Home
News

இனி கஸ்டமர்கள் நிலைமை என்ன? முக்கிய பிஸ்னஸ்-ஐ இழுத்து மூடும் PhonePe.. RBI கைக்கு போகும் லைசன்ஸ்!

ஃபின்டெக் நிறுவனமான போன்பே (PhonePe) ஆனது, ஏஏ (AA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தனது அக்கவுண்ட் அக்ரிகேட்டர் (Account Aggregator) பிஸ்னஸ்-ஐ முடித்துவிட்டு அதன் என்பிஎப்சி-ஏஏ உரிமத்தை (NBFC-AA License) இந்திய ரிசர்வ் வங்கியிடம் (Reserve Bank of India - RBI) ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

நினைவூட்டும் வண்ணம் இந்நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் தான் அதன் ஏஏ சேவைகளை - துணை நிறுவனமான போன்பே டெக்னாலஜி சர்வீசஸ் (PhonePe Technology Services - PTSPL) மூலம் அறிமுகப்படுத்தியது. 2 ஆண்டுகளில் அதன் ஏஏ தளத்தில் வெறும் சுமார் 50 மில்லியன் வாடிக்கையாளர்களை பதிவு செய்துள்ளதாவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய பிஸ்னஸ்-ஐ இழுத்து மூடும் PhonePe.. RBI கைக்கு போகும் லைசன்ஸ்!

இருப்பினும் போட்டித்தன்மை காரணமாக, நாங்கள் விரும்பும் அளவிற்கு ஃபைனான்ஷியல் இன்ஃபர்மேஷன் ப்ரொவைடர்களை (Financial information providers) எங்கள் தளத்திற்கு இணைக்க முடியவில்லை என்று போன்பே நிறுவனம் கூறியுள்ளது. இதன் விளைவாகவே இந்நிறுவனம் அதன் ஏஏ வணிகத்தில் இருந்து விலகுகிறது. இந்த முடிவு போன்பே ஏஏ தளத்தில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் போன்பே நிறுவனம் கூறியுள்ளது.

ஏஏ உரிமமானது, நிறுவனங்கள் தங்கள் ஒப்புதலுடன் பயனர்களின் நிதி சார்ந்த தகவலை (financial information of users) பெறவும்.. லோன், கிரெடிட் கார்டு (Loan, credit card) போன்ற நிதி சேவைகளை வழங்குவதற்காக அந்த தகவல்களை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.

2023 ஆம் ஆண்டில் ஏஏ பிஸ்னஸில் அதிக எணிக்கையிலான நிறுவனங்கள் அல்லது போட்டியாளர்கள் இல்லாதபோது போன்பே நிறுவனம் அதன் ஏஏ உரிமத்தை பெற்றது. ஆனால் இப்போது அப்படி இல்லை. தனது உரிமத்தை ஆர்பிஐ-யிடம் ஒப்படைக்க உள்ள நிலையில், இந்தியாவில் நிதிச்சேர்க்கைக்கு ஏஏ சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சி முக்கியமானது என்று போன்பே நிறுவனம் கூறியுள்ளது.

போன்பே நிறுவனமானது ஏற்கனவே யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்பேஸ் (Unified Payments Interface) அமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது ஏஏ வணிகத்தில் இருந்து விலகுவதன் மூலம், இந்நிறுவனத்தில் யுபிஐக்கு சேவையில் இன்னும் அதிக கவனம் செலுத்த முடியும். இந்நிறுவனம் கடன் மற்றும் காப்பீடு போன்ற பிற நிதிச் சேவைகளிலும் நுழைந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

யுபிஐ சேவை தொடர்பான மற்ற முக்கியமான செய்திகளை பொறுத்தவரை யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை (UPI transaction ID) உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதற்காக, என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது, யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளில் "எண்ணெழுத்து" எழுத்துக்களை (Alphanumeric characters) மட்டுமே பயன்படுத்தும் படியும், சிறப்பு எழுத்துக்களை (Special characters) பயன்படுத்துவதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த புதிய விதி கடந்த பிப்ரவரி 1, 2025 முதல் அமலுக்கு வந்தது, இனிமேல் எந்த யுபிஐ பேமெண்ட் ஆப்களாலும் சிறப்பு எழுத்துகளை பயன்படுத்தி பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்க முடியாது. ஒருவேளை பரிவர்த்தனை ஐடியில் சிறப்பு எழுத்துகள் உள்ள யுபிஐ ஆப்பை நீங்கள் பயன்படுத்தினால், அந்த ஆப் வழியிலான பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்ஜெட் 2025 இல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டார். ப்ரைம் மினிஸ்டர் ஸ்ட்ரீட் வெண்டார் ஆத்மாநிர்பர் நிதி (Prime Minister Street Vendors Atmanirbhar Nidhi - PM SVANidhi Scheme) திட்டத்தின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு யுபிஐ லிங்க்டு கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த கிரெடிட் கார்டுகளின் வரம்பு ரூ. 30,000 ஆக இருக்கும், அதாவது இது தெருவோர விற்பனையாளர்கள் தங்கள் வணிகங்களுக்கு ரூ.30,000 வரை கடன் பெற அனுமதிக்கும் என்றும், இந்த கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த திட்டம், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது (ஜூலை 2020) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களால் தொடங்கப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
PhonePe to Shut Down Its Account Aggregator Business Surrender License to RBI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X