அப்படி போடு.. புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. உற்சாகத்தில் பயனர்கள்.!
கூகுள் பே நிறுவனத்தைப் போன்று போன்பே நிறுவனமும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்த போன்பே ஆப் வசதியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போன்பே (PhonePe) நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு பயணம்
செய்யும் பயனர்கள் அங்கு போன்பே செயலியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு பயணம் செய்யும் பயனர்கள், அங்கு போன்பே செயலியை (ஆப்) பயன்படுத்தி சில்லறை கடைகள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் விடுமுறை இடங்கள் ஆகியவற்றில் Mashreq இன் Neopay டெர்மினல்களில் பணம் செலுத்தும் சேவையைக் கொண்டுவந்துள்ளது.
குறிப்பாக இந்த தகவல்களை போன்பே நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பரிவர்த்தனை மாற்று விகிதத்தைப் பிரதிபலிக்கும் என்றும் கணக்கில் இருந்து இந்திய ரூபாயில் பணம் டெபிட் செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் போன்பே செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும், அவர்கள் இந்திய வங்கிகளில் தங்களுடைய குடியுரிமை இல்லாத கணக்குகளைப் பயன்படுத்தி அங்குப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுதொடர்பாக போன்பே நிறுவனத்தின் இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ் சிஇஓ ரித்தேஷ் பாய் தெரிவித்தது என்னவென்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். குறிப்பாக இந்திய சுற்றலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். போன்பே கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதி இங்கும் வரும் இந்தியர்கள் பணம் செலுத்துவதை எளிதாக்கும்.

குறிப்பாக இது யுபிஐ (UPI) வசதியை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். Mashreq இன் Neopay டெர்மினல்கள் யுபிஐ ஒரு கட்டண கருவியாக ஏற்க உதவுகிறது என்று அவர் தெரிவித்தார். அதேபோல் பேடிஎம் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் பலர் போன்பே செயலியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்த போன்பே நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சேவைகளைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது.
அதேபோல் போன்பே போன்று வாட்ஸ்அப் நிறுவனமும் கூடிய விரைவில் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தற்போது சர்வதேச யுபிஐ பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்தியப் பயனர்களுக்கு வழங்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே வாட்ஸ்அப் நிறுவனமும் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களில் புதிய வசதியானது யுபிஐ செட்டிங்ஸ் (UPI Settings) பக்கத்தில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) எனும் ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் இந்த விருப்பத்தைத் தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷன் என்பதை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன்பின்பு எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








