Home
News

போன்பே நிறுவனமானது இன்டஸ் ஆப் ஸ்டோரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது!

க்யூஆர் கோட், சவுண்ட்பாக்ஸ், கார்டு மெஷின் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வசதிகளை தவிர்த்து.. பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் வருகிற மார்ச் 15 ஆம் தேதியொடு முடிவுக்கு வருமென்று ஆர்பிஐ (RBI - Reserve Bank of India) அறிவித்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்திற்கு எதிரான இந்த திடீர் நடவடிக்கையானது, இந்திய யுபிஐ கட்டண சந்தையில் கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (Phone Pe) ஆப்களின் ஆதிக்கம், இனி மிகவும் அதிகமாக இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிற அச்சத்தை உருவாக்கி உள்ளது.

போன்பே நிறுவனமானது இன்டஸ் ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது!

யுபிஐ கட்டண சந்தை பங்கில் சுமார் 80 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ள இவ்விரு நிறுவனங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இந்திய அரசாங்கமானது கூகுள் பே மற்றும் போன்பேவிற்கு "எதிரான" சில புதிய உத்திகளை பரிசீலித்து வருகிறது. இதனொரு பகுதியாக யூபிஐ கட்டண சேவைகளில் 30% கேப்பிங் முறை (30% Capping System) செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் போன்பே நிறுவனமானது தனது இன்டஸ் ஆப் ஸ்டோரை (Indus app store) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்டஸ் ஆப் ஸ்டோர் என்பது இந்தியாவில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு ஆப் ஸ்டோர் (Homegrown app store) ஆகும்.

போன்பே நிறுவனமானது இன்டஸ் ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது!

ஆர்வமுள்ள பயனர்கள் இன்டஸ் ஆப் ஸ்டோர் ஆப்பை (Indus App Store App) போன்பே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (PhonePe Official Website) இருந்து நேரடியாக பதிவிறக்கம் (Download) செய்து, அதை தங்கள் ஸ்மார்ட்போன்களில் கைமுறையாக இன்ஸ்டால் (Install) செய்து கொள்ளலாம்.

வருங்காலத்தில் கூகுள் பிளே ஸ்டோர் ஆப்பை போலவே இன்டஸ் ஆப் ஸ்டோரும் கூட, புதிய ஸ்மார்ட்போன்களில் பில்ட்-இன் ஆப் (Built-in Aapp) ஆக சேர்க்கப்படும். இதற்காக நோக்கியா (Nokia) மற்றும் லாவா (Lava) போன்ற ஸ்மார்போன் தயாரிபப்பாளர்களிடம், போன்பே நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

போன்பே நிறுவனமானது இன்டஸ் ஆப் ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது!

தனித்துவமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்கள் (Unique and Personalized features), டெவலப்பர் பிராண்ட்லி விதிமுறைகள் (Developer-friendly terms) மற்றும் ஆங்கிலம் தவிரத்து 12 இந்திய மொழிகளுக்கான ஆதரவுடன் வரும் இன்டஸ் ஆப் ஸ்டோர் ஆனது, கூகுள் பிளே ஸ்டோருக்கு கடும்போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டஸ் ஆப் ஸ்டோர் ஆனது 45 வகைகளின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் ஆப்கள் மற்றும் கேம்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஆப் ஸ்டோர் உள்ளூர்மயமாக்கப்பட்ட சில அம்சங்களை வழங்குகிறது. இது சில சிறிய வீடியோக்கள் மூலம் ஆப்பை கண்டறிதல், மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்தல் மற்றும் அதிக டேட்டா கிடைக்கும் நேரத்தில் பயனர்களின் ஸ்மார்ட்களுக்கு அப்டேட்களை அனுப்பும் "ஸ்மார்ட் அப்டேட்ஸ்" போன்றவைகளை கொண்டுள்ளது.

மேலும் இன்டஸ் ஆப் ஸ்டோர் ஆனது, கூகுள் மற்றும் ஆப்பிளில், டெவலப்பர்கள் அனுபவிக்கும் பொதுவான சிக்கலை தீர்க்கும் நோக்கத்துடன், வினவல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க, மின்னஞ்சல் அல்லது சாட்பாட் வழியிலான 24/7 ஆதரவையும் (24/7 Support through email or Chatbot) வழங்குகிறது!

யூபிஐ கட்டண சேவைகளில் கொண்டுவரப்படவுள்ள 30% கேப்பிங் முறையானது கூகுள் பேவிற்கு என்னென்ன சிக்கல்களை கொண்டுவரும் என்று தெரியாத நிலைப்பாட்டில், கூகுள் பிளே ஸ்டோருக்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போன்பேவின் இன்டஸ் ஆப் ஸ்டோர் ஆனது கூகுள் நிறுவனத்தின் சாம்பிராஜ்யம் மெல்ல மெல்ல சரிகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏஐ தொழில்நுட்ப (AI Technology) விவகாரத்தில், ஏற்கனவே கூகுள் நிறுவனமானது, ஓப்பன் ஏஐ (Open AI) மற்றும் மைக்ரோசாஃப்ட் (Microsoft) கூட்டணியில் உருவான சாட்ஜிபிடி-யிடம் (ChatGPT) போராடி வருவதும், சமீபத்தில் ஏஐ சாட்பாட் ஆன பார்ட் (Bard), ஜெமினி (Gemini) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக சுந்தர் பிச்சையின் (Sundar Pichai) தலை அங்குமிங்குமாய் உருள்கிறது!

Best Mobiles in India

English summary
PhonePe Launched Indus App Store in India Against Google Play Store How to Download Install and Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X