உடலில் வேறு உடையே இல்லாமல் வெறும் தலையணை: வைரலாகும் பில்லோ சேலஞ்ச்!

|

கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்தில் புதிதாக பில்லோ சேலஞ்ச் என்ற புதுவகை சேலஞ்ச் ஒன்று வைரலாகி வருகிறது.

வாழ்க்கையில் வரும் சேலஞ்ச்களை சமாளிப்பது தான் வீரம்

வாழ்க்கையில் வரும் சேலஞ்ச்களை சமாளிப்பது தான் வீரம்

வாழ்க்கையில் வரும் சேலஞ்ச்களை சமாளிப்பது தான் வீரம், துணிச்சல். ஆனால் அதற்கு பதிலாக வீடியோவிற்காக சேலஞ்ச் செய்வது டிரெண்டாகி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் வீட்டிலேயே தேங்கும் இந்த நிலையில் புதிதாக ஒரு சேலஞ்ச் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இதை சமாளிக்க நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் புதிதாக ஒரு சேலஞ்ச் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு வைரலான சேலஞ்ச் குறித்து பார்க்கலாம்.

Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!

மோமோ சேலஞ்ச்

மோமோ சேலஞ்ச்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸஅப்பிற்கு ஏதோ முகம் தெரியாத நபர்கள் புதுப்புது கட்டளையிட்டு மிரட்டியுள்ளனர். அதை ஏற்க வேண்டும் மறுக்கும் விதத்தில் மனிதன்-விலங்கு-ஏலியன் என்ற கலவையில் கொடூரமான உருவம் பல்வேறு விதமான அலறல்களுடன் அச்சுறுத்தும். இறுதியில் உங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவோம் என்று மிரட்டி தற்கொலை எண்ணத்தைத் தூண்டும். அதுவே மோமோ சேலஞ்ச்.

கிகி சேலஞ்ச்

கிகி சேலஞ்ச்

கிகி சேலஞ்ச் என்ற பெயரில் ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாடுவது, பைக்குகளில் சாகசம் செய்வது என விநோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இந்த ‘கிகி சேலஞ்ச்' இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி, இளைஞர்கள், பெண்கள் என சாலையில் இந்த சாகசத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஒரு சிலரின் இந்தச் செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. கிகி சேலஞ்ச் என்ற பெயரில் பொது இடத்தில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்வேறு மாநில காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்

ஐஸ் பக்கெட் சேலஞ்ச்

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், தனது தலையில் தானே வாரிக் கொட்டிக் கொள்வது தான் இந்த சேலஞ்ச். இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்பது புறப்பட்டபடி இருந்த உடையுடன் அப்படியே ஐஸ்கட்டி போட்ட தண்ணீரை வாலியுடன் கொட்டிக் கொள்வது தான் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்ச்.

காக்ரோச் சேலஞ்ச்

காக்ரோச் சேலஞ்ச்

'காக்ரோச் சேலஞ்ச்'. முகத்தில் கரப்பான் பூச்சியை ஓடவிட்டு, சில நொடிகள் அப்படியே வைத்திருந்து, அதைப் போட்டோ எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது. தைரியமானவர்கள் மட்டுமல்ல, கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பதறியடித்து ஓடும் பயந்தவர்களுமேகூட இந்த 'காக்ரோச் சேலஞ்சை செய்தனர்.

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்

ஒருவரை நடுவில் நிறுத்தப்பட்டு அவரை குதிக்க வைக்கிறார்கள். அவர் குதிக்கும் நேரத்தில் அதாவது அந்த இரண்டு கால்களும் மேற்பரப்பில் இருக்கும் போது காலை தட்டிவிடுகிறார்கள். அவர் பின் தலை கீழே விழும் வகையில் இந்த சேலஞ்ச் உள்ளது. இதற்கு பேர் ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் அதாவது தமிழில் மண்டை ஓடு உடைக்கும் சேலஞ்ச் என்று அர்த்தம்.

Salt challenge

Salt challenge

தற்போது இதே போன்று Salt Challenge வைரலாக பரவி வருகிறது. இந்த சவாலில் பங்கேற்பவர்கள் ஒரு உப்பு டப்பாவை அப்படியே எடுத்து வாயில் கவிழ்த்து கொள்கின்றனர். டப்பாவில் உள்ள உப்பு முழுவதும் தொண்டைக்குள் செல்கிறது. அதன்பின் உப்பின் கரிப்பு தங்க முடியாமல் வாயில் இருந்த உப்பை துப்புகிறார்கள். இந்த சவாலில் வெற்றி பெறுவதற்கு உப்பு முழுவதையும் விழுங்க வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டாலும் வெற்றி பெற முழுமையாக என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வெறும் தலையணையை மட்டுமே கட்டிக் கொள்ளும் விதமான சேலஞ்ச்

வெறும் தலையணையை மட்டுமே கட்டிக் கொள்ளும் விதமான சேலஞ்ச்

உடலில் உடை எதுவும் அணியாமல் வெறும் தலையணையை மட்டுமே கட்டிக் கொள்ளும் விதமான சேலஞ்ச் ஒன்று வைரலாகி வருகிறது. அதுதான் பில்லோ சேலஞ்ச். இந்த பில்லோ சேலஞ்ச் புகைப்படங்களை இணையதள வாசிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இது ஒருவித ஃபேஷன் சேலஞ்ச் போன்றே ஆன்லைனில் வலம் வருகிறது.

மனிதர்கள் மட்டுமின்றி செல்லப்பிராணிகளும் பங்கேற்பு

மனிதர்கள் மட்டுமின்றி செல்லப்பிராணிகளும் பங்கேற்பு

இந்த சேலஞ்சில் அனைத்து துறையிலுள்ள பிரபலங்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் இந்த சவாலில் ஈடுபட்டு புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த சேலஞ்சில் தங்களது குழந்தைகள், செல்லப்பிராணிகளான பூனை, நாய் என அனைத்துக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Network சிக்கலிலிருந்து விடுபட லேட்டஸ்ட் வழி - உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க!

இதுபோன்ற சேலஞ்சில் மக்கள் ஆர்வம்

இதுபோன்ற சேலஞ்சில் மக்கள் ஆர்வம்

கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி இருந்து வருகின்றனர். இந்த நேரத்தில் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.இதையடுத்து தற்போது இதுபோன்ற சேலஞ்சில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
pillow challenge: new type challenge viral in socialmedia

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X