Home
News

உங்க போனில் இந்த 2 ஆப்களும் இருக்கா.. அப்போ இனிமேல் ஆட்டோமெட்டிக் ஆக பணம் போகும்!

உங்களுடைய ஸ்மார்ட்போனில் யுபிஐ (UPI) வழியாக பணம் அனுப்ப மற்றும் பெற உதவும் பேமண்ட் ஆப் ஆன போன்பே (PhonePe) மற்றும் எண்டர்டெயின்மெண்ட் தேவைகளுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஆகிய 2 ஆப்களும் இருக்கிறதா? ஆம் என்றால் இந்த தகவல் உங்களுக்கானது தான்!

போன்பே பிஜி (PhonePe PG) என்று சுருக்கமாக அழைக்கப்படும் போன்பே பேமண்ட் கேட்வே (PhonePe Payment Gateway) ஆனது ரூபே (RuPay) மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) உடன் இணைந்து, தொடர்ச்சியான சந்தா கட்டணங்களை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ், ரூபே கிரெடிட் கார்டுகளால் ஆதரிக்கப்படும் யுபிஐ ஆட்டோபே அம்சத்தை (UPI Autopay Feature) அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த 2 ஆப்களும் இருக்கா.. இனி ஆட்டோமெட்டிக் ஆக பணம் போகும்!

இந்த முயற்சி, வங்கி கணக்குகளுடன் நேரடியாக இணைப்பதற்கு பதிலாக, தங்கள் ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யுபிஐ வழியாக சந்தா கட்டணங்களை செட் செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. இது லோ பேலன்ஸ் அக்கவுண்ட்களால் ஏற்படும் கட்டண தோல்விகளைக் குறைக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஜியோஸ்டார் போன்ற சந்தா அடிப்படையிலான சேவைகளுக்கு தடையற்ற அணுகலையும் உறுதி செய்யும்.

போன்பே ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சந்தா ஐக்யூ தளம் (Subscription IQ platform) ஆனது - யுபிஐ ஆட்டோபே (UPI AutoPay), இநாச் (eNACH) மற்றும் கார்டு அடிப்படையிலான பில்லிங் உள்ளிட்ட பல தொடர்ச்சியான கட்டண விருப்பங்களை (Recurring payment options) ஆதரிக்கிறது. அதாவது இது அனைத்து கட்டண முறைகளையும் ஒரே இன்டர்பேஸின் கீழ் நிர்வகிக்க உதவும்.

இந்த அம்சம் விரைவில் அதன் சந்தா தொகுப்பு மூலம் மேலும் பல வணிகங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனுடன், ஸ்மார்ட்ஸ்பீக்கர் மற்றும் பாயிண்ட்-ஆஃப்-சேல் (பிஓஎஸ்) முனையத்தின் அம்சங்களை இணைக்கும் ஒரு ஹைபிரிட் டிவைஸ் ஆன ஸ்மார்ட்பிஓடி-ஐயும் (SmartPOD) போன்பே நிறுவனம் வெளியிட்டது.

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட போன்பே ஸ்மார்ட்பிஓடி டிவைஸ் ஆனது சிறு வணிகர்கள் என்எப்சி டாப் (NFC tap) மற்றும் சிப் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் (chip-based transactions) மூலம் மாஸ்டர்கார்டு (Mastercard), விசா (Visa), ரூபே (RuPay) மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ் (American Express) உள்ளிட்ட யுபிஐ மற்றும் கார்டு பேமண்ட்களை ஏற்றுக்கொள்ள உதவும்.

ஸ்மார்ட்பிஓடி ஆனது சிறு வணிகங்கள் செலவு குறைந்த முறையில் பரந்த அளவிலான கட்டணங்களை ஏற்றுக்கொள்ள உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டிவைஸில் டூயல் டிஸ்பிளேக்கள், கீபேட் அடிப்படையிலான பின் உள்ளீடு மற்றும் இ-சார்ஜ் ஸ்லிப்கள் போன்ற அம்சங்கள்உள்ளன மற்றும் இது யுபிஐ கட்டணங்களுக்கான ஆடியோ உறுதிப்படுத்தல்களையும் வழங்கும்.

இதேபோல ஐஎம்சி 2025 (IMC 2025) என்கிற இந்தியா மொபைல் காங்கிரஸ் 2025 (India Mobile Congress 2025) நிகழ்வில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் அதன் ஜியோபாரத் போன்களுக்கான சேஃப்டி பர்ஸ்ட் கேபபிலிட்டியை (Safety First Capability) அறிவித்து உள்ளது

இதன் கீழ் லொக்கேஷன் மானிட்டரிங் (Location Monitoring) என்கிற இருப்பிட விவரங்களை அறிந்து கொள்ள உதவும் அம்சம். யூசேஜ் மேனேஜர் (Usage Manager) என்கிற தெரியாத எண்களை பிளாக் செய்ய உதவும் அம்சம்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இதோடு நெட்வொர்க் வலிமை மற்றும் டிவைஸ் பேட்டரிக்கான நிகழ்நேர நுண்ணறிவுகள் கிடைக்கும் போன் மற்றும் சர்வீஸ் ஹெல்த் (Phone and Service Health) மற்றும் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் உறுதி செய்யும் ஆல்வேஸ் அவைலபிள் (Always Available) ஆகியவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
PhonePe Partnered with RuPay JioHotstar introduced UPI AutoPay feature simplify subscription payments
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X