டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு

|

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்காக இந்தியாவில், 'போன்பே' எனும் ஆன்லைன் வாலட் வசதியை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இது அதிக மக்கள் உபயோகிக்கும் ஒரு செயலியாக உருவெடுத்தது. இதுபோன்ற வாலட்டுகளில் பல்வேறு கேஷ்பேக் ஆஃபர்களும் வழங்கப்பட்டு வருவதால் மக்கள் தொடர்ச்சியாக உபயோகித்து வருகின்றனர்.

பிளிப்கார்டில் இருந்து பிரிந்த நிறுவனம்

பிளிப்கார்டில் இருந்து பிரிந்த நிறுவனம்

பிளிப்கார்ட்டின் ஒரு துணை நிறுவனமாக செயல்பட்டு வந்த போன்பே, தனி நிறுவனமாக செயல்பட பிளிப்கார்ட் போர்டு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய நிதிகளை திரட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

தனிநிறுவனமான போன்பே

தனிநிறுவனமான போன்பே

இதன்மூலம், 'போன்பே' தனி நிறுவனமாக செயல்பட தொடங்குகிறது. 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'போன்பே' செயலி, கடந்த 2016ம் ஆண்டு ப்ளிப்கார்ட் வசம் சென்றது குறிப்பிடத்தக்கது.

2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்

பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்ட போன்பே

பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்ட போன்பே

பெங்களூருவைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த செயலி, 2015ஆம் ஆண்டு மீர் நிகாம் மற்றும் ராகுல் சாரி ஆகியோரால் நிறுவப்பட்டது. போன் பே' வந்த பிறகு இதில் உள்ள இ-வாலெட்களை பயன்படுத்தி, ரொக்கமில்லாத பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றோம்.
பானிபூரி கடை முதல் நட்சத்திர விடுதி வரை, இந்த 'போன் பே' இல்லாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு இந்த போன் பே வளர்ந்துள்ளது.

என்ன கையில காசு கொடுக்கிறீங்க.,

என்ன கையில காசு கொடுக்கிறீங்க.,

முதலில் சாப்பிட்டு காசு கொடுக்காவிட்டால்தான் அக்கம்பக்கத்தினர் ஒரு மாதிரி பார்ப்பார்கள். ஆனால் தற்போது ஏதாவது சாப்பிட்டுவிட்டு, பொருள் வாங்கி விட்டு கையில் காசு கொடுத்தாலே ஒருமாதிரிதான் பார்க்கிறார்கள். ஏனென்றால் எவ்வளவு என்று கேட்டவுடன் நமது கை செல்வது மொபைல் போன் ஆன்லைன் பரிவர்த்தனைக்குதான்.

 5 பில்லியன் பரிவர்த்தனை

5 பில்லியன் பரிவர்த்தனை

இந்நிலையில் போன் பே நிறுவனம்ம் வெளியிட்ட அறிக்கையில், பணப்பரிவர்த்தனையில் 5 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கடந்த விட்டோம் என்று தெரிவித்துள்ளது. அதாவது இந்திய பண மதிப்பின்படி 500 கோடி ரூபாய் ஆகும்.

அமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்அமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்

5 மடங்கு முன்னேற்றம்

5 மடங்கு முன்னேற்றம்

கூகுள் பே, பீம் யுபிஐ, பேடீம் போன்ற பல்வேறு செயலிகள் இருந்தாலும், போன்பே தொடர்ந்து பிரதானமாக திகழ்ந்து வருகிறது. இதையடுத்து இந்த ஒரு ஆண்டில் மட்டும் பணப்பரிவர்த்தனை ஐந்து மடங்கு வளர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
PhonePe Crosses 5 Billion Transactions Grows 5X in 1 year

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X