பிப்.26 வரை.. PhonePe புதிய ஆபர்.. ரூ.1 அனுப்பினா போதும்.. ரூ.144 கேஷ்பேக் கிடைக்கும்.. எப்படி பெறுவது?
பிரபல யுபிஐ (UPI) பேமண்ட் ஆப் ஆன போன்பே (PhonePe) வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் ஒரு புதிய கேஷ்பேக் ஆபரை (Cashback Offer) அறிவித்துள்ளது. இந்த ஆபரின் கீழ் ரூ.144 கேஷ்பேக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? இந்த கேஷ்பேக் ஆபரை எப்படி பெறுவது? இதோ விவரங்கள்:
போன்பே அறிவித்துள்ள இந்த ரூ.144 கேஷ்பேக் ஆபர் ஆனது 2025 மஹாகும்பமேளாவிற்கான ஆபர் (Mahakumbh Mela Offer 2025) ஆகும். உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் (Prayagraj) நடைபெற்று வரும் மஹாகும்பமேளாவில் கலந்துகொள்பவர்கள், முதல் முறையாக போன்பே ஆப்பை பயன்படுத்தி பணம் அனுப்பினால், அவர்களுடைய முதல் பரிவர்த்தனைக்கு ரூ.144 பிளாட் கேஷ்பேக் (Flat Cashback) கிடைக்கும் என்று போன்பே அறிவித்துள்ளது.

இந்த ரூ.144 பிளாட் கேஷ்பேக் ஆபர் ஆனது பிப்ரவரி 26 ஆம் தேதி வரை, அதாவது 2025 மஹாகும்பமேளா முடியும் வரை அணுக கிடைக்கும. சுவாரசியமாக இந்த கேஷ்பேக் ஆபர் ஆனது ரூ.1 ரூபாய் என்கிற குறைவான பரிவர்த்தனைகளுக்கும் கூட பொருந்தும்.
இதற்காகாக மஹாகும்பமேளாவில் கலந்துகொள்ளும் போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. உங்களுடைய ஐஓஎஸ் (iOS) அல்லது ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போனில் போன்பே ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும். பின்னர் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டை யுபிஐ பின்-ஐ செட் (UPI PIN Setup) செய்யவும், பின்னர் போன்பே ஆப்பில் உங்களுடைய லோக்கேஷன் பெர்மிஷன்களை எனேபிள் (Enable Location Permissions) செய்யவும்
இந்த கேஷ்பேக் ஆபர் ஆனது போன்பே ஆப்பில் ஸ்கிராட்ச் கார்டு (Scratch Card) வடிவில் வழங்கப்படும். முக்கியமாக இந்த சலுகை பிரயாக்ராஜ் நகரத்தில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அங்கு மஹாகும்பமேளாவின் போது பல்வேறு ஸ்டால்கள் மற்றும் கடைகளில் போன்பே வழியிலான யுபிஐ பேமெண்ட்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
யுபிஐ சேவை தொடர்பான மற்ற சமீபத்திய செய்தியை பொருத்தவரைய, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது தனது ஜியோபாரத் போன்களில் ஜியோசவுண்ட்பே (JioSoundPay) என்கிற புதிய மற்றும் இலவச வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது ஒவ்வொரு யுபிஐ கட்டணத்திற்கும் உடனடி மற்றும் பன்மொழி ஆடியோ உறுதிப்படுத்தல்களை வழங்கும் புதிய அம்சமாகும்.
தற்போதுள்ள சிறு மற்றும் குறு வணிகர்கள் ஒரு சவுண்ட் பாக்ஸிற்கு (Sound Box) மாதம் ரூ.125 கட்டணம் செலுத்துகின்றனர். ஜியோசவுண்ட்பே வசதி முற்றிலும் இலவசமாக கிடைப்பதால், இது நாடு முழுவதும் உள்ள 5 கோடி சிறிய அளவிலான வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு யுபிஐ சேவையாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஜியோபாரத் 4ஜி போன் ஆனது வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக ஜியோபாரத் 4ஜி போனை வாங்கும் வணிகர்களால் (சவுண்ட் பாக்ஸிற்காக ரூ.125 கட்டணம் செலுத்தும் வணிகர்களால்) ஆண்டுக்கு ரூ.1,500 வரை சேமிக்க முடியும். ஒரு புதிய ஜியோபாரத் போனை வாங்குவதன் மூலம் 6 மாதங்களில் சவுண்ட் பாக்ஸிற்காக செலவு செய்த பணத்தை சேமிக்க முடியும்; மேலும் அடுத்தடுத்த மாதங்களில் செலவே செய்யாமல் இருக்க முடியும்.
ஜியோ சவுண்ட் பே வசதியானது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) ஆகிய நிறுவனங்களின் சவுண்ட் பாக்ஸ் சேவையிலும் மாற்றங்களை கொண்டுவரும் கட்டாயத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஜியோவின் தலைவர் சுனில் தத் கூறுகையில், ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஜியோ நம்பிக்கை கொண்டுள்ளது. ஜியோபாரத் போனிற்கான இலவச ஜியோ சவுண்ட் பே வசதியானது வந்தே மாதரத்தின் ஆத்மார்த்தமான பாடல்களுடன், இந்தியாவின் உணர்வை கொண்டாடுகிறோம் மற்றும் உண்மையான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








