 3 மாடலின் விலையை பிக்சல் வாட்ச் 4 மாடலிலும் தக்கவைத்து கொள்ளும் என்று பரிந்துரைக்கின்றன. இது போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் வியர் ஓஎஸ் (Wear OS) கொண்டு இயங்கும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 (Samsung Galaxy Watch 8) மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3) ஆகிய இரண்டும் ரூ.30,000 சுற்றிய பட்ஜெட்டில் தான் உள்ளன.

அறிமுக சலுகைகளை பொறுத்தவரை கூகுள் பிக்சல் வாட்ச் 4 மாடலை வாங்குபவர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் (அதாவது இலவசமாக) ஆறு மாதங்களுக்கான ஃபிட்பிட் பிரீமியம் (Fitbit Premium) மற்றும் 1 மாத காலத்திற்கான யூட்யூப் பிரீமியம் (YouTube Premium) சந்தாவை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெளியான ஆன்லைனில் லீக்கின்படி பிக்சல் 10 சீரீஸ் மீதான அறிமுக சலுகைகளை பொறுத்தவரை, கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) திட்டத்தின் ஆறு மாத சந்தாவை இலவசமாக பெறுவார்கள். இதன்கீழ் ஜெமினை மேம்பட்ட அம்சங்கள் மற்றும் 2டிபி கூகுள் ஒன் ஸ்டோரேஜ் ஆகியவைகள் கிடைக்கும்

இதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோ அல்லது கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் அல்லது கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனை வாங்குபவர்கள், கூகுள் ஏஐ ப்ரோவிற்கான முழு வருட சந்தாவையும் பெறுவார்கள். கூடுதலாக, அனைத்து பிக்சல் 10 சீரீஸை வாங்குபவர்களும் 6 மாத காலத்திற்கான ஃபிட்பிட் பிரீமியத்தையும்,3 மாத கால யூட்யூப் பிரீமியத்தையும் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

லீக் ஆன விலை விவரங்களை பொறுத்தவரை, அமெரிக்காவில் பேஸிக் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் 128ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.70,000 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் சுமார் ரூ.69,700 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோவின் (128ஜிபி) ஆரம்ப விலை அமெரிக்காவில் தோராயமாக ரூ.87,500 ஆகவும், கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல்லின் 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,05,000 ஆகவும், கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் 256ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.1,57,600 ஆகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pixel Watch 4 Price Launch Offers Leaked Ahead Made by Google event on August 20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X