வீட்டையே கேமராவா மாத்திட்டாரு., கேனான், நிக்கான்னு மகன்கள் பெயர்: குவியும் லைக்குகள்!

|

கர்நாடக மாநிலத்தில் ஒருவர் தனது கனவு இல்லமான கேமரா வடிவிலான வீட்டை கட்டியுள்ளார். முன்னதாக தனது மூன்று மகன்களுக்கும் கேமராவின் பெயரையை சூட்டியுள்ளார். இவரது வீட்டின் வடிவமைப்புக்கு சமூகவலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகிறது.

கேமரா மீது அதீத ஆர்வம்

கேமரா மீது அதீத ஆர்வம்

கர்நாடக மாநிலம் பெல்லகவி பகுதியை சேர்ந்த ரவி என்ற புகைப்பட கலைஞர் ஒருவர் கேமரா மீது அதீத ஆர்வம் கொண்டவர். இதன் காரணமாக தனது மூன்ற மகன்களுக்கும் நிகான், கேனான், எப்சன் என பெயர் வைத்துள்ளார். 49 வயான இவர் தற்போது தனது கனவு இல்லமான கேமரா வடிவ வீடை ரூ.71 லட்சம் மதிப்பில் கட்டி முடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த வீட்டுக்கு க்ளிக் என பெயர் வைத்துள்ளார்.

புகைப்பட கலைஞர் ரவி

புகைப்பட கலைஞர் ரவி

இதுகுறித்து புகைப்பட கலைஞர் ரவி கூறிய கருத்துகளை பார்க்கலாம். இந்த வீட்டை கட்டி முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆனது. இவர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த உடன் சிறந்த புகைப்பட கலைஞராக வேண்டும் என்பது அவர் கனவாக மாறியது.

சொந்த ஸ்டுடியோ

சொந்த ஸ்டுடியோ

இதன்காரணமாக சொந்தமாக கேமரா ஒன்றை வாங்கியுள்ளார் ஆரம்பத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். இதில் கிடைத்த வருமானத்திலேயே சொந்த ஸ்டுடியோவையும் கட்டியுள்ளார்.

மனைவி பெயருக்கு மாற்றம்

மனைவி பெயருக்கு மாற்றம்

புகைப்பட கலைஞராக பணியாற்றிய போதே க்ரிபா ராணி என்பவரை திருமணம் செய்துள்ளார். தன் மனைவியின் மீதுள்ள காதலால் சித்தார்த் என்ற ஸ்டுடியோவை அவரது மனைவி பெயரில் ராணி என மாற்றியுள்ளார். இவரது கனவிற்கு அவர் மனைவி பக்கபலமாக இருந்துள்ளார். தொடர்ந்து புகைப்பட கலைஞராக முன்னேற்றம் அடைந்தும், அதில் அதீத ஆர்வத்தையும் செலுத்தியுள்ளார்.

மகனுக்கு கேமராவின் பெயர்

மகனுக்கு கேமராவின் பெயர்

இவரது முதல் மகனுக்கு கேமராவின் பெயரை வைத்துள்ளார். இதற்கு ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ரவி மனைவி பக்கபலமாக இருந்துள்ளார். இதையடுத்து முதல் மகனுக்கு கேனான் என்றும் இரண்டாவது மகனுக்கு நிகான் என்றும் பெயர் சூட்டியுள்ளனர். அவர்களது குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் வைத்த பெயர் மிக பிடித்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

வீட்டையும் கேமரா வடிவாகவே மாற்றம்

வீட்டையும் கேமரா வடிவாகவே மாற்றம்

தன் குடும்பத்தாரை கேமரா வட்டாரமாக மாற்றிய ரவி, தான் வீட்டையும் கேமரா வடிவாகவே மாற்ற முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவியிடம் தெரிவித்ததற்கு அவரும் சம்மதம் தெரிவித்து, இருவரும் அதற்கான பாதையில் முன்னேறத் தொடங்கியுள்ளனர்.

மொத்தம் 70 லட்சம் செலவு

மொத்தம் 70 லட்சம் செலவு

ஒவ்வொரு வடிவமைப்பையும் அதாவது கதவு ஜன்னல் கம்பி பால்கனி என அனைத்தையும் பக்குவமாக டிசைன் செய்து வீட்டை கட்டியுள்ளனர். முன்புறம் கேமரா லென்ஸ், பிலிம் ரோல் என பார்ப்பதற்கு கேமரா வடிவமைப்பு தோற்றுபோகும் படி வீட்டை கட்டியுள்ளார். மூன்று மாடி கொண்ட இந்த வீட்டை கட்டிமுடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆகியுள்ளது, மொத்தம் 70 லட்சம் செலவழித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் லைக்குகள்

சமூகவலைதளங்களில் லைக்குகள்

தன் கனவை நினைவாக்க முயல்பவர்கள் ஏராளம் இதில் அதே விஷயம் தன்னை சுற்றியும் இருக்க வேண்டும் என முயற்சி செய்து முன்னேறுபவர்கள் மிகக் குறைவு. இந்த நிலையில் ரவியின் இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருவதோடு சமூகவலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Photographer build Camera shaped house and naming sons canon, nikon!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X