காதலர்களை இணைக்கும் "பில்லோ டாக் "
காதலர்களை இணைக்கும் "பில்லோ டாக் "
கணவன் மனைவி அல்லது காதலர்கள் ஒருவரை விட்டு மற்றொருவர் தூரமாக பிரிந்து இருந்தால் அவர்கள் படும் வேதனையை சொல்லவே முடியாது.
இப்படி பிரிந்து இருப்பவர்களுக்கு ரொமேன்ஸ் என்பது மிகவும் கடினமான விஷியம். இவர்களின் இந்த கஷ்டத்தை போக்க உருவாக்கப்பட்டதே "பில்லோ டாக் ".
UKவில் உள்ள லிட்டில் ரியாட் எனும் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. இந்த தலையனையில் இன்டெர்நெட் இணைக்கப்பட்டுள்ளது.
தூரத்தில் இருக்கும் உங்கள் பார்ட்னர் உறங்கினால் உங்களிடம் இருக்கும் தலையனையில் இருந்து ஒரு வெளிச்சம் வரும். நீங்கள் உங்கள் தலையனையில் கை வைத்தால் இது அவர்களது தலையனையில் வெளிச்சம் வர சிக்னல் செய்யும்.
நீங்கள் உங்கள் இதயதுடிப்பை கணக்கிடும் பேண்டு ஒன்றை கையில் அணிவதன் மூலம் உங்கள் பார்ட்னரின் போனுக்கு உங்கள் இதயதுடிப்பு அனுப்பப்படும். அவர்கள் உங்கள் இதயதுடிப்பை கேட்கலாம்.
இது விரைவில் வெளிவரும் என்று இதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கிழே இதன் டெமோ வீடியோவை பாருங்கள்.
Click Here For New Smartphones, Tablets, Laptops Gallery
<center><center><iframe width="600" height="360" src="http://www.youtube.com/embed/teivc8Q-oSA?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center></center>


Click it and Unblock the Notifications