PhonePe இருக்கா? கட்டாயம் இந்த புதிய வசதியை தெரிஞ்சுக்கோங்க.. ரூ.5000 லிமிட்.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் கூகுள் பே, பேடிஎம் போன்று போன்பே செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றன. குறிப்பாக இந்த போன்பே (PhonePe) செயலி மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். அதேபோல் போன்பே செயலியில் அவ்வப்போது சலுகைகள் மற்றும் புதிய வசதிகள் கொண்டுவரப்படுகிறது. எனவே தான் அதிக மக்கள் போன்பே செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
போன்பே அறிமுகம் செய்த புதிய வசதி
இந்நிலையில் போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது போன்பே அதன் பயனர்களுக்காக ஒரு புதிய பயோமெட்ரிக் அங்கீகார அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்போது பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ் அன்லாக் பயன்படுத்தி ரூ.5000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கலாம். குறிப்பாக இதற்கு யுபிஐ பின் நம்பரை உள்ளிட வேண்டியதில்லை.

போன்பே நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய அம்சம் பயனரின் போனில் உள்ள ஸ்மார்ட் பாதுகாப்பு அமைப்பு மூலம் பரிவர்த்தனையைச் சரிபார்க்கிறது. ஆனால் ரூ.5000-க்கு மேல் பணம் செலுத்த வேண்டும் என்றால் பயனர்கள் யுபிஐ பின் நம்பரை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய வசதியை போன்பே ஆப் Profile பகுதியில் உள்ள 'Manage Payments' மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.
அதேசமயம் வெளிச்சம் குறைவு அல்லது சென்சார் கோளாறு காரணமாக பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக பின் நம்பரை பயன்படுத்தி பணத்தை அனுப்பலாம். குறிப்பாக தற்போது கொண்டுவரப்பட்ட இந்த புதிய வசதி ரூ.5000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அதேபோல் இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய வசதி ஐபோன் பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் இதுகுறித்து PhonePe-இன் தலைவர் தீப் அகர்வால் கூறியது என்னவென்றால், இந்த புதிய வசதி பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கும் மற்றும் பாதுகாப்பு தரநிலைகளையும் பராமரிக்கும் என்று கூறியுள்ளார்.
போன்பே-வில் தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பு பொதுவாக ரூ.1,00,000 ஆகும். அதாவது நீங்கள் ஒரு நாளில் மொத்தம் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தலாம். குறிப்பாக இந்த வரம்பு NPCI விதிகளின்படி உள்ளது. ஆனாலும் சில வங்கிகள் தங்கள் கணக்குகளுக்கு குறைந்த வரம்பையும் நிர்ணயிக்கலாம். கூடுதலாக நீங்கள் வழக்கமாக ஒரு நாளில் 10-20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும்.

அதுவும் ஒவ்வொரு பயனருக்கும் சரியான வரம்பு அவர்களின் வங்கி மற்றும் கணக்கு வகையைப் பொறுத்து மாறுபடலாம். எனவே போன்பே செயலி அல்லது வங்கி செயலியில் யுபிஐ வரம்பு பிரிவைப் பார்த்தால் உங்களுக்கு முழுமையான தெளிவு கிடைக்கும்.
மேலும் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என்பது இன்று சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பலாம் என்பதால், சிறு கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை டிஜிட்டல் பரிமாற்றத்தையே அதிகம் ஆதரிக்கின்றனர். அதுவும் இந்த கூகுள் பே, போன்பே, பேடிஎம் செயலிகள் தொடர்ந்து புதிய புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்த புதிய வசதிகள் பயனுள்ள வகையிலும், பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications