அடிதூள்.. சத்தமின்றி புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. சந்தோஷத்தில் பயனர்கள்..
கூகுள் பே மற்றும் போன்பே நிறுவனங்கள் தொடர்ந்து புதிய புதிய சேவைகளைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் பேடிஎம் செயலியை விடக் கூகுள் பே மற்றும் போன்பே செயலியைப் பயன்படுத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று தான் கூறவேண்டும்.
அதேபோல் போன்பே செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போன்பே நிறுவனம் ஒரு புதிய சேவையை கொண்டுவந்துள்ளது. அதாவது போன்பே (PhonePe) ஆனது தற்போது சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்துடன் (STB) கூட்டு சேர்ந்துள்ளது.

எனவே இதன் மூலம் இந்திய பயனர்கள் சுற்றுலா செல்லும்போது இந்த போன்பே செயலியைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள 8,000 வணிகர்களிடம் உடனடி மற்றும் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய சேவை கண்டிப்பாக இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
குறிப்பாக நாடு முழுவதும் போன்பே போன்ற யுபிஐ பயன்பாடுகள், பணப் பரிவர்த்தனைகளை எளிமையாகவும், பாதுகாப்பாகச் செய்வதற்குப் பயன்படுகின்றன. அதுவும் இந்த போன்பே ஆப்ஸை வங்கி கணக்குடன் இணைப்பதன் மூலம் QR குறியீடு மற்றும் PIN எண்ணைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த போன்பே செயலியில் உள்ள அம்சங்கள் மூலம் பல்வேறு வணிகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்குவதையும் டிக்கெட்களை முன்பதிவு செய்வதையும் எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதாகச் செய்ய அனுமதிக்கிறது. அதேபோல் சமீபத்தில் போன்பே நிறுவனத்தின் இன்டர்நேஷல் பிசினஸ் சிஇஒ ரித்தேஷ் பாய், சிங்கப்பூர் (Singapore) சுற்றுலா வாரியத்துடன் சேர்ந்த இந்த புதிய முயற்சி போன்பே பயனர்களுக்குப் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்று குறிப்பிட்டார்.
அதேசமயம் போன்பே பயனர்கள் தீவு நகரங்களுக்குச் செல்லும்போது QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பணத்தைச் செலுத்தலாம் என்று தெரிவித்தார் ரித்தேஷ் பாய். சரி இப்போது சிங்கப்பூரில் பணம் செலுத்த இந்த போன்பே செயலியைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் போன்பே செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். அடுத்து போன்பே ஆப்-ஐ போனில் இன்ஸ்டால் செய்தபின்பு உங்கள் வங்கிக் கணக்கை இந்த ஆப்பில் இணைக்க வேண்டும்.
வழிமுறை-2: அதன்பின்பு யுபிஐ பரிவத்தனைகளைத் தொடங்க போன்பே செயலியைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் பங்குபெறும் வணிகர்கள் வழங்கிய QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். குறிப்பாக நீங்கள் ஸ்கேன் செய்த பிறகு, கட்டணத் தொகை மற்றும் கூடுதல் விவரங்களை என்டர் செய்ய வேண்டும்.
வழிமுறை-3: அடுத்த திரையில் காட்டும் தொகையை மதிப்பாய்வு செய்து, உங்கள் யுபிஐ பின்னை என்டர் செய்து கட்டணத்தை உறுதிப்படுத்தவும். அவ்வளவுதான்.

ஆனாலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு போன்பே ஆப் பயன்படுத்தும் போது, பயனர்களுக்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. இருந்தபோதிலும், வங்கிகள் குறிப்பாக வெளிநாட்டில் பணம் செலுத்தும் போது, சர்வதேச பரிவர்த்தனைகள் அல்லது நாணய மாற்றத்திற்கான கட்டணங்களை வசூலிக்கலாம். இந்த கட்டணம் அவ்வப்போது மாறுபாடும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு பயணம் செய்யும் பயனர்கள் அங்கு போன்பே செயலியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு பயணம் செய்யும் பயனர்கள், அங்கு போன்பே செயலியை (ஆப்) பயன்படுத்தி சில்லறை கடைகள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் விடுமுறை இடங்கள் ஆகியவற்றில் Mashreq இன் Neopay டெர்மினல்களில் பணம் செலுத்தும் சேவை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








