Home
News

PhonePe ஆப்பை பொளக்கும் கஸ்டமர்ஸ்.. 3 மாசத்துக்கு ரூ.100 கட்டணம் விதித்து.. தப்பிக்க ஐடியாவும் கொடுக்குறீயா?

செயல்பாட்டில் இல்லாத.. அதாவது ஆக்டிவ் ஆக இல்லாத போன்பே வாலெட்டுகளுக்கு (PhonePe Wallet) ஒரு காலாண்டிற்கு.. அதாவது 3 மாதங்களுக்கு ரூ.100 பராமரிப்பு கட்டணம் (Rs.100 Maintenance fee) விதிக்கப்படும் என்ற விதிமுறையை கொண்டுவந்ததன் விளைவாக, போன்பே நிறுவனமானது இணையத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

365 நாட்களுக்கு பயன்படுத்தப்படாத வாலெட் ஆனது இன்ஆக்டிவ் (Inactive) ஆக, அதாவது செயலற்றதாக மாறி விடுவதாகவும், கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு முன் பயனர்களுக்கு இதுகுறித்த அறிவிப்பு (Notification) வழங்கப்படும் என்றும் போன்பே நிறுவனத்தின் வாலெட் ஹெல்ப் பேஜ்கள் (Wallet help pages) தெரிவிக்கின்றன.

PhonePe-வை பொளக்கும் கஸ்டமர்ஸ்.. ரூ.100 கட்டணம்.. தப்பிக்க ஐடியா!

ரூ.100 கட்டணம் செலுத்தாமல் இருக்க? போன்பே அறிவித்துள்ள இந்த பராமரிப்பு கட்டணத்தை தவிர்க்க ரீசார்ஜ் செய்யுமாறு வலியுறுத்தி போன்பே ஆப்பில் இருந்து எஸ்எம்எஸ் (SMS) வந்ததாக எக்ஸ் (X) மற்றும் ரெடிட் (Reddit) தளங்களில் சில பயனர்கள், போன்பே ஆப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பயனர்கள் ஏன் அதிருப்தியில் உள்ளனர்? செயலற்ற வாலெட்டிற்கும் தொடர்ச்சியான கட்டணம் விதிக்கப்படும் என்பதை பல பயனர்கள் எதிர்பார்க்காததால், இணையத்தில் இதற்கான எதிர்வினைகள் கடுமையாக உள்ளன. இந்த கட்டணம் ஒருமுறை விதிக்கப்படும் அபராதமாக இல்லாமல், காலாண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் கட்டணமாக விவாதிக்கப்படுவதால், இது பயனர்களுக்கு ஒரு தண்டனை போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிகிறது.

போன்பே வாலெட்டில் பணம் வைத்திருப்பவர்களுக்கு இப்போது ஒரே ஒரு வழிதான் உள்ளது: தங்கள் வாலெட் ஓராண்டு அல்லது அதற்கு மேலாக செயல்பாட்டில் இல்லாமல் உள்ளதா என்று சரிபார்த்து, தேவைப்பட்டால் அதில் உள்ள மீதமுள்ள தொகையை எடுத்துக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கட்டணத்தைச் செலுத்த விரும்பாத பயனர்கள், அறிவிப்பு காலம் முடிவதற்குள் வாலெட் மூலம் ஏதேனும் ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் அல்லது வாலெட்டை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர (Reactivate) வேண்டும்.

இதுகுறித்து போன்பே கூறுவது என்ன? போன்பே-வின் வாலெட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய இணையப்பக்கத்தில், ஒரு வாலட்டில் ஓராண்டு காலத்திற்கு எந்தவிதமான நிதிப் பரிவர்த்தனைகளும் நடைபெறாதபோது மட்டுமே இந்த கட்டணம் விதிக்கப்படும் என்றும், சாதாரண ஆப் பயன்பாடு ஆனது வாலெட் செயல்பாடாக கருதப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டணத்தை வசூலிப்பதற்கு முன் 15 நாட்கள் கால அவகாசத்தில் பயனர்களுக்கு பலமுறை அறிவிப்பு அனுப்பப்படும் என்றும், வாலெட் மூலம் ஒரு பரிவர்த்தனையை மேற்கொண்டு அக்கவுண்ட்டை மீண்டும் செயல்பட வைப்பதன் மூலம் பயனர்கள் இந்த கட்டணத்தை தவிர்க்கலாம் என்றும் போன்பே நிறுவனம் கூறுகிறது.

வாலெட் பேலன்ஸில் இருந்து இந்த கட்டணத்தை எடுத்துக்கொள்ள போன்பே ஆப்பிற்கு உரிமை உண்டு என்றும், பேலன்ஸ் தொகை ரூ.100 க்கும் குறைவாக இருந்தால், முழு தொகையையும் எடுத்துக்கொண்டு வாலட் இருப்பை 'நெகடிவ்' (negative) நிலைக்கு செல்லவிடாமல் பூஜ்ஜியமாக (zero) வைத்திருக்கும் என்றும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன. மேலும், தனது கட்டண கொள்கையை மாற்றியமைக்கவும், ஏற்கனவே உள்ள சேவைகளுக்கு புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்தவும் போன்பே ஆப்பிற்கு உரிமை உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்று இதற்கு முன் நடந்துள்ளதா? செயலற்ற தன்மைக்காக கட்டணம் வசூலிக்கும் முதல் பின்-டெக் (fintech) நிறுவனம் போன்பே அல்ல. கடந்த 2021 இல் மொபிகுவிக் (MobiKwik) நிறுவனம் ஆனது இன்ஆக்டிவ் ஆக இருக்கும் பயனர்களிடம் ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ.140 வரை "வாலட் பராமரிப்பு கட்டணம்" வசூலிப்பதாக அறிவித்தது; மேலும் அறிவிப்பு காலத்திற்கு பிறகு இந்த கட்டணம் வாலட் பேலன்ஸ்-ல் இருந்து கழிக்கப்பட்டது.

இதேபோல ஏர்டெல் பேமன்ட்ஸ் பேங்க் (Airtel Payments Bank) ஆனதும் தனது கட்டண பட்டியலில் செயலற்ற வாலட்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், செயலற்ற தன்மைக்கான அபராத கட்டணங்கள் டிஜிட்டல் வாலட் வணிக மாதிரியின் ஒரு பகுதியாக மெல்ல மாறி வருவது போல் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
PhonePe Rs 100 Charge For Inactive Wallet Customers Not Happy Getting SMS like Recharge to Avoid Fee
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X