Home
News

ப்ப்ச்.. PhonePe UPI ஆப்பிற்கு வந்த திடீர் மாற்றம்.. இதை பண்ணாமலேயே இருந்து இருக்கலாம்!

உலகளவில் மிகவும் பரவலாக மற்றும் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஏஐ பிளாட்ஃபார்ம் (AI Platform) ஆன சாட்ஜிபிடி (ChatGPT) ஆனது, இந்தியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் யுபிஐ பேமண்ட் ஆப் (UPI Payment App) ஆன போன்பே (PhonePe) உடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

முதலில் ரேஸர்பே, இப்போது போன்பே: இந்த அறிவிப்பு - மற்றொரு இந்திய பேமண்ட் கம்பெனி ஆன ரேஸர்பே (RazorPay) ஆனது கடந்த அக்டோபர் 2025 இல் ஓப்பன் ஏஐ உடனான கூட்டாண்மையை அறிவித்த பின்னர் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடததக்கது. நினைவூட்டும் வண்ணம் சாட்ஜிபிடி ஆனது ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்திற்கு சொந்தமானது. மறுகையில் உள்ள போன்பே ஆப் ஆனது முதன்மையாக பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்திற்கு சொந்தமானது.

ப்ப்ச்.. PhonePe UPI ஆப்பிற்கு வந்த திடீர் மாற்றம்!

இதனால் போன்பே பயனர்களுக்கு என்ன நன்மை? இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, போன்பே யுபிஐ தளம் ஆனது பல்வேறு செயல்பாடுகளில் பயனர்களுக்கு உதவ சாட்ஜிபிடி-யின் அம்சங்களை ஒருங்கிணைக்கும். இதன்கீழ் போன்பே கன்ஸ்யூமர் ஆப் மற்றும் போன்பே ஃபார் பிஸ்னஸ் (PhonePe For Business) ஆப்பில் இருந்து சாட்ஜிபிடியின் முழு சாட்பாட் இன்டர்பேஸையும் அணுக முடியாது.

மாறாக போன்பே பயனர்கள் சாட்ஜிபிடி தலைமையிலான அனுபவங்களை தளம் முழுவதும் பார்ப்பார்கள். அதாவது போன்பே பயனர்கள் தங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிடுவதில் இருந்து கொள்முதல் செய்வது வரை அன்றாட தேவைகள் குறித்த பொருத்தமான தகவல்களை கண்டறிய சாத்ஜிபிடி அனுமதிக்கும். ஒட்டுமொத்தமாக போன்பே பயனர்கள் சிறந்த முடிவுகளை எடுக்க இது உதவியாளராக செயல்படும்.

வெளிப்படையாக இது போன்பே பயனர் தளம் ஆனது சிறந்த பயனர் அனுபவத்தை பெற உதவுகிறதோ இல்லையோ, நாட்டில் சாட்ஜிபிடி-ஐ ஏற்றுக்கொள்வதை அதிகரிப்பதற்கு ஓப்பன்ஏஐ நிறுவனத்திற்கு நிச்சயம் உதவும். மாதத்திற்கு ரூ.399 செலவாகும் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் பிரீமியம் சந்தாவான சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) ஆனது தற்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இலவசமாக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சாட்ஜிபிடி கோ சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக பெறுவது எப்படி? நீங்கள் சாட்ஜிபிடி-க்கு புதியவராகவோ அல்லது ஏற்கனவே இந்த ஏஐ சாட்பாட்டின் ஃப்ரீ-டயரில் இருந்தாலோ, சாட் ஜிபிடி-யின் வெப் வெர்ஷனுக்கு செல்லவும் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள சாட்ஜிபிடி ஆப்பை திறக்கவும்.

வெப் பயனர்கள் ட்ரை சாட்ஜிபிடி கோ (Try ChatGPT Go) என்கிற பட்டனை கிளிக் செய்ய வேண்டும், அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு பயனர்கள் அப்கிரேட் டூ கோ பார் ப்ரீ (Upgrade to Go for Free) என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும் (அது தோன்றும் போது). ஒருவேளை ஆண்ட்ராய்டு ஆப் இந்த சலுகையை காட்டவில்லை என்றால், ஹோம்ஸ் ஸ்க்ரீனில் தோன்றும் ட்ரை கோ (Try Go) பில்-ஐ கிளிக் செய்யலாம் அல்லது ஆப் செட்டிங்ஸ்-ல் இந்த விருப்பத்தைக் கண்டறியலாம்.

இப்போது, முன்னதாக நீங்கள் சாட்ஜிபிடிக்காக பணம் செலுத்தியதே இல்லை என்றால், ஒரு கட்டண முறையை (Payment Method) சேர்க்கவும். பின்னர் சாட்ஜிபிடி கோ-வை இலவசமாக பெற, யுபிஐ (UPI) வழியாக பணம் செலுத்தினால் தற்காலிகமாக ரூ. 1 அல்லது உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ. 2 வசூலிக்கப்படும்.

இலவச சாட்ஜிபிடி கோ சந்தா யாருக்கெல்லாம் கிடைக்கும்? இது புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சாட்ஜிபிடி ஆகிய இரண்டு வகை பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. மேலும் இந்த விளம்பர சலுகையை வெப்சைட் (Web) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இரண்டிலிருந்தும் ரீடீம் செய்ய முடியும் என்று ஓப்பன்ஏஐ கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
PhonePe UPI App OpenAI ChatGPT Integration Is it really benefit for users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X