அப்படி போடு.. சத்தமில்லாமல் புதிய சேவையைக் கொண்டுவந்த PhonePe.. சந்தோஷத்தில் பயனர்கள்..
இந்தியாவில் பேடிஎம் செயலியை விட கூகுள் பே மற்றும் போன்பே செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக போன்பே (PhonePe) செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அதன்படி போன்பே செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் போன்பே செயலி தற்போது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது LankaPay உடன் கூட்டுச் சேர்ந்து இலங்கையில் போன்பே யுபிஐ (PhonePe UPI) பேமெண்ட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது போன்பே நிறுவனம். எனவே இதன் மூலம் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குச் செல்லும் போது, எளிதாக LankaPay QR குறியீட்டை ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை செல்லும் பயனர்கள் கையில் பணத்தை எடுத்துச் செல்லாமல் பாதுகாப்பாகவும் விரைவாகவும் இந்த போன் பே மூலம் பணம் செலுத்த முடியும். ஆனாலும் வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும் பயனர்கள் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது, நாணய மாற்று விகிதத்தைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

பணத்தைக் கொண்டு உங்களது பில்களை செலுத்தும் போது, இந்த மாற்று விகிதத்தினால் நீங்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு உதவும் வகையில் தற்போது போன்பே பணப்பரிவர்த்தனையை எளிமையாக்கி உள்ளது. அதாவது போன்பே பயனர்கள் இலங்கையில் LankaPay QR குறியீட்டை ஸ்கேன் செய்து பேமெண்ட் செய்த பிறகு, இந்திய நாணயத்தில் தொகை டெபிட் செய்யப்படும் மற்றும் மாற்று விகிதமும் உங்களுக்குக் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகம் சார்ந்த பயணம் மேற்கொள்பவர்களுக்கு போன்பே கொண்டுவந்துள்ள இந்த புதிய சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். குறிப்பாக போன்பே நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என LankaPay CEO சன்னா டி சில்வா கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் தான் போன்பே (PhonePe) ஆனது சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்துடன் (STB) கூட்டு சேர்ந்தது. இதன் மூலம் இந்தியப் பயனர்கள் சுற்றுலா செல்லும்போது இந்த போன்பே செயலியைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள 8000 வணிகர்களிடம் உடனடி மற்றும் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவில் எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ்களை தான் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாகச் சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும் இப்போது போன்பே (PhonePe) போன்ற ஆப்ஸ்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இந்த யுபிஐ செயலிகள் செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. மேலும் போன்போ மற்றும் கூகுள் பே செயலியில் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய சேவைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








