ஒரு வழியாக வேலையை காட்டியது போன்பே: இனிமேல் இதற்கு கட்டணம்.!

|

இந்தியாவில் போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

ற செயலிகள் மொபைல்

அதேபோல் இதுபோன்ற செயலிகள் மொபைல் ரீசார்ஜ்களின் தொந்தரவைக் குறைத்துள்ளன. அதாவது முன்பு மொபைல் பயனர்கள் தங்களுக்கு ரீசார்ஜ் செய்ய கடைக்குச் சென்று டாப்-அப் திட்டங்களை வாங்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது பயனர்களுக்கு எளிதான ரீசார்ஜ் வசதியை வழங்கும் போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற பல செயலிகள் உள்ளன.

JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?JioPhone நெக்ஸ்ட்டில் இப்படியொரு புதுமையான ஓஎஸ் இருக்குதா? நல்ல இருக்கே.! இது என்ன செய்யும் தெரியுமா?

இதுபோன்ற செயலிகள் பயனருக்கு

குறிப்பாக இதுபோன்ற செயலிகள் பயனருக்கு பணம் அனுப்பவும் பெறவும், மொபைல், டி.டி.எச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகளை எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. அதேபோல் இதுபோன்ற செயலிகளில் பணப் பரிவர்த்தனைகள்
மேற்கொள்ளும்போது,கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைப்பதால், தற்போது அதிகளவில் மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

ஸ்மார்ட்டிவினா இப்படி இருக்கனும்- சோனி, சாம்சங் ஸ்மார்ட்டிவிகளுக்கு அட்டகாச தள்ளுபடிகள்: அமேசான் அதிரடி!ஸ்மார்ட்டிவினா இப்படி இருக்கனும்- சோனி, சாம்சங் ஸ்மார்ட்டிவிகளுக்கு அட்டகாச தள்ளுபடிகள்: அமேசான் அதிரடி!

 போன்பே செயலியை இந்தியாவில் அதிக

அதேபோல் போன்பே செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் 50 ரூபாய்க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் செய்பவர்களிடம் இனி செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படும் என்று போன்பே நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடவே இல்ல., தடுப்பூசி போடவே இல்ல., "வெற்றிகரமாக முழுமையானது தடுப்பூசி" என்ற எஸ்எம்எஸ்- அதிர்ச்சி அடைந்த நபர்!

 மூலம் நடைபெறும்

அதாவது யுபிஐ மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகள் பல செயலிகளில் இலவசமாக நடைபெறும் நிலையில், கட்டணம் வசூலிக்க தொடங்கிய முதல் டிஜிட்டல் செயலி இந்த போன்பே தான். குறிப்பாக கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு செயல்முறை கட்டணத்தை மற்ற செயலிகளை போல போன்பே செயலியும் வசூலித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள்: பிஎஸ்என்எல், ஏர்டெல் வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் இதோ!சிறந்த 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள்: பிஎஸ்என்எல், ஏர்டெல் வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் இதோ!

துகுறித்து போன்பே நிறுவனத்தின்

மேலும் இதுகுறித்து போன்பே நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தது என்னவென்றால், 50 ரூபாய்க்கு குறைவான ரீசார்ஜ்களுக்கு கட்டணம் கிடையது. ஆனால் ரூ.50 அல்லது ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100-க்கு மேல் 2 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.அதேபோல் இணைய தளங்களில் கட்டணம் வசூலிக்கும் முதல் நிறுவனம் நாங்கள் கிடையாது. ஏற்கனவே பல நிறுவனங்கள டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளத்தில் சிறிய அளவிலான தொகையை செயல்முறை கட்டணமாக வசூலித்துவருகிறது. நாங்கள் கிரெடிட் கார்ட் மூலம் நடைபெறும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கிறோம் என்று கூறினார்.

'ஏர்டெல் பிளாக்' கீழ் கிடைக்கும் ஏகபோக நன்மைகள்.. பல சேவை ஒரு கட்டணம்.. மலிவான திட்டம் இது தான்..'ஏர்டெல் பிளாக்' கீழ் கிடைக்கும் ஏகபோக நன்மைகள்.. பல சேவை ஒரு கட்டணம்.. மலிவான திட்டம் இது தான்..

 மாதம் வெளியான பெர்ன்ஸ்டீன்

கடந்த ஜூலை மாதம் வெளியான பெர்ன்ஸ்டீன் அறிக்கையின்படி வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்குவதில் போன்பே, கூகுள் பே நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனங்கள் 2.5 முதல் 3 சதவிகிதம் வரை சந்தையில் செலவழித்துள்ளது. ஆனாலும் தற்போது சந்தையில் செலவிடுவதை பேடிஎம் குறைத்து வருகிறது.

அதேபோல் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளில் பிரதானமாக இருப்பது கூகுள்பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவைகள் ஆகும். குறிப்பாக இந்நிறுவனங்கள் வழங்கும் ஒரு சில சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
PhonePe has started charging UPI transactions for mobile recharges: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X