வாட்ஸ்அப் மெசேஜ் கண்காணிப்பு விவகாரம்.. கதிகலங்கிய மக்கள்.. மத்திய அரசு விளக்கம்.. கிளம்பிய சர்ச்சை!
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்திவரும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியின் மெசேஜ்களை பல்வேறு காரணங்களுக்காக மத்திய அரசு படித்து வருவதாகவும், உங்களது வாட்ஸ்அப்பில் 3 டிக் காண்பிக்கும் மெசேஜ்கள் அரசாங்கத்தால் படிக்கப்பட்டவை என்றும் செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த மத்திய அரசின் விளக்கம் இதோ.
இன்றைய காலத்தில் வாஸ்ட்அப் பயன்பாடு என்பது மக்களிடையே பின்னிப் பிணைந்து விட்டது. அதே போல, வாட்ஸ்அப் செயலியை தவிர்க்க முடியாத சூழலும் இங்கே உருவாக்கிட்டது. ஏனென்றால், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் மெசேஜ்களையும், போட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொள்வது முதல், அலுவலகம் சார்ந்த பணிகள் தொடர்பான தகவலை தெரிவிப்பது வரையில் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகம் முழுவதும் 100 கோடிக்கு அதிகமான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலும் 40 கோடிக்கும் அதிகமான மக்களிடம் வாட்ஸ்அப் இருக்கிறது. இத்தனை கோடி பேரிடம் இருப்பதால், அதை கண்காணித்தால் எவ்வளவு தகவல்களை சேகரிக்க முடியும் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள். இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசு, பல்வேறு காரணங்களுக்காக நாட்டு மக்களின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்றும் சாட்களை படித்து வருவதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
பொதுவாக, நாம் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு அனுப்பும் மேசேஜ்களில் ஒரு டிக் வந்தால் அது சென்றுவிட்டது என்றும் இரண்டு டிக் வந்தால் அவருக்கு டெலிவரியாகி விட்டது என்றும் அர்த்தம். அதே போல இரண்டு ப்ளூ டிக் தோன்றினால், அவரும் அந்த மேசேஜ்களை படித்துவிட்டார் என்று அர்த்தம். ஆனால், இப்போது பரவி வரும் செய்தியில் ரெட் டிக் இடம்பெற்றுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியில், ஒருவர் வாட்ஸ்அப்பில் அனுப்பும் மெசேஜ்களில் வழக்கமான இரண்டு டிக்குகளுக்கு பதிலாக மூன்று ப்ளூ டிக் தோன்றினால், அந்த மெசேஜ்களை மத்திய அரசு கணிக்காணிக்கிறது. அதே போல, இரண்டு ப்ளூ மற்றும் ஒரு ரெட் டிக்குகள் தோன்றினால், அந்த மெசேஜ்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், ஒரு ப்ளூ மற்றும் இரண்டு ரெட் டிக்குகள் தோன்றினால், அரசாங்கம் அதுகுறித்து விசாரணை நடத்தும். இறுதியாக மூன்று ரெட் டிக்குகள் தோன்றினால், அந்த வாட்ஸ்அப் பயனாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் பரவும் போலி செய்திகளை தடுக்கவும், வன்முறையை தூண்டும் வகையில் பகிரப்படும் செய்திகளை கண்காணிக்கவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அடுத்தடுத்த செய்திகள் வெளியாகின.
இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசின் பிஐபி (PIB) விளக்கம் அளித்துள்ளது. அதில், நாட்டு மக்களின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்றும் சாட்களை அரசு கண்காணிக்கிறது என்று பரவிவரும் செய்தி முற்றிலும் போலியானது. இதை மக்கள் நம்ப வேண்டாம். இந்த செய்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆகவே, மக்கள் பயப்படத் தேவையில்லை. இதுபோன்று போலியாக பரவும் செய்திகள் குறித்த உண்மை தன்மை பிஐபி பேக்ட் செக்கிங் (PIB Fact Check) மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மெட்டா நிறுவனத்தின் வாஸ்ட்அப் செயலி மூலம் உங்களுக்கு வழங்கப்படும் தனியுரிமை கொள்கையின் அடிப்படையில் மட்டுமே மெசேஜ்கள், சாட்களின் பயன்பாடுகள் இருக்கும். இதில் அரசாங்கங்கள் நேரடியாக தலையிட முடியாது.
அப்படி தலையிட்டால் அது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்று மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








