Home
News

இதுக்கு தானே காத்திருந்தோம்.. PhonePe அறிமுகம் செய்த புதிய அம்சம்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்தியாவில் யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை பயன்படுத்தி சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். எனவே தான் அதிக மக்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் போன்பே செயலி ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது நாட்டில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் போன்பே நிறுவனம் புதிய பாதுகாப்பு அம்சமான போன்பே ப்ரொடெக்ட் (PhonePe Protect)-ஐ அறிமுகம் செய்துள்ளது.

இதுக்கு தானே காத்திருந்தோம்.. PhonePe அறிமுகம் செய்த புதிய அம்சம்..

குறிப்பாக இந்த புதிய பாதுகாப்பு அம்சம் நாம் பணம் அனுப்பும் போது, எதிர்புற எண் சந்தேகத்திற்கிடமானது என்றால் உடன எச்சரிக்கை செய்தி காட்டும். அதேசமயம் மிகவும் ஆபத்தான எண் என பட்டியலிடப்பட்டிருந்தால், அந்த பரிவர்த்தனையை போன்பே தானாக தடுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இதன் மூலம் மோசடி செய்யும் நபர்களுக்கு பணம் அனுப்புவதை தவிர்க்க முடியும்.

போன்பே Protect எப்படி வேலை செய்யும்?
அதாவது போன்பே Protect அம்சம் ஆனது தொலைத்தொடர்பு துறை (DoT) வழங்கும் நிதி மோசடி ஆபத்து காட்டி (FRI) தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக DoT உதவியுடன் அதிக அபாயம் எனக் குறிக்கப்பட்ட எண்கள் கண்டறியப்பட்டவுடன், உடனே போன்பே ஆபத்தான எச்சரிக்கை காட்டுகிறது அல்லது பரிவர்த்தனையை நிறுத்துகிறது.

இதுதவிர மிதமான அபாயம் உள்ள எண்களுக்கு கூட நீங்கள் பணம் அனுப்புவதற்கு முன் ஒரு எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்படும். இது பயனர்களை நன்கு யோசித்து செயல்பட வைக்கும். மேலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் நிறுவனங்களின் போன்பே ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

போன்பே நிறுவனத்தின் இந்த புதிய பாதுகாப்ப அம்சம், தெரியாமல் ஏமாற்றுபவர்களுக்கு பணம் அனுப்பும் நிலை தவிர்க்கப்படும். பின்பு பாதுகாப்பு காரணங்களால் பரிவர்த்தனை தடுக்கப்பட்டால், அதன் காரணத்தையும் செயலி தெளிவாக தெரிவிக்கும். இதனால் பயனர்கள் தங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும். பின்பு இது பாசிடிவ் பேமெண்ட் அனுபவத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும்.

பேடிஎம் அறிமுகம் செய்த புதிய வசதி
பேடிஎம் நிறுவனம் சமீபத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்தது. அதாவது என்ஆர்ஐ என்று அழைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தங்களுடைய இன்டர்நேஷனல் மொபைல் நம்பரை பேடிஎம் செயலியோடு இணைத்து இந்தியாவில் யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனிமேல் தங்களுடைய இண்டர்நேஷனல் மொபைல் நம்பர்களை (எண்களை) பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ள முடியும். ஆனால் தற்போது இது பீட்டா சோதனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் அனைத்து பேடிஎம் பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது சர்வதேச மொபைல் எண்களை NRE அல்லது NRO கணக்குகளோடு இணைத்து கொள்ளலாம். மேலும் இதனை தொடர்ந்து வழக்கம் போல யுபிஐ பேமெண்ட்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் இந்தியாவில் இவர்கள் யுபிஐ பயன்படுத்துவதற்கு இந்திய சிம் கார்டு தான் தேவை என்ற அவசியம் இனி இருக்காது.

12 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தான் இந்த புதிய சேவை முதல் கட்டமாக கிடைக்கும் என்று பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், பிரான்ஸ் மலேசியா போன்ற 12 நாடுகளில் வசிக்கக்கூடிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போதைக்கு முதல் கட்டமாக இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுக்கு தானே காத்திருந்தோம்.. PhonePe அறிமுகம் செய்த புதிய அம்சம்..

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பாகவும், விரைவாகவும் நிதி பரிவர்த்தனை வசதியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தான் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பேடிஎம் செயலியில் உங்களது இன்டர்நேஷனல் மொபைல் நம்பரை கொண்டு லாகின் செய்து கொள்ள வேண்டும். அடுத்து உங்களது போன் நம்பருக்கு வரக்கூடிய எஸ்எம்எஸ் உடன் உங்களது இணைப்பை கன்ஃபார்ம் செய்து கொள்ளலாம். அதன்பின்பு உங்களின் NRE அல்லது NRO வங்கி கணக்கை இணைத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
PhonePe new Protect feature provides secure UPI payments across India: check detail here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X