Home
News

கண்ணா இது சுந்தர் ஆட்டம்.. Made By Google நிகழ்வில் 6 அறிமுகம்.. வாவ் சொல்ல வைக்கும் Pixel 10 இந்திய விலை!

ஒருவழியாக ஒட்டுமொத்த ஆண்ட்ராய்டு மற்றும் பிக்சல் போன் ரசிகர்களும் காத்திருந்த தேதியான ஆகஸ்ட் 20 வந்துவிட்டது. அறியாதோர்க்ளுக்கு இன்று கூகுள் நிறுவனத்தின் மேட் பை கூகுள் 2025 நிகழ்வு (Made By Google 2025 Event) நடக்கவுள்ளது. அதில் பிக்சல் 10 சீரீஸ் (Pixel 10 Series), ஆண்ட்ராய்டு 16 ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்னும் பல அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகளை நாம் காணவுள்ளோம்.

மேட் பை கூகுள் நிகழ்வையும், அதில் அறிமுகமாகும் புதிய தயாரிப்புகளின் வெளியீட்டை காண நீங்கள் ஆவலுடன் இருந்தால், குறிப்பிட்ட நிகழ்வை எப்படி பார்ப்பது என்று தெரிந்து கொள்ள விரும்பினால், கவலையை விடுங்கள் - நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள். மேட் பை கூகுள் நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? இந்நிகழ்வில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

Made By Google: வாவ் சொல்ல வைக்கும் Pixel 10 Series இந்திய விலை!

மேட் பை கூகுள் நிகழ்வின் நேரலை விவரங்கள்: கூகுள் பிக்சல் 10 சீரீஸைன் வெளியீட்டை உள்ளடக்கிய மேட் பை கூகுள் ஈவென்ட் ஆனது, அமெரிக்காவில் பிற்பகல் 1.00 மணிக்கு தொடங்கும். இந்திய நேரப்படி, இந்த நிகழ்வு இந்தியாவில் இரவு 10.30 மணிக்கு தொடங்கும். நேரடி ஒளிபரப்பை பார்க்க விரும்புவோர், மேட் பை கூகுள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகலாம் அல்லது கூகுளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலுக்கு செல்லலாம்.

மேட் பை கூகுள் நிகழ்வில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
1. பிக்சல் 10: புதிய என்ட்ரி லெவல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன், இப்போது டெலிஃபோட்டோ லென்ஸுடன் வரலாம்
2. பிக்சல் 10 ப்ரோ: மேம்படுத்தப்பட்ட 6.3 இன்ச் டிஸ்பிளே மற்றும் பெரிய பேட்டரியுடன் கூடிய கூகுளின் ப்ரோ ஸ்மார்ட்போன் வேரியண்ட்
3. பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல்: சற்றே பெரிய 6.8-இன்ச் டிஸ்பிளே கொண்ட ப்ரோ வேரியண்ட். இப்போது 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரலாம்

4. பிக்சல் 10 ப்ரோ போல்ட்: கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய போல்டபிள் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் ஆனது IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்புடன் கூடிய முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனாக இருக்கலாம்
5. பிக்சல் வாட்ச் 4: பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்பிளேவை பெறலாம்
6. பிக்சல் பட்ஸ் 2ஏ: கூகுளின் புதிய பட்ஜெட் விலை இயர்பட்ஸ் ஆக வெளிவரலாம்.

கூகுள் பிக்சல் 10 சீரிஸின் இந்திய விலை நிர்ணயம்எப்படி இருக்கும்? ஸ்மார்ட்பிரிக்ஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆடு சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகமாகும், இதன் விலை ரூ.79,990 ஆக இருக்கலாம்.

இதேபோல கூகுள் பிக்சல் 10 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய மாடல்கள் முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். என்று எதிர்பார்க்கப்படுகிறது கடைசியாக உள்ள பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டின் விலை ரூ.1,72,999 ஆக இருக்கலாம்.

மேலும் பிக்சல் 10 சீரிஸின் கீழ் அறிமுகமாகும் (முதல்) 3 மாடல்களுமே சிம் கார்டு ட்ரே (SIM Card Tray) இல்லாமல் வரும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன எவன் பிளாஸின் (Evan Blass) எக்ஸ்த்தள பதிவின்படி, கூகுள் அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களான பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகியவற்றிலிருந்து பிஸிக்கல் சிம் ஸ்லாட்டை அகற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக, இந்த ஸ்மார்ட்போன்களில் இசிம் (eSIM) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக பிக்சல் 10 சீரிஸில் உள்ள இரண்டு சிம்களுமே முழுமையாக இசிம் ஸ்லாட்டுகளை தான் நம்பியிருக்கும். ஆனால் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு மாடல் மட்டும் பிஸிக்கல் சிம் ட்ரேவுடன் வரலாம் என்பதையும் இவான் பிளாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Pixel 10 Series Launch Made By Google 2025 Event Lives How to Watch India Timings What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X