PhonePe யூஸ் பண்றீங்களா? இனி சிரமம் இருக்காது.. பணம் அனுப்ப புதிய வசதி.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
போன்பே (PhonePe) நிறுவனம் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு வசதிகளும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் போன்பே செயலியில் தற்போது குரல் மற்றும் எழுத்து கட்டளைகள் மூலம் செயல்படும் புதிய ஏஐ (AI) தேடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது போன்பே நிறுவனம்.
அதாவது தற்போதைய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உலகில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போன்பே நிறுவனம் குரல் மற்றும் எழுத்து கட்டளைகளைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக நுண்ணறிவு அடிப்படையிலான புதிய தேடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் செயலியில் வழக்கமான மெனுக்களை தேடி செல்லாமல், நேரடியாக தங்கள் தேவையைக் கூறி பணிகளை முடிக்கலாம்.

தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஏஐ சூழலை பயன்படுத்தி இந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் மைக்ரோசாப்ட் ஃபவுண்டரி தளத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த வசதி பயனர்களின் நோக்கத்தைப் புரிந்து செயல்படும் வகையில் உள்ளது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால், முத்துவுக்கு ரூ.20 அனுப்பு அல்லது FASTag ரீசார்ஜ் செய் என்று கட்டளைகளைக் கூறினாலே, அதற்கான கட்டணப் பக்கம் தானாகத் திறக்கும். இது சாதாரண தேடலை விடப் புத்திசாலித்தனமாக, பணம் அனுப்புதல், பில் கட்டுதல் அல்லது உதவி கேட்பது போன்ற தேவைகளை விரைவாக நிறைவேற்றவும் உதவுகிறது என்றே கூறலாம்.
அதேபோல் இந்த புதிய வசதி சாதனத்தில் உள்ள செயலாக்கமும், கிளவுட் அடிப்படையிலான செயலாக்கமும் இணைந்த ஹைப்ரிட் மாடலை பயன்படுத்துகிறது. அதுவும் பயனர்களின் தனிப்பட்ட மற்றும் பரிவர்த்தனை தகவல்கள் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தென் ஆசியாவின் தலைவர் புனீத் சந்தோக் கூறியது என்னவென்றால், இந்த திட்டம் கோடிக்கணக்கான பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் விரிவாக்கக்கூடிய டிஜிட்டல் கட்டண தீர்வை வழங்க உதவுகிறது என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக போன்பே செயலியில் உள்ள சர்ச், உதவி மையம் மற்றும் ஹிஸ்டரி வழியாக இதைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ் அன்லாக்
அதேபோல் சில நாட்களுக்கு முன்பு போன்பே நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது போன்பே அதன் பயனர்களுக்காக ஒரு புதிய பயோமெட்ரிக் அங்கீகார அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்போது பிங்கர் பிரிண்ட் அல்லது பேஸ் அன்லாக் பயன்படுத்தி ரூ.5000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கலாம். குறிப்பாக இதற்கு யுபிஐ பின் நம்பரை உள்ளிட வேண்டியதில்லை.

போன்பே நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய அம்சம் பயனரின் போனில் உள்ள ஸ்மார்ட் பாதுகாப்பு அமைப்பு மூலம் பரிவர்த்தனையைச் சரிபார்க்கிறது. ஆனால் ரூ.5000-க்கு மேல் பணம் செலுத்த வேண்டும் என்றால் பயனர்கள் யுபிஐ பின் நம்பரை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய வசதியை போன்பே ஆப் Profile பகுதியில் உள்ள 'Manage Payments' மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.
வெளிச்சம் குறைவு அல்லது சென்சார் கோளாறு காரணமாக பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக பின் நம்பரை பயன்படுத்தி பணத்தை அனுப்பலாம். குறிப்பாக தற்போது கொண்டுவரப்பட்ட இந்த புதிய வசதி ரூ.5000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த புதிய வசதி ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய வசதி ஐபோன் பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.


Click it and Unblock the Notifications