PhonePe வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அறிமுகமானது புதிய வசதி.. மிஸ் பண்ணாதீங்க..
இந்தியாவில் கூகுள் பே (google pay), போன் பே (PhonePe) போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது இந்த யுபிஐ செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை.
அதேபோல் இந்த செயலிகளைப் பயன்படுத்து தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் விரைவாகப் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். எனவே தான் கூகுள் பே, போன்பே போன்ற செயலிகளை மக்கள் அதிக பயன்படுத்துகின்றனர். மேலும் சமீபத்தில் கூகுள் பே செயலியானது கடன் வழங்கும் வசதியைக் கொண்டுவந்தது. அதேபோல் போன்பே செயலியும் ஒரு புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் முன்னணி நிறுவனமான போன்பே சமீபத்தில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்நிறுவனம் தனது UPI-இல் கிரெடிட் லைன் சேவைகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து கிரெடிட் லைன் வசதியைப் பெற்றிருந்தால், தற்போது அவர்கள் அந்த கிரெடிட் லைனை PhonePe உடன் இணைக்கலாம். இதனால் PhonePe விலிருந்து கிடைக்கும் கடன் மூலம் வணிகர்களுக்குப் பணம் செலுத்தலாம்.
அதுவும் இந்த புதிய அம்சம் மூலம் போன்பே பயனர்கள் மில்லியன் கணக்கான வணிகர்களுக்கு எளிதாகப் பணம் செலுத்த முடியும். குறுகிய கால கடன் வசதியும் பெறலாம். மேலும் இந்த விஷயத்தை PhonePe நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) UPI சேவைகளை விரிவுபடுத்திய நேரத்தில் தான் PhonePe இந்த சேவைகளை அறிமுகம் செய்தது. குறிப்பாக முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன்களுக்கும் UPI சேவைகளை RBI நீட்டித்துள்ளதாக அறியப்படுகிறது.
போன்பே நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய வசதி கடன் பயன்பாட்டை பெரிதும் அதிகரிக்கும். மேலும் இது ஒரு புரட்சிகரமான முடிவு என்று PhonePe Payments தலைவர் தீப் அகர்வால் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போன்பே செயலியில் இருக்கும் கடன் விருப்பம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது போன்பே பயனர்கள் முதலில் சுயவிவரப் பகுதிக்குச் (profile section) செல்ல வேண்டும். அந்த பக்கத்தில் வங்கி விருப்பத்தைத் தேர்வு செய்யவும். அதன்பின்னர் கிரெடிட் லைன் வசதியுடன் கூடிய வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இணைக்க வேண்டும்.

நீங்கள் இணைத்த பிறகு UPI பின்னை அமைக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும் நீங்கள் கடன் விருப்பத்தைப் பார்ப்பீர்கள். கட்டணப் பக்கத்தில் இதைப் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கர்நாடகா வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான நவி டெக்னாலஜிஸ் UPI சேவையில் இந்த கடன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் உள்ளது.
குறிப்பாக பேடிஎம் செயலியை விட கூகுள் பே மற்றும் போன்பே நிறுவனங்கள் தொடர்ந்து புதிய வசதி மற்றும் சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








